ஸ்ரீ சங்கர ஜயந்தி - காஷ்மீர்

Adi Shankara

பூஜ்யஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தொடர்ச்சியாக 8வது வருஷம் ‘ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் ஜெயந்தி’ மஹோத்ஸவத்தை கொண்டாட 13-04-2018 சனிக்கிழமை காலை 150 பேர் கொண்ட குழு சென்னையில் இருந்து காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்கள். அந்த குழுவில் 31 வைதீகர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அக்னிஹோத்ரிகள் 5 பேர் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஸ்ரீநகரில் ஜேஷ்ட மாதா கோவில் வளாகத்தில் எல்லோரும் தங்கினார்கள். 14.04.2018 தமிழ் வருடப்பிறப்பு நாளன்று காலை 8.00 மணி அளவில் ஸ்ரீ சத்யவாகீஸ்வர கனபாடிகள் மகா சங்கல்பம் செய்து வைத்தார்கள். பிறகு ரிக்ஸம்ஹிதா ஹோமம் நான்கு ரிக் வேதிகளால் ஆரம்பிக்கப்பட்டு தினமும் நடந்து 19ம் தேதி பூர்த்தி அடைந்தது. 14.04.2018 முதல் 20.04.2018 வரை ப்ரதி தினமும் 21 சாமவேதிகளும் 3 யஜ÷ர்வேதிகளும் தினமும் காலை சுமார் 2ணீ மணி நேரம் வேதபாராயணம் செய்தார்கள். சண்டி பாராயணமும் நடந்தது. அக்னிஹோத்ரிகளைக் கொண்டு மூன்று இஷ்டி ஹோமங்கள் நடத்தப்பட்டது உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினர் 16.04.2018 முதல் 19.04.2018 வரை ப்ரதி தினம் திவ்யநாம பஜனையும் 19.04.2018 அன்று ஜேஷ்டமாதா கோவில் வளாகத்தில் சீதாகல்யாணமும் நடத்தினார்கள். ப்ரதி தினமும் ஆதிசங்கரரின் பட ஊர்வலம் ஹோமம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஜேஷ்டமாதா கோவில் வரை சென்று அங்கு அவதாரிகா நடைபெற்றது. அவதாரிகாவின் போது ஸ்ரீமடத்தின் ஸ்வஸ்திவாசனம், தோடகாஷ்டகம், சதுர்வேத பாராயணம், ராமாயண ஸ்லோகங்கள், ப்ரும்ம ஸøத்ரம், மந்த்ரார்த்தம் ùஸளந்தர்ய லஹரி, மூகபஞ்சசதி, திராவிட ஸ÷க்தம், ஸங்கீத உபாஸனை ஆகியவை நடத்தப்பட்டது.

ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் உத்தரவுப்படி வைதீகர்கள் மற்றும் பக்தர்கள் ஆர்மி கேம்ப் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்றது. ஆர்மி அதிகாரிகள் உட்பட ஜவான்கள் அவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆர்மி பெரிய அதிகாரிகளுக்கு ஸ்ரீமடம் சார்பில் மரியாதைகள் செய்யப்பட்டது. அங்கு ஆர்மி கேம்ப் நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ பண்ட்ரேதன் (டஹய்க்ழ்ங்ற்ட்ஹய்) மந்திரில் சிவலிங்கத்திற்கு ஸ்ரீ ருத்ராபிஷேகம் நடைபெற்றது. கீர்பவானி கோவிலிலும் வேதபாராயணம் நடந்தது.

18-04-2018 அக்ஷய த்ருதியை அன்று காலை தம்பதி பூஜை, காஷ்மீர பண்டிட் குடும்ப பெண்களுக்கு சுவாஸினி பூஜை, குழந்தைகளுக்கு கன்யா பூஜை, 50 சுவாஸினிகளுக்கு சுவாஸினி பூஜையும் கோலாகலமாக நடந்தேறியது.

20-04-2018 சங்கர ஜயந்தியன்று காலை 7 மணிக்கு அனைவரும் கிளம்பி “சங்கரா ஹில்ஸ்” மலைக்கு சென்றார்கள். அங்கு பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் தவம் செய்த குகைக்குள் சென்று அவரையும், அதற்கு மேல் உச்சியில் இருந்த சிவபெருமானையும் தரிசித்தார்கள். சங்கரா ஹில்ஸ்þல் கடும் மழை மற்றும் குளிருக்கு நடுவே அக்னிஹோத்ரிகள் இஷ்டி செய்தார்கள். வேத பண்டிதர்கள் வேதபாராயணம் செய்தார்கள். இஷ்டி முடிந்தவுடன் சிவபெருமானுக்கு பால் மற்றும் மற்ற த்ரவ்யங்களாலும் ரிக் சம்ஹிதா ஹோமத்தில் வைத்திருந்த ஒரு கலச ஜலத்தாலும் அபிஷேகங்கள் நடந்தேறியது. பிறகு ஆதிசங்கரர் தவம் செய்த குகைக்குள் ஆதிசங்கரரின் அவதார கட்டம் வாசிக்கப்பட்டது. தீபாராதனைகள் சிறப்பாக நடந்தேறியது. பிறகு அக்னிஹோத்ரிகள் மற்றும் வைதீகர்களுக்கு விரதானமும், த•ணையும் கொடுக்கப்பட்டது. அக்னிஹோத்ரிகளுக்கு ஸ்வர்ண த•ணையும் கொடுக்கப்பட்டது. மலைமேல் பணியில் இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் ஸ்ரீமடம் சார்பாக கௌரவிக்கப் பட்டார்கள்.

தூர்தர்ஷன் டி.வி காரர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்களிடம் ஸ்ரீபெரியவாளின் தொலைநோக்குப் பார்வை பற்றியும் சங்கரஜயந்தி ஏன் காஷ்மீரில் கொண்டாடப் படுகிறது என்பது பற்றி விளக்கப்பட்டது. குறிப்பாக உலக அமைதி, காஷ்மீர் மக்களின் அமைதி, இந்திய ஜவான்களின் úக்ஷமம் ஆகியவை பற்றி ஸ்பெஷலாக எடுத்துரைக்கப் பட்டது. பிறகு ஜ்யேஷ்டமாதா கோவில் சென்று அங்கு பெரியவாளால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஆதிசங்கரர் விக்ரஹத்திற்கு கலச ஜலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஜயந்தி மஹோத்ஸவம் ஒரு திருவிழா போல மிகவும் சிறப்பாக காஷ்மீரத்தில் நடந்தேறியது.

மேலும் செய்திகள்