Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீ சங்கர ஜயந்தி மஹோத்ஸவம்

Adi Shankara

அவதாரபுருஷரான ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாளின் ஜயந்தி மஹோத்ஸவம் விளம்பி வருஷம் சித்திரை மாதம் 3ம் தேதி (16.04.2018) முதல் 7ம் தேதி (20.04.2018) வரை ஐந்து நாட்கள் ஸ்ரீ சங்கர மடம் காஞ்சீபுரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. உற்சவ நாட்களில் ப்ரதி தினம் காலை வேதபாராயணங்களும் மாலை உபன்யாசங்களும் பஜனைகளும் நடத்தப் பட்டது. சங்கர ஜயந்தி தினமான 20.04.2018 வெள்ளிக்கிழமையன்று காலை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஸ்ரீமடத்திலுள்ள ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் சன்னதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார்கள். பின்னர் அவதார கட்டம் வாசிக்கப்பட்டது. அவதாரத்தை முன்னிட்டு வரதானம் செய்யப்பட்டது.



உற்சவ நாட்களில் ப்ரதி தினமும் மாலையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ சங்கரர் உற்சவமூர்த்தி ஊர்வலமாக புறப்பட்டு காஞ்சீபுரத்திலுள்ள முக்யமான புண்ய தீர்த்தக்கரைகளுக்கு சென்று அங்கு ஸ்ரீ சங்கரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஸ்ரீமடம் திரும்பி அங்கு தோடகாஷ்டகம் முதலிய வேத மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.
சங்கர ஜயந்தி தினமான வெள்ளிக்கிழமை (20.04.2018) இரவு 7.00 மணி அளவில் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வர்ண ரதத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாளின் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டு வேதகோஷம், பஜனை, மங்கள வாத்யம் பின்தொடர நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பெருவாரியான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆச்சார்யாள் அருளைப் பெற்றனர். அனைவருக்கும் தினமும் ப்ரஸôத விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் நாடெங்கிலும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் கிளைகளிலும் ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் - ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில் ஸ்ரீ சங்கர ஜயந்தி தினத்தன்று காலை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பகவத்பாதாள் சன்னதி மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஜயந்தி தினம் முதல் மாலை அம்பாள் சந்நிதியில் சௌந்தர்யலஹரி 10 ஸ்லோகங்கள் பாடப்பட்டு 10 நாட்கள் உற்சவம் கொண்டாடப்பட்டது. 10வது நாள் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் நான்கு ராஜவீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். --------------------


ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 100 அடி ஆதிசங்கரர் சிலைக்கும் ஜயந்தியன்று அபிஷேகம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்