திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி, உறந்தை)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி, உறந்தை)

இது திருச்சி முனிஸிபாலிடிலேயே ஒரு பகுதி, டவுன் ஜங்க்ஷன் - மெயின் கார்டுகேட் மார்க்கத்தில் உறையூர் அல்லது நாச்சியார் கோயில் என்ற இடத்தில் இறங்கலாம், திருச்சி ஜங்க்க்ஷனிலிருந்து 2 மைல் தூரம்.

மூலவர் - அழகிய மணவாளப்பெருமாள், நின்ற திருக்கோலம், ப்ரயோக சக்கரம், வடக்கே திருமுகமண்டலம்.

தாயார் - பெருமாள் பக்கத்திலேயே கமலவல்லி நாச்சியார் - வாஸக்ஷ்மி, உறையூர்வல்லி, வீற்றிருந்த திருக்கோலம், (தாயாருக்குத் தனி ஸந்நிதி இல்லை) , வடக்கே திருமுகமண்டலம். திருமணத்தருண திருக்கோலம்.

தீர்த்தம் - கல்யாண தீர்த்தம், சூரியபுஷ்கரிணி, குடமுருட்டிநதி.

விமானம் - கல்யாண விமானம்.

ப்ரதயக்ஷம் - ரவிதர்மா, 33 கோடி தேவர்கள்.

விசேஷங்கள் - சோழமன்னனின் திருமகளான கமலவல்லி நாச்சியார் ஸ்ரீ ரங்கநாதன் மீது காதல் கொண்டு, விரதம் இருக்க, அழகிய மணவாளன் இங்கு வந்து திருமணம் புரிந்து கொண்டதாக ஸ்தல புராணம். திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலமாகிய இங்கு, அவருக்கும் ஒரு தனி ஸந்நிதி இருக்கிறது. பங்குனி உத்தரத்திற்கு முதல் நாள் ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாதர் உத்ஸவர் எழுந்தருளி கல்யாண உத்ஸவம் வருடம் தோறும் நடைபெறுகிறது.

மங்களா சாஸனம்

திருமங்கையாழ்வார் - 1762

குலசேகராழ்வார் - 667

மொத்தம் 2 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஸ்ரீரங்கம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கதம்ப க்ஷேத்ரம்)
Next