திருப்பேர் நகர் (கோவிலடி, அப்பக்குடத்தான்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருப்பேர் நகர் (கோவிலடி, அப்பக்குடத்தான்)

அன்பிலில் (மார்க்கம் 5 காண்க) இருந்து கொள்ளிடத்திற்கு அக்கரையில் 3 மைல் தூரத்தில் உள்ளது. இடையில் கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும். வெள்ளக் காலங்களில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு திருக்காட்டுப்பள்ளி வழியாக கல்லணை செல்லும் பஸ்ஸில் வரலாம். தோஹ§ர் - திருக்காட்டுப்பள்ளி - தஞ்சை பஸ்ஸிலும் வரலாம். "திருப்பேர்நகர்," என்றால் யாருக்கும் தெரியாது, ஆதலால் "கோவிலடி" என்றே சொல்ல வேண்டும். கோவில் ஒரு மேட்டின் மேல் காவேரி கரையின்மேல் இருக்கிறது. கோவிலுக்குமிக அருகாமையிலேயே பஸ் நிற்கிறது.


மூலவர் - அப்பக்குடத்தான், அப்பாலா ரெங்கநாதன், புஜங்கசயனம். அருகில் அமர்ந்திருக்கும் உபமன்யு முனிவருக்கு ஆசி கூறும் பெருமாளின் வலது திருக்கரம் ஒர் அப்பக் குடத்தையும் அனைத்திருக்கிறது. மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - 1. இந்திரா தேவி, 2. கமலவல்லி.

தீர்த்தம் - இந்த்ர தீர்த்தம், கொள்ளிடம்.

விமானம் - இந்த்ர விமானம்.

ப்ரத்யக்ஷம் - உபமன்யு, பராசரர்.

விசேஷங்கள் - இந்த இடத்திலிருந்துதான் நம்மாழ்வார் மோக்ஷத்துக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஐதீஹம். ஆனால் நம்மாழ்வார் இந்த ஊரைக் கடைசியாகப் பாடியிருப்பதால் அவ்வித ஐதீஹம் ஏற்பட்டிருக்கக்கூடும். பெருமாளுக்குத் தினந்தோறும் இரவில், "அரவணை"யாக அப்பம் அமுது செய்விக்கப்படுகிறது.

இந்த ஊரில் ஸெனகர்யம் இல்லை, பக்கத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் தங்கலாம். அல்லது திருச்சியில் தங்கி அப்பக்குடத்தான் க்ஷேத்திரத்திற்கு, பஸ்ஸில் வந்து ஸேவித்து விட்டுத் திரும்பலாம்.

மங்களா சாஸனம் -

பெரியாழ்வார் - 173, 205

திருமங்கையாழ்வார் - 1428-37, 1851, 1857, 2048, 2050, 2059, 2060, 2070, 2673 (70) , 2674 (118)

திருமழிசையாழ்வார் - 2417

நம்மாழ்வார் - 3744 - 54.

மொத்தம் 33 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருஅன்பில் (அன்பில்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கண்டியுர் (த்ரிமூர்த்தி க்ஷேத்திரம்)
Next