திருச்சிறுபுலியூர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருச்சிறுபுலியூர்

மாயவரம் - அறந்தாங்கி ரயில்பாதையில், கொல்லுமாங்குடி ஸ்டேஷனிலிருந்து 2 மைல், மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் கொல்லுமாங்குடி போகலாம். இங்கு வசதிகள் ஒன்றுமில்லை. மாயவரத்தில் தங்கி ஸேவிப்பது நலம்.

மூலவர் - அருள்மாகடல், சலசயனப்பெருமாள், புஜங்கசயனம், தெற்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - க்ருபா ஸமுத்ரப் பெருமாள் (அருள்மாகடல்) .

தாயார் - திருமாமகள் நாச்சியார். உத்ஸவர் - தயாநாயகி.

தீர்த்தம் - மானஸ புஷக்ரிணி, அனந்தஸரஸ்.

விமானம் - நந்தவர்த்தன விமானம்.

ப்ரத்யக்ஷம் - வியாஸர், வியாக்ரபாதர், கங்கைத்தாயாரும் அமர்ந்திருக்கின்றனர். ஐப்பசி மாதம் முழுவதும் இங்கே விழாக்கோலம் பூண்டு இருக்கும். காவேரியும் சமுத்திரமும் சங்கமம் ஆகும் இடத்தில் கடைமுக ஸ்நானம், முடவன் முழுக்கு ஸ்நானம் மிகவும் விசேஷம். இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் இந்த உற்சவத்திற்கு யாத்தீகர்கள் வந்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1328 - 1337, 2674 (126) -11 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
Next