திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)

சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென் கிழக்கில் 7 மைல். வசதிகள் ஒன்றும் கிடையாது.

மூலவர் - ஸ்ரீ நிவாஸன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - அலர்மேல்மங்கை. உத்ஸவர் - பத்மாவதி, பூவார் திருமகள்.

தீர்த்தம் - திருவெள்ளக்குளம்.

ப்ரத்யக்ஷம் - ருத்ரர், ச்வேதராஜன்.

விசேஷம் - இது திருநாங்கூர் திருப்பதிகள் 11ல் ஒன்று. இந்த க்ஷேத்ரத்தை தென்திருபப்தி என்றும் கூறுவர். வேங்கடேசப் பெருமாளுக்கான பிரார்த்தனை இங்கேயே செலுத்திக் கல்யாணங்களையும் இங்கே செய்கின்றனர். சூரியவம்சத்தில் துந்துமாரன் என்ற அரசனுடைய குமாரன் சுவேதன் என்பவனுக்கு 9வது வயதில் ம்ருத்யு உண்டு என்பதை அறிந்து இத் தலத்திற்கு வந்து ச்வேத புஷ்கரிணியில் நீராடி மருத்தாசிரமத்திற்குச் சென்று மருத்தரின் உபதேசம் பெற்று தடாகத்திற்கு தென் கரையில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாக அமர்ந்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபம் செய்ய, பகவான் ப்ரத்யக்ஷமாகி அரசகுமாரனை மார்க்கண்டேயனைப் போல் தீர்க்காயுஸ்ஸை அடையக் கடவாய் என்று வரம் அளித்ததாக ஸ்தலபுராணம்.

இந்த ஸ்தலத்தில் குமுதவல்லித்தாயார் குமுத புஷ்பத்துடன் ஒரு பிராம்மணரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு திருமங்கை ஆழ்வாருக்கும் குமுதவல்லிக்கும் திருமணமானதாக புரணாவரலாறு. இந்தக் கோவிலில் குமுதவல்லி எழுந்தருளி இருக்கிறார்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1308-17 ---- 10 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திரு பார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
Next