அஷட்புயகரம் (காஞ்சீபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

அஷட்புயகரம் (காஞ்சீபுரம்)

காஞ்சியிலேயே வரதராஜர் ஸத்நிதியிலிருந்து 1 மைல் மேற்கே உள்ளது. (மார்க்கம் 43 காண்க) . ஹாட்ஸன்பேட்டை தேரடிக்கு அருகில் உள்ளது.

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள், கஜேந்த்ர வரதன், சக்ரதரர், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - அலர்மேல்மங்கை, பத்மாஸனி.

தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரிணி.

விமானம் - ககநாக்ருதி, (வ்யோமாகார விமானம்) , சக்ராக்ருதி விமானம்.

ப்ரத்யக்ஷம் - கஜேந்திரன்.

விசேஷங்கள் - மூலவருக்கு 8 திருக்கரங்களுடன் 8 ஆயுதங்கள் உள்ளன. வலது நான்கு திருக்கைகளில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவைகளையும் ஏந்தியவண்ணம் ஆச்சரியமாக ஸேவைஸாதிக்கிறார். உத்ஸவருக்கு நான்கு புஜங்களே உள்ளன, கதையும் வேலும் உண்டு. ந்ருஸிம்ஹனைக் கொல்ல வேண்டும் என்று வந்த சரபம், அஷ்டபுஜத்தானை கண்டு பயந்து, விஷ்ணுவை சரணம் அடைந்தது. பகவான் ஆக்ஞைப்படி யாகசாலைக்கு வாயு மூலையில் சரபேசன் என்ற பெயருடன் சிவன் யாகத்தை, காப்பதாக ஐதீஹம். ஒரு யானை, ஸுக்ருத விசேஷத்தினால் அஷ்டபுஜக் குளத்தில் தாமரைப்பூ பறித்து எம்பெருமானை ஆராதித்து வரும்பொழுது ஒரு நாள் யானையை குளத்தில் ஒரு முதலைப் பிடித்துக் கொள்ள, யானை, பகவானை சரணடைய, பகவான் தம் ஸுதர்சனத்தினால் அந்த முதலையைக் கொன்று யானையை (கஜேந்த்ரனை) ரக்ஷித்த ஸ்தலம். ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் மணவாளமாமுனிகளும் மங்களாசாஸனம் செய்த இடம்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1118 - 1127, 2674 (128)

பேயாழ்வார் - 2380

மொத்தம் - 12 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கச்சி - அத்திகரி (காஞ்சீபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருத்தண்கா (தூப்பல், காஞ்சிபுரம்)
Next