திருக்காரகம் (காஞ்சீபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்காரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீயில் உலகளந்த பெருமாள் கோவில் ப்ராகாரத்திலேயே உள்ளது. (மார்க்கம் 43 காண்க) .

மூலவர் - கருணாகரப் பெருமாள் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.

தாயார் - பத்மாமணி நாச்சியார் (ராமாமணி நாச்சியார்) .

தீர்த்தம் - அக்ராய தீர்த்தம்.

விமானம் - வாமன விமானம், ரம்யவிமானம்.

ப்ரத்யக்ஷம் - கார்ஹமஹரிஷி.

குறிப்பு - இந்தத் திவ்ய தேசம் இருந்த இடம், அதன் தீர்த்தம் இருக்கும் இடம்

முதலிய ஒரு செய்தியும் தெரியவில்லை.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 2059 - 1 பாசுரம்.

திருக்கார்வானம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோவில் ப்ராகாரத்திலேயே ஒரு ஸந்நிதியாக உள்ளது. (மார்க்கம் 43 காண்க) .

மூலவர் - கள்வர், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - கமலவல்லி (தாமரையாள்) .

தீர்த்தம் - கெனரீ தடாகம் (தராதர தீர்த்தம்)

விமானம் - புஷ்கல விமானம்.

ப்ரத்யக்ஷம் - கெனரி (பார்வதி)

குறிப்பு - இந்தத் திவ்ய தேசம், தீர்த்தம் - இவை ஏற்கனவே இருந்த இடம் தெரியவில்லை.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 2059 - 1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவெஃகா (காஞ்சிபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)
Next