திருமூழிக்காலம் (மூழிக்களம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

திருமூழிக்காலம் (மூழிக்களம்)

ஆல்வாய் டவுனில் தங்கி அங்கிருந்து பஸ் ஏறி திருமூழிக்களம் வரலாம். சாலையிலிருந்து 1/2 ஃபர்லாங் தூரத்தில் பாரதப்புழை ஆற்றங்கரையில் கோவில் உள்ளது. ஆல்வாயில் தங்காமல் எர்ணாகுளத்திலிருந்தும் பஸ்ஸில் வரலாம். அங்கமாலி ரயில்வேஸ்டேஷனிலிருந்தும் இங்கு பஸ்ஸில் வரலாம். இங்கு வசதிகள் எதுவும் இல்லை.

மூலவர் - திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீ ஸ¨க்திநாதப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - மதுரவேணி நாச்சியார்.

தீர்த்தம் - பெருங்குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு.

விமானம் - ஸெனந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் - ஹாரீதமஹரிஷி.

விசேஷங்கள் - இப்பெருமாளை லக்ஷ்மணன் என்று கூறுகிறார்கள். ஹாரீதமஹரிஷி பல வருஷங்கள் தவமிருந்து பகவான் ப்ரத்யக்ஷமானபோது அவர் வர்ணாச்ரமத் தர்மங்களையும் ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய அனுஷ்டான பிராகாரங்களையும் யோகத்தையும் ப்ரதிபாலிக்கிற ஸம்ஹிதையை - ஸ்ரீ ஸ¨க்தியை - திருமாழியை - இயற்றியபடியால் இந்த ஸ்தலத்திற்கு 'திருமொழிக்களம்' என்று பெயர் வழங்க வேண்டும், பெருமாளுக்கு திருமொழி களத்தான் என்ற திருநாமம் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தபடி பெயர் உண்டாகியதாக புராண வரலாறு.

ராமன் சித்திரக்கூடத்திலிருந்த போது, பரதன் ராமனை திரும்ப அயோத்திக்கு அழைத்துப் போக வந்ததை ஸந்தேகித்து, லக்ஷ்மணன், பரதனைக் கொல்ல முயன்ற பாவத்தைப் போக்க திருமூழிக்களத்தானை அடிபணிந்ததாகவும், அப்போது பரதனே வந்து, இன் சொல்லுடன் ஆனந்த பரவசனாய், லக்ஷ்மணனை ஆலிங்கனம் செய்துகொள்ள, பகவானை இருவரும் துதித்ததாகவும், இன்சொல் விளைந்த ஸ்தானமாகையாலே இதற்குத் 'திருமூழிக்களம்' என்று பெயர் உண்டானதாக ஸ்தல வரலாறு. லக்ஷ்மணன் இவ்விடத்தில் கோபுர ப்ராகாராதிகளை ஜுர்ணோத் தாரணம் செய்ததாக வரலாறு.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1553, 2061, 2674 (129)

நம்மாழ்வார் - 3623 - 33

மொத்தம் 14 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்காட்கரை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவல்லவாழ் (திருவல்லா ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம்)
Next