செஞ்சொற்கவிகாள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

பத்தாம் பத்து

செஞ்சொற்கவிகாள்

மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.

அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.

அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.


எம்பெருமான் தம்மிடத்தில் வைத்திருந்த பெரும்பற்றை ஆழ்வார் பாராட்டுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்

செய்மின் திருமா லிருஞ்சேலை,

வஞ்சக் கள்வன் மாமாயன்

மாயக் கவியாய் வந்து,என்

நெஞ்சு முயிரு முள்கலந்து

நின்றார் அறியா வண்ணம்,என்

நெஞ்சு முயிரும் அவையுண்டு

தானே யாகி நிறைந்தானே.

திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்

3734. தானே யாகி நிறைந்தெல்லா

உலகும் உயிரும் தானேயாய்,

தானே யானென் பானாகித்

தன்னைத் தானே துதித்து,எனக்குத்

தேனே பாலே கன்னலே

அமுதே திருமா லிருஞ்சோலை,

கோனே யாகி நின்றொழிந்தான்

என்னை முற்றும் உயிருண்டே..

ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!

3755. என்னை முற்றும் உயிருண்டென்

மாய ஆக்கை யிதனுள்புக்கு,

என்னை முற்றும் தானேயாய்

நின்ற மாய அம்மான்சேர்,

தென்னன் திருமா லிருஞ்சோலைத்

திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,

இன்னம் போவே னேகொலோ!

என்கொல் அம்மான் திருவருளே?

எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்

3736. நண்ணா அசுரர் நலிவெய்த

நல்ல அமரர் பொலிவெய்த,

எண்ணா தனகள் எண்ணும்நன்

முனிவ ரின்பம் தலைசிறப்ப,

பண்ணார் பாடல் இன்கவிகள்

யானாய்த் தன்னைத் தான்பாடி,

தென்னா வென்னும் என்னம்மான்

திருமா லிருஞ்சோ லையானே.

திருமால் என்னை ஆள்கின்றான்

3738. திருமா லிருஞ்சோ லையானே

ஆகிச் செழுமூ வுலகும்,தன்

ஒருமா வயிற்றி னள்ளேவைத்

தூழி யூழி தலையளிக்கும்,

திருமா லென்னை யாளுமால்

சிவனும் லெய்தி யடிபரவ

அருளை யீந்த அம்மானே.

எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்

3739. 'அருளை ஈயென் அம்மானே!'

என்னும் முக்கண் அம்மானம்,

தெருள்கொள் பிரமன் அம்மானும்

தேவர் கோனும் தேவரும்,

இருள்கள் கடியும் முனிவரும்

ஏத்தும் அம்மான் திருமலை,

மருள்கள் கடியும் மணிமலை

திருமா லிருஞ்சோ லைமலையே.

என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்

3740. திருமா லிருஞ்சோ லைமலையே

திருப்பாற் கடலே என்தலையே

திருமால் வைகுந் தமேதண்

திருவேங் கடமே எனதுடலே,

அருமா மாயத் தெனதுயிரே

மனமே வாக்கே கருமமே,

ஒருமா நொடியும் பிரியானென்

ஊழி முதல்வன் ஒருவனே.

மனமே!திருமாலை விடாமல் பிடி

3741. ஊழி முதல்வன் ஒருவனே

என்னும் ஒருவன் உலகெல்லாம்,

ஊழி தோறும் தன்னுள்ளே

படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.

ஆழி வண்ணன் என்னம்மான்

வாழி!மனமே கைவிடேல்

உடலும் உயிரும் மங்கவொட்டே

நானேயாகி என்னை அளித்தவன் திருமால்

3742. மங்க வொட்டுன் மாமாயை

திருமா லிருஞ்சோ லைமேய,

நங்கள் கோனே!யானே c

யாகி யென்னை யளித்தானே,

பொங்கைம் புலனும் பொறியைந்தும்

கருமேந் திரியும் ஐம்பூதம்,

இங்கிவ் வுயிரேய் பிரகிருதி

மானாங் கார மனங்களே.

இப்பாடல்கள் திருமாலிருஞ்சோலைமலைக்கே அர்ப்பணம்

3743. மானாங் கார மனங்கெட

ஐவர் வன்கை யர்மங்க,

தானாங் கார மாய்ப்புக்குத்

தானே தானே யானானை,

தேனாங் காரப பொழில்குருகூர்ச்

சடகோ பன்சொல் லாயிரத்துள்,

மானாங் காரத் திவைபத்தும்

திருமா லிருஞ்சோ லைமலைக்கே.

நேரிசை வெண்பா

மாறனே நம் செல்வம்

செஞ்சொற் பரன்றனது சீராரு மேனிதனில்,

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனில், - விஞ்சுதலைக்

கண்டவனைக் காற்கட்டிக் கைவிடுவித் துக்கொண்ட,

திண்டிறல்மா றன்நம் திரு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அருள் பெறுவார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருமாலிருஞ்சோலை மலை
Next