உபயோகமில்லாததன் உபயோகம் * : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அர்த்த சாஸ்திரம் இருக்கிறது. அது ஸமூஹத்தில் நாம் இருக்க வேண்டிய ஸ்தானத்தையும், பழக வேண்டிய முறைகளையும் தெரிவித்து daily life -க்கு (அன்றாட வாழ்க்கைக்கு) உபகாரம் செய்கிறது. வயிற்றைக் கழுவிக் கொள்ள வழிகாட்டுவதும் அதுதான். க்ருஷி சாஸ்த்ரம் என்பதாக உழவுத் தொழிலைச் சொல்லும் ஒன்று இருக்கிறது. பாக சாஸ்த்ரம் என்று சமையற் கலையைச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு சாஸ்த்ரம் இருக்கிறது. இவற்றால் நம் வயிறு நிரம்புகிறது. பகையைத் தீர்த்துக் கொள்ள யுத்த சாஸ்த்ரமான தநுர்வேதம் இருக்கிறது. சரீரத்துக்கு வரும் கஷ்டத்தை நிவ்ருத்தி செய்துகொள்ள ஆயுர்வேதம் உபகரிக்கிறது. இப்படியெல்லாம் வயிற்றுக்கும் ஆயுர்வேதம் உபகரிக்கிறது. இப்படியெல்லாம் வயிற்றுக்கும் உபயோகமில்லாமல், பகை, கஷ்டம் முதலியவற்றை நிவ்ருத்தி செய்து கொள்ளவும் ப்ரயோஜனப்படாமல் இருக்கிற ஒரு சாஸ்த்ரந்தான் இப்போது ஸப்ஜெக்டாக எடுத்துக் கொண்டிருக்கிற காந்தர்வ வேதம்.

நன்றாயிருக்கிறதல்லவா ‘இன்ட்ரொடக்ஷன்’ (விஷய அறிமுகம்) ?

(இப்படிக் கேட்டபின் ஸ்ரீ பெரியவர்கள் சிறிது பொழுது பேசாமலே உட்கார்ந்திருக்கிறார்கள். பிறகு சிரித்துக் கொண்டு தொடங்குகிறார்கள்:)

ஒரு ‘யுடிலிடி’யும் இல்லாத ஒன்றைத்தான விஷமாய் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் சொல்லிவிட்டு, உங்கள் reaction -காகத்தான் கொஞ்ச நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். இப்படி நான் சொன்ன விட்டும், ‘இந்த மாதிரி உதவாக்கரை ஸமாசாரத்தைச் சொல்லவா உங்கள் பொழுதை வீணாக்குகிறீர்கள்? இதற்கு நாங்களும் எங்கள் ‘டய’த்தை ‘வேஸ்ட்’செய்து கொண்டு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கணுமா?’ என்று உங்களில் யாரும் கேட்கவில்லை; எழுந்திருந்து போகவுமில்லை. ரொம்பவும் ஆர்வத்தோடு, ‘அப்படிப்பட்ட யூஸ்லெஸ் ஸமாசாரம் என்னதான் தெரிந்து கொள்ளலாமே?’ என்று நீங்கள் உட்கார்ந்திருப்பது உங்கள் முகத்திலிருந்தே தெரிகிறது. ‘யூஸ்லெஸ்ஸான ஒன்றுக்கும் ஒரு சாஸ்த்ரம், அதைப்பற்றிச் சொல்லப் போகிறார்’என்பதாலேயே, ரொம்ப இன்டரெஸ்டிங்காகப் பொழுது போகும் என்று ஆவலாய் உட்கார்ந்திருக்கிறீர்கள். என்னைக் கேள்விக் கேட்டோ, எழுந்திருந்து போயோ உங்களுடைய உண்மையான ரியாக்ஷனைக் காட்டினால் அது மரியாதைக் குறைச்சலாகுமே என்பதற்காக நீங்கள் உட்கார்ந்திருக்கவில்லையென்று நன்றாகத் தெரிகிறது. அப்போது பல்லைக் கடித்துக்கொண்டு வேண்டா வெறுப்பாய் உட்கார்ந்திருப்பீர்கள். இப்போதோ உங்கள் முகத்திலேயே ‘க்யூரியாஸிடி’ எழுதி ஒட்டியிருக்கிறது.

இதிலேதான் ‘காந்தர்வ வேதம்’ என்ற யுடிலிடி இல்லாத விஷயம் எப்படி ஒரு சாஸ்த்ரமாக, உபவேதமென்றே பெத்தப் பெயரிருப்பதாக ஏற்பட முடியும் என்பதற்கு ஆன்ஸர் இருக்கிறது.

‘யுடிலிடி’ என்பதாக நடைமுறை வாழ்க்கையில் ப்ரயோஜனம் உள்ளதாக இல்லாமலிருப்பதற்கும் மநுஷ்யனைக் கவர்கிற ஏதோ ஒன்று இருப்பது ‘இது உபயோகமில்லாத ஸப்ஜெக்ட்’ என்று நான் சொன்ன பிற்பாடும் நீங்கள் இதில் ஆர்வம் காட்டுவதிலிருந்தே ‘ப்ரூவ்’ ஆகிறது. இதைப்பற்றிக் கேட்பதால் உங்களுக்குப் பசி ரொம்பப் போகிறதில்லை, ரூபாய் வரப்போகிறதில்லை, பகையோ வியாதியோ தீரப்போகிறதில்லை. ஆனாலும் “ஸ்வாரஸ்யமாகப் பொழுது போகும்” என்பதற்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இதிலிருந்து ‘யுடிலிடி’ இல்லாததிருந்தும் மநுஷ்யனின் அறிவும் மனஸும் எதையோ ஒன்றைப் பெற்று ஒரு நிறைவை, ஸந்தோஷத்தை அடைய முடியுமென்று தெரிகிறது. ப்ரத்யக்ஷமாக இதோ இத்தனை பேர், இந்த ராத்திரி வேளையில் எத்தனையோ கார்யத்தை விட்டுவிட்டு இதைப் பற்றி அறிகிறதற்காக உட்கார்ந்திருப்பதில் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

இரண்டாவது, இன்னொன்று தெரிவது, ஸ்வாரஸ்யமான பொழுதுபோக்கு மநுஷ்யனுக்கு அவச்யமாக, அத்யாவச்யமாக இருக்கிறதென்ற உண்மை, ‘இது பணத்தைக் கொடுக்க வேண்டாம், வயிற்றை ரொப்ப வேண்டாம்;பொழுபோக உபயோகமாகிறதோ இல்லையோ? அதுபோதும்’என்ற எண்ணம் ஏற்படுவது இதனால்தான்.

இப்படிப் பொழுதுபோக்காக, மனஸுக்கு ஒரு நிறைவையும் உத்ஸாஹத்தையும் தருவதாக உள்ள ஸங்கீதத்தைத்தான் காந்தர்வவேதம் என்று பேர் கொடுத்துத் தந்திருக்கிறார்கள்.


*“தெய்வத்தின் குரல்”முதற்பகுதியில் “பண்பாடு” எனும் பிரிவிலுள்ள “ஸங்கீத லக்ஷ்யம் சாந்தமே“, “இசை வழியே ஈச்வராநுபவம்“, “காந்தர்வ வேதம்” என்னும் உரைகளும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தர்மயுத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஸங்கீதம், நாட்டியம், நாடகம்
Next