திவ்ய ஸ்மரணைக்குப் பின் திவஸம் ஏன்? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒரு ஜீவன் இருக்கும்போதும், இறக்கும்போதும், இறந்தபின்பும் செய்யவேண்டிய தொண்டுகளை நிறையச் சொல்லிக்கொண்டே போயிருக்கிறேன். ‘இறக்கும்போது நாம் செய்கிற பணியினால் அந்த ஜீவன் பகவத் ஸ்மரணையோடு உயிரை விட்டால் அது பகவானை அடைந்துவிடுமல்லவா? இதற்கப்புறம் அதற்கு இறந்தபின் செய்யவேண்டிய ஸம்ஸ்காரம், திவஸம், திங்கள் எல்லாம் எதற்குச் செய்யவேண்டும்?’ என்று கேட்டுவிடக்கூடாது. ஏனென்றால் நமக்குத் தெரிவது அந்த ஜீவனின் அந்திம காலத்தில் அது பகவானை நினைக்கும்படியான முயற்சியை நாம் பண்ணுகிறோம் என்பதுதான். அந்த முயற்சி எவ்வளவு பலித்தது என்பது நமக்குத் தீர்மானமாகத் தெரியாதது. நாம் கங்கா தீர்த்தம், விபூதி, துளஸி கொடுத்து நாமோச்சாரணம் பண்ணுவதை அந்த ஜீவன் எந்த அளவுக்கு மனஸுக்குள் வாங்கிக்கொண்டது என்பது நமக்குத் தெரியாது. அது பகவத் ஸ்மரணையோடுதான் உயிரை விட்டதா என்பது நமக்குத் தெரியாத விஷயம். ஆனதால், அது பகவானிடந்தான் போய்விட்டது என்று நாமாகத் தீர்மானம் பண்ணிக்கொண்டு அபரகார்யம், ச்ராத்தம் முதலானவைகளை நிறுத்திவிடக்கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is செய்யவேண்டிய பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சரீர-சித்த பரிசுத்தி
Next