ஆறு தாயார்க்காரர் ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இவர் ‘த்வைமாதுரர்’ என்றால் தம்பியான குமார ஸ்வாமிக்கோ ‘ஷாண்மாதுரர்’ என்று பெயர். அதாவது அவருக்கு ஆறு தாயார்கள். இந்த ஆறில் அம்பாள், கங்கா தேவி இருவருமே சேர்த்தி இல்லை! க்ருத்திகா நக்ஷத்ர தேவிகளான – ‘கார்த்திகைப் பெண்டிர்’ என்று சொல்கிற – ஆறு பேர்தான் ஸுப்ரஹ்மண்யருடைய ஷண்மாதாக்கள். அவர் உத்பவித்தவுடன் இவர்களே அவருக்கு ஸ்தன்ய பானம் பண்ணுவித்ததால் அவர்களைத் தாயார்களாகக் கொண்டார். க்ருத்திகா தேவதைகளின் புத்ரரானதால்தான் அவருக்குக் கார்த்திகேயர் என்று பெயர் வந்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இரண்டு தாயார்க்காரர்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஐயப்பனின் தாயாரைப் பற்றிய பிரச்னை!   அக்கால வழிபாட்டு முறைகள்
Next