மும்மூர்த்தியரை மூலப்பொருளாக அல்லாமல்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

எல்லாருக்கும் தெரிந்த, அல்லது தெரிந்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற, ச்லோகம்;

குருர் – ப்ரஹ்மா குருர் – விஷ்ணு: குருர் – தேவோ மஹேச்வர: |

குருஸ் ஸாக்ஷாத் பரம் – ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||*

‘குருதான் மும்மூர்த்திகளும், பரம்பொருளும் அவர் தான். அப்படிப்பட்ட அவருக்கு நமஸ்காரம்’ என்று ஸ்லோகம் சொல்கிறது.

மும்மூர்த்திகளின் பெயரைத் தனித்தனியாக ப்ரம்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லிவிட்டு, அப்புறம் பரப்ரஹ்மத்தைச் சொல்லியிருப்பதால் இந்த ச்லோகப்படி ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று மூன்று பேரில் எவருக்கும் பரப் பிரம்மம் என்றும், முழுமுதற் கடவுள் என்றும் சொல்லப்படும் ஸ்தானம் தரப்படவில்லை என்று தோன்றுகிறது. அவர்களை ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரகர்த்தாக்களாக மட்டுமே வைத்திருக்கிறதென்று தெரிகிறது. அதாவது படைப்பது, காப்பாற்றுவது, ஸம்ஹாரம் பண்ணுவது என்ற ஒவ்வொரு காரியத்தை மட்டுமே அவர்களில் ஒவ்வொருவரும் செய்வதாக ஆகிறதே தவிர, ஸர்வ கார்ய காரணங்களுக்கும் ஆதி காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருக்கப்பட்ட மூலப் பொருளாக, பரப்ரஹ்மமாக, முழுமுதற் கடவுளாக அவர்களைச் சொல்லவில்லை என்று தேன்றுகிறது. இல்லாவிட்டால் மூன்று பேரையும் சொன்னவிட்டுத் தனியாக “குருஸ் – ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம” என்று சொல்வானேன்?


*இச்சுலோக விளக்கம் “தெய்வத்தின் குரல்”: இரண்டாம் பகுதியில் “குரு பக்தி” என்ற கட்டுரையிலும் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குருமுகமாக அறிவதன் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பண்டிகை இல்லாத கடவுள்
Next