எதற்காக நமஸ்காரம்? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

த்ரிமூர்த்திகளாகவும் அவர்களுக்கும் மூலப்பொருளான பரம்பொருளாகவும் குரு இருப்பதால் அவருக்கு நமஸ்காரம் பண்ணவேண்டுமென்றால், வேடிக்கையாக, “ஏன்? எதற்காக?” என்று கேட்கத்தோன்றுகிறது! வேடிக்கை என்றால் வெறும் தமாஷ் இல்லை. வம்பு மாதிரி, வாதம் மாதிரி. “த்ரிமூர்த்தி, பரப்ரஹ்மம் ஆகியனவாக இருந்து விட்டுப் போகட்டும், அதற்காக ஏன் ஐயா நமஸ்காரம் பண்ண வேண்டும்?” என்று கேட்கத் தோன்றுகிறது. வேடிக்கை, வாதம் இரண்டும் கலந்து!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரவே நம:
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  முத்தொழில் புரிபவர் என்பதற்காக வழிபாடில்லை
Next