பஞ்சாங்க நமஸ்காரம்: தாய்மையின் பெருமை உங்களுக்கே தெரியும் ஸ்த்ரீகள் இப்படிப் பண்ணுவதில்லை என்று அவ

பஞ்சாங்க நமஸ்காரம்: தாய்மையின் பெருமை

உங்களுக்கே தெரியும். ஸ்த்ரீகள் இப்படிப் பண்ணுவதில்லை என்று. அவர்கள் பண்ணுகிறதற்குப் பஞ்சாங்க நமஸ்காரம்’ என்று பெயர். பஞ்சாங்கம் என்றால் ஜோஸ்யர் நாள், நக்ஷத்ரம் பார்க்கிற புஸ்தகமில்லை! புஸ்தகப் பஞ்சாங்கத்தில் திதி, வாரம், நக்ஷத்ரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள். நமஸ்கார விஷயமாகப் பஞ்சாங்கம் என்றால் ஐந்து அவயவங்கள். உடம்பை வளைத்து ஸ்த்ரீகள் செய்யும் நமஸ்காரத்தில் அப்படி ஐந்து அவயவங்கள்தான் ப்ரயோஜனமாகின்றன.

உசத்தி மனப்பான்மையை உதறி எறிந்து விட்டு மட்டத்தில் மட்டமாக நிலமட்டத்தோடு கிடக்க வேண்டும் என்று நம் சாஸ்த்ரகாரகர்கள் விதி செய்தபோது கூட ஸ்த்ரீகளிடம் அம்பாளம்சமாக உள்ள மாத்ருத்வத்தை ஒருகாலும் மட்டப்படுத்தப்படாது என்று நினைத்தார்கள். அதனால், ஒரு ஜீவப் பிண்டத்தை கர்ப்பமாக ரக்ஷித்து, அப்புறம் அது ஜனித்த பிற்பாடும் அதற்கு ஆஹாரத்தைப் படைத்து ஊட்டுகிற சரீர பாகம் மண்ணிலே படக்கூடாது என்று வைத்தார்கள். அதனாலேயே அஷ்டாங்கம் பஞ்சாங்கமாயிற்று.

ஸ்த்ரீகள் வளைந்து கொடுக்கும் குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும் அந்த நமஸ்காரமே ரூபகமாக இருக்கிறது.

ஸாஷ்டாங்கமாக இல்லாமல் இப்படி உடம்பை குறுக்கிக் கொண்டு பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணுவதிலேயே ஒரு அடக்கமும் பிரதிபலிப்பதையும் கவனிக்கணும்.