ஸ்ரீ மீனாக்ஷி ஸ்தோத்ரம் 1 ஸ்ரீவித்யே சிவவாயபாக நிலயே ஸ்ரீ ராஜராஜார்சிதே ஸ்ரீநாதாதி குருஸ்வரூப விபவே சிந்தாமணீபீடிகே I ஸ்ரீவாணீகிரிஜா நுதாங்க்ரிகமலே ஸ்

ஸ்ரீ மீனாக்ஷி ஸ்தோத்ரம்

1.ஸ்ரீவித்யே சிவவாயபாக நிலயே ஸ்ரீ ராஜராஜார்சிதே

ஸ்ரீநாதாதி குருஸ்வரூப விபவே சிந்தாமணீபீடிகே I

ஸ்ரீவாணீகிரிஜா நுதாங்க்ரிகமலே ஸ்ரீ சாம்பவீ ஸ்ரீசிவே

மத்யாஹ்நே மலயத்வஜாதிபஸுதே மாம் பாஹி மீனாம்பிகே II

ஸ்ரீ வித்யையாகவும், சிவனின் இடது பாகத்தில் இருப்பவளும், குபேரனால் பூஜிக்கப்பட்டவளும், ஸ்ரீ நாதர் முதலிய குருவடிவிலே மிளிரும் பெருமை கொண்டவளும், சிந்தாமணி பீடத்தில் இருப்பவளும், ஸ்ரீ ஸரஸ்வதீ, துர்கை தேவியரால் பூஜிக்கப்பட்டவளும், மலயத்வஜன் மகளுமாகிய மீனாம்பிகையே என்னை காத்தருள்வாயே!

2.சர்கஸ்தேsபலே சராசரஜகந்நாதே ஜகத்பூஜியே

ஆர்தாலீவரதே நதாபயகரே வக்ஷே£ஜபாரான்விதே I

வித்யே வேதகலாப மௌலி விதிதே வித்யுல்லதாவிக்ரஹே

மாத:பூர்ணஸுதாரஸார்த்ரஹ்ருதயே மாம் பாஹி மீனாம்பிகே II

தாயே, அம்ருத ரஸம் நிறைந்து நெகிழ்ந்த ஹ்ருதயமுள்ள, மீனாம்பிரே. என்னை காப்பாய். c ஸ்ரீசக்ரத்தில் ஸ்திரமாய் இருப்பவள். சராசர ஜகத்துக்கு நீயே தலைவி!உலகமனைத்தும் உன்னை பூஜிக்கிறது. எளியோரை வரமளித்தும், வணங்கியவரை தேற்றியும், திரண்ட மார்பகங்களுடன் காட்சியளிக்கிறாய். c வித்யாரூபிணி. உபநிஷத் பொருளாய், மின்னலேயுருவாய் விளங்குகிறாய்.

3.கோடீராங்கத ரத்னகுண்டலதரே கோதண்ட பாணாஞ்சிதே

கோகாகார குசத்வயோபரி லஸத் ப்ராலம்பி ஹாராஞ்சிதே I

சிஞ்ஜந்நூபுர பாதஸாரஸ மணி ஸ்ரீ பாதுகாலங்க்ருதே

மத்தாரித்ர்ய புஜங்க காருடககே மாம் பாஹி மீனாம்பிகே II

கிரீடம், தோள்வாளை, ரத்ன குண்டலங்களை தரித்தவளும், கோதண்டம், பாணம், இவற்றை கையில் ஏந்தியவளும் சக்ரவாகம் போன்ற மார்பங்களில் மிளிரும் நீண்ட ஹாரங்களையுடையவளும், ஒலிக்கும் காற்சதங்கையும், அழகிய பாதுகைகளும் அழகு சேர்க்க, என் ஏழ்மையாகிய பாம்பிற்கு கருடனமாயிருப்பவளுமான ஸ்ரீ மீனாக்ஷி தேவியே. என்னைக் காப்பாயாக.

4.ப்ரஹ்மேசாச்யுத கீயமானசரிதே ப்ரேதாஸனாந்த:ஸ்திதே

பாசோதங்குச சாபபாணகலிதே பாலேந்து சூடாஞ்சிதே I

பாலே பாலகுரங்கலோல நயனே பாலார்ககோட்யு¢வலே

முத்ரா ராதிததேவதே முனிநுதே மாம் பாஹி மீனாம்பிகே II

ப்ரம்மா, பரமேச்வரன், விஷ்ணு ஆகியோர் போற்றிப்பாடும் சரிதம் உடையவளே. ப்ரேதாஸனத்தில் வீற்றிருப்பவளே. பாசம், அங்குசம், வில், பாணம் இவற்றை வைத்திருப்பவளே. இளம் சந்திரனை அணிந்தவளே, மான்குட்டியின் மிரண்ட கண்கள் போன்ற கண்களையுடையவளே, பாலசூர்யனையத்து பிரகாசிப்பவளே. முத்திரைகளால் ஆராதிக்கப்பட்டவளே. முனிவர்கள் ஸ்தோத்திரம் செய்யும் மீனாம்பிகையே என்னை காத்தருள்!.

5.கந்தர்வாமரயக்ஷ பந்நகநுதே கங்காதராலிங்கிதே

காயத்ரீகருடாஸனே கமலஜே ஸுச்யாமலே ஸுஸ்திதே I

காதீதே கலதாரு பாவகசிகே கத்யோதகோடயுஜ்வலே

மந்த்ரா ராதிததேவதே முனிமுதே மாம் பாஹி மீனாம்பிகே II

கந்தர்வர்கள், தேவர்கள், யக்ஷர்கள், நாகங்கள் ஆகியோரால் போற்றப்பட்டவளே, பரமேச்வரனால் அணையப்பட்டவளே. காயத்ரீ போன்று கருடாஸனம் கொண்டவளே, தாமரையில் தோன்றி நன்கு அமர்ந்த ச்யாமலையே. ஆகாயம் கடந்தவளே. அக்னிஜ்வாலையாக இருப்பவளே, ஆயிரமாயிரம் மின்மினி பூச்சி போன்று பிரகாசிப்பவளே, மந்திரங்களால் முனிவர் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளுமான மீனாம்பிகையே என்னை காப்பாய்!

6.நாதே நாரததும்புராத்யவிநுதே நாதாந்த நாதாத்மிகே

நித்யே நீலலதாத்மிகே நிருபமே நீவாரசூகோபமே I

காந்தே காமகலே கதம்ப நிலயே காமேச்வராங்கஸ்திதே

மத்வித்யே மதபீஷ்டகல்பலதிகே மாம் பாஹி மீனாம்பிகே II

நாதஸ்வரூபிணியாகவும், நாரதர், தும்புரு முதலியோரால் வணங்கப்பட்டவளாயும், நாதமுடிவில் நாதமாய் இருப்பவளும், நித்யமாகவும், நீலக் கொடியாயிருப்பவளும், நிகரற்றவளாயும், நீவாரதான்யத்தின் முனையாயிருப்பவளும், அழகிய காமகலையாய் கதம்ப மரத்தடியில் காமேச்வரனின் மடியில் தவழ்பவளாயும், எனது வித்யையாய் எனது விருப்பங்களை நிறைவேற்றும் கல்பகமாயுமிருக்கிற ஹே மீனாம்பிகே என்னை காப்பாற்றிவிடு.

7.வீணா நாத நிமீலிதார்த நயனே விஸ்ரஸ்த சூளீபரே

தாம்பீலாருண பல்லவாதரயுதே தாடங்க ஹாரான்விதே I

ச்யாமே சந்த்ர கலாவதம்ஸ கலிதே கஸ்தூரிகாபாலிகே

பூர்ணே பூர்ண கலாபிராம வதனே மாம் பாஹி மீனாம்பிகே II

வீணை நாதத்தில் பகுதி மூடிய கண்களையுடையவளே, சற்றே அவிழ்ந்த தலைமுடியையுடையவளே, தாம்பூலத்தால் துளிர்போல் சிவந்த உதடு உடையவளே!

காதோலை, ஹாரம் அணிந்தவளே!கருநீலமானவளே!பூர்ணசந்திரன் போன்ற அழகிய முகமுள்ளவளே மீனாம்பிகையே!என்னை காப்பாயாக!

8.சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ

நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ

தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ

ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மீனாம்பிகே II

சப்தபிரம்மாயிருப்பவளும், சராசரமேயுருவானவளும், ஒளிமயமாயிருப்பவளும், வாக்ஸ்வரூபிணியாயும், சாச்வத ஆனந்தமயமாயிருப்பவளும், மாசற்ற தத்வ ஜ்ஞானமாயிருப்பவளும், தத்வம் கடந்து, பரத்தைக் கடந்த நிலையிலிருப்பவளும், மாயா லக்ஷ்மீ ரூபிணியாயும், எல்லா ஐச்வர்யரூபிணியாயும், ஸதாசிவமயமாகவும் திகழும் ஹே மீனாம்பிகே என்னை காப்பாயாக!

மீனாக்ஷி ஸ்தோத்ரம் முற்றிற்று.