ப்ராத : ஸ்மரண ஸ்தோத்திரம் 1 ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம் ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்! ய:ஸ்வப்னஜாகர ஸுஷ§ப்தமவைதி நித்யம்

ப்ராத : ஸ்மரண ஸ்தோத்திரம்

1.ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸமஸ்புரதாத்மதத்வம்

ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்!

ய:ஸ்வப்னஜாகர ஸுஷ§ப்தமவைதி நித்யம்

தத்ப்ரஹ்ம நிஷ்கலமஹம் நச பூதஸங்க: !!

ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும் ஆத்மதத்வத்தை அதிகாலை நான் ஸ்மரிக்கிறேன்.

அந்த ஆத்மதத்வம் ஸத்-சித்-ஆனந்தமானது. பரமஹம்ஸ வழியில் இருப்பது. துரீயமானது.

2.ப்ராதர்பஜாமி மனஸாம் வசஸாமகம்யம்

வாசோ விபாந்தி நிகிலா யதனுக்ரஹேண!

யம் நேதி நேதிவாஸனை:நிகமா அவோசன்

தம் தேவதேவம் அஜமச்யுதமாஹ§ரக்ர்யம்!!

வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத அந்த தேவதேவனை காலையில் சேவிக்கிறேன். அவர் பிறவி-இறப்பு இல்லாத முதல்வராகவும், இது இல்லை-இதுவுமில்லை என்றும் வேதங்களில் கூறப்படுபவராக உள்ளார். அவர் அநுக்ரஹத்தால்தான் எல்லா மொழிகளும் விளங்குகின்றன.

3. ப்ராதர்நமாமி தமஸபரமர்கவர்ணம்

பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்!

யஸ்மின் இதம் ஜகதசேஷ மசேஷ மூர்த்தௌ

ரஜ்வாம் புஜங்கம் இவ ப்ரதிபாஸிதம் வை !!

அஜ்ஞான இருளுக்கு அப்பால் சூர்ய ப்ரகாசம் போல் இருப்பதும், பூர்ணமாகவும், ஸநாதனம் என்ற சொல்லிற்கிடமாயும், புருஷோத்தமன் என்ற பெயருள்ளதாயுமுள்ள அந்த தெய்வத்தை வணங்குகின்றேன். அதில்-சராசர மூர்த்தியாயுள்ள அதில் இந்த உலகம் முழுதும், கயிற்றில் ஸர்ப்பம் போல தோற்றமளிப்பதாக உள்ளது.

4.ச்லோதத்ரயமிதம் புண்யம் லோகத்ரய விபூஷணம்!

ப்ராத:காலே படேத்யஸ்து ஸகச்சேத் பரமம் பதம் !!

அதிகாலையில் இந்த மூனறு ச்லோகங்களை படிப்பவர் காலகிரமத்தில் மோக்ஷபதவியையடைவர். ஏனெனில் இவை புண்யமானவை. மூன்று உலகத்திற்கும் சிறப்பானவை.

ப்ராத:ஸ்மரண ஸ்தோத்திரம் முற்றிற்று.