த்வாதஸ லிங்கஸ்தோத்ரம் 1 ஸெளராஷ்ட்ர தேசே வஸுதாவகாசே ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்! பக்திப்ரதானாய க்ருதாவதாரம் தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே !! பூம

த்வாதஸ லிங்கஸ்தோத்ரம்

1.ஸெளராஷ்ட்ர தேசே வஸுதாவகாசே

ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்!

பக்திப்ரதானாய க்ருதாவதாரம்

தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே !!

பூமியின் துண்டுபரப்பான ஸெளராஷ்டிரத்தில் மக்களுக்கு பக்தியை தோற்றுவிக்க ஜ்யோதிரூபமாய் தோன்றி சந்திரக்கலையுடன் விளங்கும் அந்த சோமநாதரை சரணடைகிறேன்.

2.ஸ்ரீசைவச்ருங்கே விவிதப்ரஸங்கே

சேஷாத்ரிச்ருங்கேsபி ஸதா வஸந்தம் !

தமர்ஜுனம் மல்லிகபூர்வ மேநம்

நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும் !!

பற்பல தொடர்களைக் கொண்ட ஸ்ரீசைலம், அல்லது சேஷமலையின் உச்சியில் எப்பொழுதும் குடி கொண்ட, ஸம்ஸாரக்கடலைக் கடக்கப்பாலமாக அமைந்த அந்த ஸ்ரீமல்லிகார்ஜுனலிங்கத்தை நமஸ்கரிக்கிறேன்.

3.அவந்திகாயாம் விஹிதாவதாரம்

முக்திப்ரதானாய ச ஸஜ்ஜநானாம் !

அகாலம்ருத்யோ:பரிரக்ஷணார்த்ம்

வந்தே மஹாகால மஹம் ஸுரேசம்!!

ஸத் ஜனங்களை கடைத்தேற வைக்க அவந்திநாட்டில் தோன்றிய மஹாகால லிங்கத்தை, அகால மரணத்தைப் போக்க வேண்டி நமஸ்கரிக்கிறேன்.

4.காவேரிகா நர்மதயோ:பவித்ரே

ஸமாகமே ஸத்ஜனதாரணாய !

ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்

ஒங்காரமீசம் சிவமேகமீடே !!

காவேரி, நர்மதை ஆகிய நதிகளின் புண்யமான கூடல் க்ஷேத்திரத்தில், ஸத்ஜனங்களைத் கடைத்தேருவிக்க, எப்பொழுது மாந்தாத்ருபுரம் என்ற ஒங்காரேச்வர் என்ற இடத்தில் விளங்கிவரும் ஒங்கார - ஈச்வர லிங்கத்தை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

5.பூர்வோத்தரே பாரலிகாபிதானே

ஸதாசிவம் தம் கிரிஜாஸமேதம் !

ஸுராஸுராராதிதபாத பத்மம்

ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் ஸ்மராமி !!

பாரதத்தின் வடகிழக்கில் பறளி க்ஷேத்திரத்தில் ஸ்ரீகிரிஜா ஸமேதரான வைத்யநாதேச்வரலிங்கத்தை- தேவாஸுரர்களால் போற்றி பூஜிக்கப்பட்ட லிங்கத்தை எப்பொழுதும் தியானிக்கிறேன்.

6.ஆமர்தஸம்ஞே நகரே ச ரம்யே

விபூஷிதாங்கம் விவிதை:ச போகை:

ஸத்புக்தி முக்திப்ரத மீசமேகம்

ஸ்ரீநாக நாதம் சரணம் ப்ரபத்யே !!

ஆமர்தம் என்ற அழகான ஊரில் பலவித ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், நல்லோருக்கு நல்வாழ்க்கை, மோக்ஷம் முதலியவற்றைத் தருபவளுமாகிய ஸ்ரீநாகநாதசுவாமியை சரணமடைகிறேன்.

7.ஸானந்த மானந்தவனே வஸந்தம்

ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் !

வாராணஸீநாத மானத நாதம்

ஸ்ரீவிச்வ நாதம் சரணம் ப்ரபத்யே !!

வாராணஸீ என்ற க்ஷேத்ரத்தில் ஆனந்தவனத்தில் ஆனந்தமாக வீற்றிருப்பவளும், ஆனந்தத்திற்கு மூலக்கருவாகவும், பாபங்களைக் களைபவராகவும், எளியோருக்குப் பங்காளனாகவும், இருக்கிற ஸ்ரீவிச்வநாதரை சரணமடைகிறேன்.

8.யோ டாகினீசாகிநிகாஸமாஜே

நிஷேவ்யமாண:பிசிதாசனை:ச !

ஸதைவ பீமாதிபதப்ரஸித்தம்

தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி !!

டாகினீ, சாகினீ, முதலியவர்களால் சோவிக்கப்பட்ட பீமா என்ற பெயருடன் விளங்கும் பக்த சங்கரனை வணங்குகின்றேன்.

9.ஸ்ரீதாம்ர பர்ணீஜல ராசியோகே

நிபத்ய ஸேதும் GC பில்வபத்ரை:!

ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்

ராமேச்வராக்யம் ஸததம் நமாமி !!

தாமிரபரணீநதியும், கடலும் சேருமிடத்தில் சேது பந்தம் செய்தபின் இரவில் ஸ்ரீராமர் பில்வதலங்களால் அர்ச்சித்த ஸ்ரீராமேச்வரலிங்கத்தை எப்பொழுதும் வணங்குகின்றேன்.

10.ஸிம்ஹாத்ரிபார்ச்வேsபி தடே ரமந்தம்

கோதாவரீதீர பவித்ரதேசே !

யத் தர்சனாத் பாதக ஜாத நாச :

ப்ரஜாயதே த்ர்யம்பகமீசமீடே !!

ஸிம்ஹாசல க்ஷேத்திரத்தின் அருகில் சமவெளியில் கோதாவரீக்கரையில் களித்து நிற்கும் த்ர்யம்பகரை ஸ்தோத்திரம் செய்கிறேன். அவரை தர்சனம் செய்தாலே பாபமெல்லாம் நீங்கும் !!

11.ஹிமாத்ரி பார்ச்வேsபி தடே ரமந்தம்

ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீந்த்ரை: !

ஸுராஸுரை:யக்ஷமஹோரகத்யை:

கேதாரஸம்ஞம் சிவமீச மீடே !!

ஹிமயமலையின் பக்கத்தில், முனிவர்களாலும், தேவஸுரர்களாலும் பூஜிக்கப்பட்ட கேதாரநாதரை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

12.ஏலாபூரீ ரம்ய சிவாலயேsஸ்மின்

ஸமுல்லஸந்தம் த்ரிஜகத்வரேண்யம் !

வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்

ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம் !!

ஏலாபுரியிலுள்ள அழகிய சிவன் கோயிலில் விளங்கும் மூவுலகுக்கும் சிறந்தவரும், மிகவும் இளகிய சுபாவமுடையவருமான திஷணேச்வரர் என்ற ஸதாசிவனை வணங்குகின்றேன்.

13.ஏதாநி லிங்காதி ஸதைவ மார்த்யா:

ப்ராத:படந்தோsமல மானஸா:ச !

தே புத்ரபௌத்ரைஸ்ச தனைருதாரை:

ஸத்கீர்திபாஜ:ஸுகினோ பவந்தி !!

தெளிந்த மனதுடன் காலையில் இந்த த்வாதஸலிங்க ஸ்தோத்திரத்தைப் படிக்கும் மனிதர் புத்ர - பௌத்ரர்களுடனும் ஏராளமான தனதான்யத்துடனும், புகழுடனும் சுகமாக வாழ்வீர்.

த்வாதஸ லிங்கஸ்தோத்ரம் முற்றிற்று.