காலபைரவாஷ்டகம் 1 தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம் வ்யாலயஜ்ஞஸ¨த்ரமிந்து சேகரம் க்ருபாகரம் I நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம் காசிகா புராதிந

காலபைரவாஷ்டகம்

1.தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலயஜ்ஞஸ¨த்ரமிந்து சேகரம் க்ருபாகரம் I

நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

இந்திரன் சேவிக்கும் திருவடிகளையுடையவளும், சர்பயஜ்ஞோபவீதமும் சந்திரனையும் தரித்து அருள்பாலிப்பவரும், நாரதர் முதலிய யோகியரால் வணங்கப்பட்டவரும், திகம்பரருமான காசிநகரத்தை பாலித்தருளும் காலபைரவரை சேவிக்கிறேன்.

2.பானுகோடி பாஸ்வரம் பாவாப்திதாரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம் I

கால காலமம்புஜாக்ஷ மஸ்த சூன்ய மக்ஷரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே II

காசீபுரத்து காவல் தெய்வமான காலபைரவரை சேவிக்கிறேன். அவர் பல்லாயிரம் சூர்யர்கள் போல் பிரகாசிப்பவர். சம்ஸாரக் கடலிலிருந்து கடத்தேறுவிப்பவர். நீலகண்டர், விரும்பியதை அருளிபவர், முக்கண்னர். காலகாலர், தாமரையத்த கண்ணினர். பரிபூரண - அக்ஷரமானவர்.

3.சூலடங்கபாச தண்ட பாணிமாதி காரணம்

ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம் I

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்

காசிகா புராதிநாத கால பைரவம் பஜே II

சூலம், உளி, பாசம், தண்டம் இவற்றை கையில் தரித்து, ஆதி காரணமாய், கருத்த மேனியராய், குறைவில்லாத அக்ஷரமாய், பயங்கர நெறிமுறைகள் கொண்ட ப்ரபுவாய், விசித்ரமான தாண்டவம் புரிபவராய்த் திகழும் காசீகாலபைரவரை சேவிக்கிறேன்.

4.புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம் I

நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

காசீ க்ஷேத்ர காலபைரவர் போகம், மோக்ஷம் இரண்டையும் அருள்பவர். அழகிய உருவங்கொண்டவர், அடியாரிடத்தில் அன்பு பூண்டவர். உறுதியாய் ஸகல லோகமும் வடிவாய் அமைந்தவர். ஒலியெழுப்பும் தங்கமயமான அரைச் சதங்கையணிந்தவர். அவரை நான் சேவிக்கிறேன்.

5.தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க நாசகம்

கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் I

ஸ்வர்ணவர்ணகேசபாச சோபிதாங்கநிர்மலம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

தர்மமாகிய பாலத்தைப் பாதுகாப்பவர். அதர்ம வழியை ஒழிப்பவர். கர்ம பந்தமில்லையெனச் செய்பவர். க்ஷேமத்தையருள்பவர். எங்கும் இருப்பவர். தங்கமயமான கேசங்கள் கொண்டவர். தூய வடிவினாரான காசீ காலபைரவரை வழிபடுகிறேன்.

6.ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்

நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் I

ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

வைரமிழைத்த பாதுகைகள் அணிந்திருப்பதால் மிகவும் அழகாயிருக்கின்றன. மேலும், அவர் நித்யமான இஷ்ட தெய்வம். இரண்டாகக் கொள்ளப்படாதவர், யமனின் கொட்டத்தையடக்கியவர். பயங்கர தெற்றிப் பற்கள் அவருக்கு அழகாயுள்ளன. அப்படிப்பட்ட, காசீ காலபைரவரை சேவிக்கிறேன்.

7.அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம் I

அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

அட்டஹாஸம் செய்து பிரம்மனின் அண்ட கோசகூட்டை யுடைத்தவரும், பார்த்த மாத்திரத்தில் பாபங்களையழிப்பவரும், பயங்கரமான கட்டளைகளை யுடையவரும், கபால மாலையணிந்து அஷ்டசித்திகளை வழங்கி வரும் காசீ காலபைரவரை சேவிக்கிறேன்.

8.பூதஸங்கநாயகம் விசால கீர்த்திதாயகம்

காசிவாஸிலோக புண்யபாப சோதகம் விபும் I

நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே II

பூதகணங்களுக்கு அவர் நாயகர். பரந்த கீர்த்தி தருபவர். காசியில் வாழும் மக்களின் புண்யபாபங்களை ஆராய்பவர். எங்குமிருப்பவர். நீதிமார்க்கம் தெரிந்தவர். பழமையான உலகத்தலைவர். இவ்வாரான காசி கால பைரவரை சேவிக்கிறேன்.

9.காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம் I

சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம் II

அழகான இந்த கால பைரவாஷ்டகத்தைப் படிப்பவர், ஞானம், முக்தியுடன் பற்பல புண்யங்களையும் அடைவர். துக்கம், மோஹம், லோபம், ஏழ்மை, கோபம் தாபம் நீங்கி கால பைரவர் ஸந்நிதியை நிச்சயம் அடைவர்.

காலபைரவாஷ்டகம் முற்றிற்று.