காசீ பஞ்சகம் 1 மனோநிவ்ருத்தி:பரமோபசாந்தி: ஸா தீர்த்த வர்யா மணிகர்ணிசா ச I ஜ்யான ப்ரவாஹா விமலாதிகங்கா ஸா காசிகாஹம் நிஜ போதரூபா II மனதில் (லௌகிக விஷய

காசீ பஞ்சகம்

1.மனோநிவ்ருத்தி:பரமோபசாந்தி:

ஸா தீர்த்த வர்யா மணிகர்ணிசா ச I

ஜ்யான ப்ரவாஹா விமலாதிகங்கா

ஸா காசிகாஹம் நிஜ போதரூபா II

மனதில் (லௌகிக விஷயங்களைப்பற்றி) ஈடுபாட்டுக் குறைவும், நிம்மதியும், மணிகர்ணிகை என்ற தீர்த்தகரையும், வேறல்லவே!ஜ்ஞானமே ப்ரவாஹமாகவும், ஆத்மசுத்தியே கங்கையாகவும், ஆத்மஸ்வ ரூபமே காசியாகவும் ஆக நானே காசிதானே.

2.யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்

சராசரம் பாதி மனோ விலாஸம் I

ஸச்சித்ஸுகைகா பரமாத்மாரூபா

ஸா காசிதாஹம் நிஜபோதரூபா II

இந்தரஜால வித்யை போன்று இந்த உலக விவகாரம் மனம் தோன்றியபடி தோற்றுவிக்கப்பட்டதுதானே. உண்மையில் ஸதி, சித், ஆனந்தம் என்று பரமாத்மா ஸ்வரூபமேயான ஆத்மஸ்வரூபமே அந்த காசியாக உள்ளது. ஆகவே நானும் காசியும் ஒன்றேதான்.

3.கோசேஷ§ பஞ்சஸ்வதிராஜமானா

புத்திர்பவானீ ப்ரதிதேஹ கேஹம் I

ஸாக்ஷ¨ சிவ:ஸர்வகதோந்தராத்மா

ஸா காசிகாஹம் நிஜ போத ரூபா II

ஐந்து கேசங்களில் மிளிரும் புத்தியே ஒவ்வொரு மனித தேஹமாகிய கோயிலில் விளங்கும் பார்வதீ தேவியானவள். ஒவ்வொரு அந்தராத்மாவே ஸாக்ஷியான சிவன். ஆத்ம ஸ்வரூபமே காசி.

4.காசீக்ஷேத்ரம் சரீரம் த்ரிபுவனஜனனீ வ்யாபினீ ஞானகங்கா

பக்தி:ச்ரத்தா கயேயம் நிஜகுருசரண த்யானயோக:ப்ரயாக: I

விச்வேசோயம் துரீய:ஸகல ஜனமன:ஸாக்ஷி பூதோந்தராத்மா

தேஹே ஸர்வம் மதீயே யதி வஸதி புனஸ்தீர்த்தமன்யத்கி மஸ்தி II

காசீக்ஷேத்ரமென்பது எனது சரீரமே, எங்கும் பரவியுள்ள ஜ்ஞானமே கங்கை. எனது பக்தியும் சிரத்தையுமேகயை பிரயாகக்ஷேத்ரம் என்பது எனது குருவின் சரணங்களை மனதில் தியானிக்கும்பேறு தான். துரீயமான விச்வநாதர்யார்?அதுவும் ஒவ்வொரு மனதிலுரையும் ஸாக்ஷியான அந்தராத்மா தானே இவ்வாறு எனது சரீரத்திலேயே எல்லாதீர்த்தங்களும் இருக்கையில் வேறு புதிதாக தீர்த்தம் ஏது?

காசீ பஞ்சகம் முற்றிற்று.