ஸ்ரீம்ருத்யுஞ்ஜயமானஸிகபூஜா ஸ்தோத்திரம் 1 கைலாஸே கமனீயரத்னகசிதே கல்பத்ருமூலே ஸ்திதம் கர்பூரஸ்படிகேந்து ஸுந்தரதனும் காத்யாயனீஸேவிதம் ! கங்காதுங்

ஸ்ரீம்ருத்யுஞ்ஜயமானஸிகபூஜா ஸ்தோத்திரம்

1.கைலாஸே கமனீயரத்னகசிதே கல்பத்ருமூலே ஸ்திதம்

கர்பூரஸ்படிகேந்து ஸுந்தரதனும் காத்யாயனீஸேவிதம் !

கங்காதுங்கதரங்கரஞ்சிதஜடா பாரம் க்ருபாஸாகரம்

கண்டாலங்க்ருதசேஷ பூஷணமமும் ம்ருத்புஞ்ஜயம் பாவயே !!

கைலாஸத்தில் அழகிய ரத்னகற்களால் வடித்த ஆஸனத்தில் அமைந்துள்ள, கழுத்தில் சேஷநாகத்தை ஆபரணமாகக் கொண்ட ம்ருத்யுஞ்ஜயரை தியானிக்கிறேன். அவர், கர்பூரம், ஸ்படிகம், சந்திரன் போன்று வெண்ணிற வடிவம் கொண்டவராய் காத்யாயனீஸேவிக்க, கங்கையின் அலைகள் மோதி செந்நிறமாகும் ஜடையுடையவராய் கருணைக்கடலாய் திகழ்கிறார்.

2.ஆகத்ய ம்ருத்யுஞ்ஜய சந்த்ரமௌலே

வ்யாக்ராஜினாலங்க்ருத சூலபானே !

ஸ்வபக்த ஸம்ரக்ஷணகாமதேனோ

ப்ரஸீத விச்வேச்வர பார்வதீச !!

ஹேம்ருத்யுஞ்ஜய!சந்திரனைத் தலையிலும், சூலத்தை கையிலும் கொண்டு புலித்தோல் உடலில் மிளிர, தனது பக்தர்களை காப்பதில் காமதேனுவாய் உலக நாயகனாய், பார்வதீப்ரியனாய் விளங்கும் நீர் இங்கு வந்து அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும்.

3.பாஸ்வன் மௌக்திக தோரணே மரகதஸ்தம்பா யுதாயங்க்ருதே

ஸெளதே தூப ஸுவாஸிதே மணிமயே மாணிக்யதீபாஞ்சிதே !

ப்ரஹ்மேந்த்ராமரயோகி புங்கவகணை:யுக்தேச கல்பத்ருமை:

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஸுஸ்திரோ பவ விபோ மாணிக்யஸிம்ஹாஸனே !!

பளபளக்கும் முத்துத்தோரணவாயில் கொண்டதும் மரகதஸ்தம்பங்கள் பல உள்ளதுமான மாளிகையில் தூபங்கமிழும் மண்டபத்தில் மாணிக்யதீபம் சுற்றும் எரிய, மாணிக்ய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து ஹேம்ருத்யுஞ்ஜய!விபோ!சற்று நிலை கொண்டிருக்க பிரார்த்திக்கிறேன்.

4.மந்தாரமல்லீ கரவீரமாதவீ பும்நாக நீலோத்பல சம்பகான்விதை: !

கர்பூர பாடீர ஸுவாஸிதைர்ஜலை:ஆதத்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பாத்ய முத்தமம் !!

ஹேம்ருத்யுஞ்ஜய!மந்தாரம், மல்லிகை, கொன்னை, ஜாதிமுல்லை, புந்நாகம், நீல ஆம்பல், சம்பகம் ஆகிய பூக்களும், கர்பூர சந்தனமும் வாசனை ஜலத்தால் பாத்யம் மேற்கொள்ளலாமே!

5.ஸுகந்த புஷ்பப்ரகரை:ஸுவாஸிதை:வியந்நதீ சீதலவாரபி:சுபை: !

த்ரிலோக நாதார்திஹரார்க்ய மாதராத் க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய ஸர்வவந்தித!!

துன்பம் துடைக்கும் த்ரிலோக நாத! மூவுலகம் போற்றிப்புகழப்படும் மிருத்யுஞ்ஜயரே!இந்த அர்க்யத்தை ஏற்றுக் கொள்ள வேணுமே. இந்த அர்க்யம் மணங்கமழும் புஷ்பங்களாலும், ஆகாசங்கையிலுள்ள குளிர்ந்த நீராலும் சேகரிக்கப்பட்டுள்ளது.

6.ஹிமாம்புவாஸிதை ஸ்தோயை:சீதைலைரதிபாவனை: !

ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ சுத்தாசமனமாசர !!

ஹேம்ருத்யுஞ்ஜய! மஹாதேவ! பன்னீர் வாஸனையுள்ள மிகத்தூய்மையான இந்த குளிர்ந்த நீரால் சுத்த ஆசமனம் செய்யலாமே!

7.குடததிஸஹிதம் மதுப்ரகீர்ணம் ஸுக்ருதஸமான்விததேனுதுக்தயுக்தம் !

சுபகர மதுபர்கமாஹர த்வம் த்ரிநயன ம்ருத்யுஹர த்ரிலோகவந்த்ய!!

ஹேமுக்கண்ணரே!ம்ருத்யுஞ்ஜயரே!மூவுலகம் போற்றும் பெருமானே!க்ஷேமம் தருபவரே! இந்த மதுபர்க்கம் ஏற்கலாமே! இது வெல்லம் தயிர், தேன், நெய், பால் இவை சேர்த்து அமைக்கப்பெற்றது.

8.பஞ்சாஸ்த்ரசாந்த பஞ்சாஸ்ய பஞ்சபாதகஸம்ஹர!

பஞ்சாம்ருதஸ்னானமிதம் குரும்ருத்யுஞ்ஜய ப்ரபோ!!

மன்மதனை மன்னித்தவரே!ஐந்து முகம் பொருந்தியவரே! ஐந்து விதமஹாபாபங்களை நீக்குபவரே!ஹே ம்ருத்யுஞ்ஜய!இந்த பஞ்சாம்ருத ஸ்னானத்தை ஏற்றுக் கொள்ள வேணும்.

9.ஜகத்ரயீக்யாத ஸமஸ்த தீர்த்த ஸமாஹ்ருதை:கல்மஷ ஹாரிபி:ச!

ஸ்நானம் ஸுதோயை:ஸமுதாசர த்வம் ம்ருத்யுஞ் ஜயானந்தகுணாபிராம!!

மூவுலகுக்கும் கொண்டாடும் ம்ருத்யுஞ்ஜயரே! அரிய குணங்களால் அழகியவரே! பாபங்களைப்போக்கும் அனைத்து தீர்த்தங்களின்றும் சேகரித்த இந்த நல்ல ஜலத்தால் ஸ்னாநம் செய்து கொள்வீராக!

10.ஆநீதேநாதி சுப்ரேண கௌசேயேநாமரத்ருமாத் !

மார்ஜயாமி ஜடாபாரம் சிவ ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ!!

கல்பக விருக்ஷத்தினின்று சேகரித்து வந்த இந்த வெண்ணிற பட்டினால் உமது ஜடாபரத்தை துடைத்து விடுகிறேன் ஹேம்ருத்யுஞ்ஜய!ப்ரபோ சிவ!

11.நாநாஹேமவிசித்ராணி சீர சினாம் பராணி ச!

விவிதாநி ச திவ்யானி ம்ருத்யுஞ்ஜய ஸுதாரய!!

ஹே ம்ருத்யுஞ்ஜய!நேர்த்தியான, தங்கமயமான மரவு ரி-பட்டாடைகளை நன்கு அணிந்து கொள்ளலாமே!

12.விசுத்த முக்தாபலஜாலரம்யம் மனோஹரம் காஞ்சன ஹேம சூத்ரம்!

யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ஆதத்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பக்திகம்ய!!

பக்தியால் மட்டும் அணுக வாய்ப்புத்தரும் ஹே ம்ருத்யுஞ்ஜயரே!சுத்தமுத்துக்கள் குஞ்சமாகதொங்க, இந்த பத்தரைமாத்து தங்க யஞ்ஞோபவீதத்தை தரித்துக்கொள்ளுங்களேன்!

13.ஸ்ரீகந்தம் கனஸார குங்குமயுதம் கஸ்தூரிகாபூரிதம்

காலேயேந ஹிமாம்புனா விரசிதம் மந்தார ஸம்வாஸிதம் !

திவ்யம் தேவமனோஹரம் மணிமயே பாத்ரே ஸமாரோபிதம்

ஸர்வாங்கேஷ§விலேபயாமி ஸததம் ம்ருத்யுஞ்ஜயஸ்ரீவிபோ !

ஹே ம்ருத்யஞ்ஜய!விபோ!குங்குமப்பூ, பச்சைக்கர்பூரம் சேர்த்து, கஸ்தூரியும், பன்னீரும் கலந்து, மந்தார புஷ்பத்தின் வாஸனையுடன் தங்கமயமான பாத்திரத்தில் வைத்துள்ள சந்தனத்தினால், உமது உடல் முழுதும் பூசிவிடுகிறேனே!

14.அக்ஷதை:தவலை:திவ்யை:ஸம்யக்திலஸமன்விதை: !

ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ பூஜயாமி வ்ருஷத்வஜ !!

ஹே ம்ருத்யுஞ்ஜய!மஹாதேவ!வ்ருஷபத்வஜ!இந்த வெண்மையானதும், திலம் கலந்ததுமான திவ்ய அக்ஷதைகளால் உம்மை அர்ச்சிக்கிறேனே!

15.சம்பக பங்கஜ குரவககுந்தை:கரவீரமல்லிகாகுஸுமை: !

விஸ்தாரய நிஜமகுடம் ம்ருத்யுஞ்ஜய புண்டரீகநயனாப்த !!

ஹேம்ருத்யுஞ்ஜய!வெண்தாமரையத்த கண்ணுடையோனே! ஆப்த!நீர் சம்பகம், தாமரை, மருதாணி, குந்தம், தங்கப்பட்டி, மல்லிகை முதலிய புஷ்பங்களால் உமது மகுடத்தை அழகு படுத்திக்கொள்ளலாமே!

16.மாணிக்யபாதுகாத்வந்த்வே மௌனிஹ்ருத்பத்ம மந்திரே !

பாதௌ ஸத்பத்மஸத்ருசௌ ம்ருத்யுஞ்ஜய நிவேசய !!

ஹேம்ருத்யுஞ்ஜய!தாமரையத்த உமது இருபாதங்களை மௌனிகளின் ஹ்ருதயத்தாமரையில் குடிகொண்டிருக்கும் ரத்னமிழைத்த பாதுகையில் செலுத்தி வைத்துக்கொள்ளலாமே!

17.மாணிக்ய கேயூர கிரீடஹாரை:காஞ்சீமணிஸ்தாபித குண்டலை: ச !

பாதௌ ஸத்பத்மஸத்ருசௌ ம்ருத்யுஞ்ஜய நிவேசய !!

ஹேம்ருத்யுஞ்ஜய!ரத்னமயமான தோன்வளை, கிரீடம், ஹாரம், ஒட்டியானம், வைரக்கல் இழைத்த குண்டலம், கால்வளை ஆகிய முக்யமான ஆபரணங்களால் உனது உடலை அலங்கரிக்கிறேன்!

18.கஜவதனஸ்கந்தத்ருதேநாதிஸ்வச்சேந சாமரயுகேந !

கலதலகானனபத்மம் ம்ருத்யுஞ்ஜய பாவயாமி ஹ்ருத்பத்மே !!

கஜானனர், ஸ்கந்தர் ஆகிய இருவரும் தாங்கி மிகத்தூய்மையாக இரண்டு வெண்சாமரங்களால் வீசும்போழ்து அசைந்தாலும் குந்தலங்கள் கொண்ட உமது முகபத்மத்தை என் ஹ்ருதயத்தில் தியானித்து மகிழ்கிறேனே!

19.முக்தாதபத்ரம் சசிகோடி சுப்ரம் சுபப்ரதம் காஞ்சன தண்டயுக்தம் !

மாணிக்யஸம்ஸ்தாபித ஹேம கும்பம் ஸுரேச ம்ருத்யுஞ்ஜய தேர்பயாமி !!

பாலசந்திரர்கள் ஒன்று சேர்ந்தாற்போல் மிக வெண்மையான, தங்கத்தட்டுகள் அமைந்த முத்துக்குடையை அது ரத்தினக்கற்கள் பதித்த கலசமும் கொண்டது - உமக்கு ஸமர்ப்பிக்கிறேனே!

20.மணிமுகுரே நிஷ்படலே த்ரிஜகத்காடாந்த-காரஸப்தாச்வ !

கந்தர்பகோடிஸத்ருசம் ம்ருத்யுஞ்ஜய பச்ய வதனமாத்மீயம் !!

ஹேம்ருத்யுஞ்ஜய!அழுக்கு இல்லாத, மூவுலகின் இருட்டைப் போக்கும் சூர்யன் போன்றிருக்கிற இந்த இரத்தினக்கண்ணாடியில் மன்மதனை யத்த உமது முகத்தைக் கண்டுகளிக்கலாமே!

21.கர்பூரசூர்ணம் கபிலாஜ்ய பூதம் தாஸ்யாமி காலேய ஸமன்விதம்ச!

ஸமுத்பவம் பாவன கந்த தூபிதம் ம்ருத்யுஞ்ஜயாங்கம் பரிகல்பயாமி!!

காறாம்பசு நெய்யுடன் கர்பூரப்பொடியை எரித்து ஸமர்ப்பிக்கிறேன். தூயவாஸனைப்புகையை உண்டாக்கி உமது உடலுக்கு வாஸனை உண்டாக்குகிறேனே!

22.வர்தித்ரயோபேத மகண்டதீப்த்யா தமோஹரம் பாஹ்ய மதாந்தரம் ச!

ஸாஜ்யம் ஸமஸ்தாமரவர்க ஹ்ருதயம் ஸுரேச ம்ருத்யுஞ்ஜய வம்சதீபம்!!

ஹேசுரேச!ம்ருத்யுஞ்ஜய! நெய்யுடன் மூன்று திரிகள் இடைவிடாது எரிவதால் உள்ளும் வெளியும் உள்ள இருட்டை போக்கும் இந்த தீபத்தை ஏற்கலாமே!இது தேவர்கள் அனைவரையும் கவரக்கூடியது.

23.ராஜான்னம் மதுரான்விதம் ச ம்ருதுலம் மாணிக்ய பாத்ரே ஸ்திதம்

ஹிங்கூ ஜீரக ஸன்மரீசிமிலிதை:சாகை ரநேகை:சுபை:!

ஸாகம் ஸம்யகபூபஸ¨ பஸஹிதம் ஸத்யோ த்ருதேநாப்லுதம்

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய விபோ ஸாபோசனம் புஜ்யதாம் !!

ரத்னம் இழைத்த பாத்திரத்தில் வைத்துள்ள குழைந்த இனிய அன்னத்தை, பெருங்காயம், ஜீரகம், மிளகு இவற்றுடன் கூடிய நல்ல காய்கறிகளுடனும், அப்பம், பருப்பு, புத்துக்கு நெய் இவற்றுடனும் ஹேம்ருத்யுஞ்ஜய விபோ!ஆபோசனம் செய்து உண்ணலாமே!

24.கூச்மாண்டவார்தாக படோலிகாநாம் பலானி ரம்யாணி ச காரவல்யா !

ஸுபாகயுக்தாநி ஸஸெளரபாணி ஸ்ரீகண்ட ம்ருத்யுஞ்ஜய பக்ஷயேச!!

பூசணி, கத்தரி, புடலை சமைக்கப்பட்ட வாசனைமிக்கதாயுள்ளன, ஹே நீலகண்ட! ம்ருத்யுஞ்ஜய!இவற்றையும் உண்ணலாமே!

25.சீதலம் மதுரம் ஸ்வச்சம் பாவனம் வாஸிதம் லகு!

மத்யே ஸ்வீகுரு பானீயம் சிவ ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ!!

ஹேசிவ! ம்ருத்யுஞ்ஜய! ப்ரபோ!குளிர்ந்ததும், இனியதும், தெளிந்ததும்,

சுத்தமானதும், வாசனையுள்ளதுமான இந்த ஜலத்தை குடிப்பதற்கு ஸ்வீகரிக்கலாமே !

26.சர்கராமிச்ரிதம் ஸ்நிக்தம் துக்தான்னம் கோக்ருதான்விதம் !

கதலீபலஸம்மிச்ரம் புஜ்யதாம் ம்ருத்யுஸம்ஹர!!

ஹேம்ருத்யுஞ்ஜய! சர்கரையும் பசு நெய்யும் சேர்த்து தயாரித்த பாலன்னத்தை புசிக்கலாமே!அதில் வாழைப்பழமும் சேர்க்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ளது.

27.கேவலமதிமாதுர்யம் துக்தை:ஸ்நிக்தை:ச சர்கராமிலிதை: !

ஏலாமரீசிமிலிதம் ம்ருத்யுஞ்ஜய புங்க்ஷ்வ பரமான்னம் !!

மிக மதுரமானதும், காய்ச்சிய பால், சர்கரை, ஏலம், கிராம்பு இவை சேர்த்து தயாரித்துள்ளதுமான பாயசத்தை ஹேம்ருத்யுஞ்ஜய புசிக்கலாமே!

28.ரம்பாசூதகபித்த கண்டகபலை:த்ராக்ஷ£ரஸஸ்வாதுமத்

கர்ஜூரை:மது ரேக்ஷ§ கண்ட சகலை:ஸந்நாளி கேராம்புபி: !

கர்பூரேண ஸுவாஸிதை:குடஜலை:மாதுர்யயுக்தைர் விபோ

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூரய த்ரிபுவனா தாரம் விசாலோதரம் !!

கதலி, மாம்பழம், விளாம்பழம், பலாப்பழம், திரா¬க்ஷ, பேரீச்சை ஆகிய பழங்களையும், கரும்புத்துண்டுகளையும், இளநீரையும், பச்சை கர்பூரம் தேர்த்து வாசனையுள்ள பானகத்தையும் ஸ்வீகரித்து ஹேம்ருத்யுஞ்ஜய!மூவுலகுக்கு ஆதாரமானவற்றை பூரணம் செய்யலாமே!

29.மனோஜ்ஞரம்பா நவகண்ட கண்டிதான் ருசிப்ரதான் ஸர்ஷபஜீரகாண்ச!

ஸஸெளரபான் ஸைந்தவஸேவிதான்ச க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய லோகவந்த்ய!!

ஹேம்ருத்யுஞ்ஜய!உலகம் போற்றும் உத்தமரே! இனிய வாழைப்பழம், பச்சைக்கற்பூரம், சேர்க்கப்பட்டு, ருசி தரும் கடுகு, ஜீரகம் முதலியன உப்பும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொள்ளலாமே!

30.ஹிங்கூ ஜீரகஸஹிதம் விமலாமலகம் கபித்தமதிமதுரம்மி

பிஸகண்டான் லவணயுதான் ம்ருத்யுஞ்ஜய தேsர்பயாமி ஜகதீச !

ஹேஜகதீச!ம்ருத்யுஞ்ஜய! பெருங்காயம், ஜீரகம் இவற்றுடன் நல்ல நெல்லிக்கனியும், மிக இனிமையான விளாம்பழமும், உப்பு சேர்ந்த தாமரைக் கிழங்கும் உமக்கு ஸமர்ப்பிக்கிறேன். அதை ஏற்றுக்கொள்ள வேணுமே!

31.ஏலாசுண்டீஸஹிதம் தத்யன்னம் சாருஹேமபாத்ரஸ்தம் I

அம்ருத ப்ரதிநிதிமாட்பம் ம்ருத்யஞ்ஜய புஜ்யதாம் த்ரிலோகேச II

ஹே மூன்று உலகங்களையும் காக்கும் ம்ருத்யுஞ்ஜனே!ஏலக்காய் சுக்கு இவற்றுடன் தங்கப்பாத்திரத்தில் வைத்துள்ள மிக நேர்த்தியான அம்ருதத்திற் கொப்பான இந்த தயிர் அன்னத்தை புசிக்கலாமே!

32.ஜம்பீரநீராஞ்சித ச்ருங்கபேரம் மனோஹரான் அம்லசலாடு கண்டான் !

ம்ருதூபதம்சான் ஸஹஸோபபுங்க்ஷ்வ ம்ருத்யுஞ்ஜய ஸ்ரீ கருணாஸமுத்ர II

ஹேம்ருத்யுஞ்ஜய!கருணைக்கடலே!எலுமிச்சைச்சாறு கலந்த இஞ்சியையும், புளிப்பு உள்ள நல்ல காய் துண்டுகளையும், மிருதுவான கறிவகைகளையும் புசிக்கலாமே!

33.நாகர ராமடயுக்தம் ஸுலலித ஜம்பீர நீர ஸம்பூர்ணம் !

மதிதம் ஸைந்தவஸஹிதம் பிப ஹர ம்ருத்யுஞ்ஜய க்ரதுத்வம்ஸின் !!

ஹே ஹர! ம்ருத்யுஞ்ஜய! தக்ஷனின் யாகத்தை த்வம்ஸம் செய்தவரே!வெண் பெருங்காயம் கலந்து, நல்ல எலுமிச்சை நீர் நிரம்பிய, உப்பும் கலந்த இந்த கடைந்த மோரைப்பருகலாமே!

34.மந்தார ஹேமாம்புஜகந்தயுக்தை:மந்தாகிநீ நிர்மல புண்யதோயை: !

க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய பூர்ணகாம ஸ்ரீமத் பராபோசன மப்ரகேச !!

மந்தாரம், தாமரை இவற்றின் மணம் கமழும் கங்கையின் புண்ய நீரால், ஹேம்ருத்யுஞ்ஜய!உத்தரா போசனம் ஏற்பீராக!

35.ககன துநீ விமலஜலை:ம்ருத்யுஞ்ஜய பத்மராக பாத்ரகதை: !

ம்ருகமத சந்திர பூர்ணை:ப்ரக்ஷ£லய சாரு ஹஸ்தபாதயுக்மம் !!

ஹேம்ருத்யுஞ்ஜய!பத்மராக பாத்திரத்திலுள்ள கங்கை ஜலத்தால் உமது கால் கைகளை சுத்தம் செய்து கொள்ளலாமே. கஸ்தூரி, சந்தனமும் கலந்திருக்கிறது இந்த ஜலம்.

36.புந்நாகமல்லிகா குந்த வாஸிதை:ஜாஹ்னவிஜலை: !

ம்ருத்யுஞ்ஜய மஹ்தேவ புனராசமனம் குரு !!

ஹேம்ருத்யுஞ்ஜய!மஹாதேவ!புந்நாகம்!மல்லிகை, குந்தம் ஆகிய புஷ்பங்களால் வாசனையுற்ற இந்த கங்கை நீரால் போஜனத்திற்குப்பின் ஆசமனம் செய்யலாமே!

37.மௌக்திகசூர்ணஸமேதை:ம்ருகமதனஸார வாஸிதை:பூகை: !

பர்ணை:ஸ்வர்ண ஸமானை:ம்ருத்யுஞ்ஜய தேஷிர்பயாமி தாம்பூலம் !!

ஹேம்ருத்யுஞ்ஜய!முத்துப்பொடி கலந்ததும், கஸ்தூரி, பச்சைக்கற்பூரம், இவற்றால் வாஸனையுடையதுமான பாக்குப் பொடியுடன் தங்க நிற வெற்றிலைகளால் உமக்கு தாம்பூலம் ஸமர்ப்பிக்கிறேன்.

38.நீராஜனம் நிரமலதீப்தி மத்பி:தீபாங்குரை:உஜ்வல முச்ரிதை:ச !

கண்டாநிநாதேன ஸமர்பயாமி ம்ருத்யுஞ்ஜயாய த்ரிபுராந்தகாய !!

சுத்தப்ரகாசத்துடன் உயரமாக எரியும் தீப ஒளிகளால் நீராஜனத்தை மணியோசையுடன் உமக்கு ஸமர்ப்பிக்கிறேன் ஹேத்ரிபுராந்தகனே ஹேம்ருத்யுஞ்ஜயரே!

39.விரிஞ்ஜி முக்யாமரப்ருந்த வந்திதே ஸரோஜமத்ஸ்யாங்கித சக்ரசிஹ்நிதே!

ததாமி ம்ருத்யுஞ்ஜய பாதபங்கஜே பணீந்த்ரபூஷே புனரர்க்ய மீச்வர !!

ஹேம்ருத்யுஞ்ஜய!ஈச்வர!பிரம்மா முதலிய தேவர்களால் சேவிக்கப்பட்டதும், தாமரை, மீன், சக்ரம் முதலிய அடையாளங்களுள்ளதும், நாகம் தவழ்வதுமான உமது திருவடித்தாமரையில் இன்னொருமுறை அர்க்யம் தருகிறேனே!

40.புந்நாக நீலோத்பலகுந்த ஜாஜீ மந்தாரமல்லீ கரவீர பங்கஜை: !

புஷ்பாஞ்ஜலிம் பில்வதலை ஸதுலஸ்யா ம்ருத்யுஞ்ஜயாங்க்ரௌ விநிவேசயாமி !!

புந்நாகம், கருநீலோத்பலம், குந்தம், மந்தாரம், மல்லிகை, செவ்வறளி, தாமரை ஆகிய பூக்களாலும், வில்வம், துளஸி இவற்றுடனும் புஷ்பாஞ்ஜலியை ஸ்ரீம்ருத்யுஜயரின் திருவடிகளில் செலுத்துகிறேன்.

41.பதேபதே ஸர்வதமோ நிக்ருந்தனம் பதே பதே ஸர்வசுபப்ரதாயகம் !

ப்ரதக்ஷிணம் சேதஸா கரோமி ம்ருத்யுஞ்ஜய ரக்ஷரக்ஷமாம் !!

ஹேம்ருத்யுஞ்ஜய!உம்மை பக்தி நிரம்பிய மனதுடன் வலம் வந்து நமஸ்கரிக்கிறேன். நீர் அவ்வப்போது அனைவரது அஞ்ஞான இருளைப்போக்குபவர். அவ்வப்போது அனைவருக்கும் நல்லதையே செய்பவர். என்னையும் காக்க வேண்டுமே!

42.நமோ கௌரீசாய ஸ்படிக தவலாங்காய ச நமோ

நோ லோகேசாய ஸ்துத விபுத ஸோகாய ச நம: !

நம:ஸ்ரீகண்டாய க்ஷபிதபுரதைத்யாய ச நமோ

நம:பாலாக்ஷ£ய ஸ்மரமத விநாசாய ச நம: !!

கௌரீமனாளனுக்கு நமஸ்காரம், ஸ்படிகம் போன்று வெண்ணிற வடிவம் கொண்டவருக்கு நமஸ்காரம் உலகம் காக்கும் கடவுளுக்கு நமஸ்காரம். தேவர் போற்றும் ஸ்ரீகண்டனுக்கு நமஸ்காரம். த்ரிபுரம் எரித்த எம்மானவனுக்கு நமஸ்காரம். நெற்றிக் கண்ணனுக்கும் நமஸ்காரம், மன்மதக்கொட்டம் நீக்கியவருக்கு நமஸ்காரம்.

43.ஸம்ஸார ஜனிதாப ரோகஸஹிதே தாபத்ரயாக்ரந்திதே

நித்யம் புத்ரகலத்ரவித்த விலஸத் பாசைர்நிபத்தம் த்ருடம் !

கர்வாந்தம் பஹ§பாப வர்கஸஹிதம் காருண்யத்ருஷ்ட்யா விபோ

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய ஸதா மாம் பாஹி ஸர்வேச்வர !!

ஹேம்ருத்யுஞ்ஜய!பார்வதீப்ரிய! ஸர்வேச்வர!கருணை ததும்பிய கடைக்கண்ணால் என்னை அனவரதமும் காப்பாயாக!நான் பிறப்பாகிய நீராநோய் கொண்டவன். முப்பெரும் தாபத்தால் அழுது கொண்டிருக்கிறேன். பிள்ளை, தாரம், செல்வம் என்ற பாசக்கயிற்றால் கட்டுண்டு தவிக்கிறேன். கர்வம் கண்களை மறாக்க பாபமனைத்தையும் செய்துள்ளேன்.

44.ஸெளதே ரத்னமயே நவோத்பல தலாகீர்ணே ச தல்பாந்தரே

கௌசேயேந மனோஹரேண தவலேநாச்சாதிதே ஸர்வச: !

கர்பூராஞ்சித தீபதீப்திமிலிதே ரம்யோபதானத்வயே

பார்வத்யா கரபத்மலாலிதபதம் ம்ருத்யுஞ்ஜயம் பாவயே !!

ரத்னமிளைத்த மாளிகையில் புத்தம் புதிய ஆம்பல் இதழ்கள் பரப்பியதும், அழகிய வெண்பட்டு மூடியதுமான மெத்தையில், நறுமணம் கமழும் தீபஒளியில், பஞ்சணையின் மீது பார்வதீயின் செந்தாமரைக்கரங்களால் மெல்ல வருடி சிறப்பிக்கப்பட்டும் திருவடியுடைய ம்ருத்யுஞ்ஜயரை என் கண் முன்னே காண்கிறேனே!

45.சதுஸ்சத்வாரிம்சத் விலஸதுபசாரை ரபிமதை:

மன:பத்மே பக்த்யா பஹிரபி ச பூஜாம் சுபகரீம் !

கரோதி ப்ரத்யூஷே GC திவஸமத்யேsபி ச புமான்

ப்ரயாதி ஸ்ரீம்ருத்யுஞ்ஜயபத மநேகாத்புதபதம் !!

இவ்வாறு மனதிற்கிசைவாக அருமையன நாற்பத்து நான்கு உபச்சாரங்களுடன் உள்ளும் புறமும் பக்தியுடன், காலையிலும், நடுப்பகலிலும் பூஜை செய்யபவர், பற்பல அற்புத ஆற்றல் கொண்ட ஹேம்ருத்யுஞ்ஜயரின் திருவடியைப் பெறுவர்.

46.ப்ரார்தலிங்க முமாபதே ரஹரஹ: ஸந்தர் சனாத்ஸ்வர்கதம்

மத்யாஹ்நே ஹயமேததுல்யபலதம் ஸாயந்தனே மோக்ஷதம் !

பானோரஸ்தமயே ப்ரதோஷஸமயே பஞ்சாக்ஷராராதனம்

தத்காலத்ரயதுல்ய மிஷ்டபலதம் ஸத்யோsநவத்யம் த்ருடம் !!

உமாபதியான பரமேச்வரனின் லிங்கம், காலையில் தர்சிப்பதால் ஸ்வர்கத்தை நல்குவதாகும். நடுப்பகலில் தர்சித்தால் அச்வமேதப்பயனையும், £லையில் தர்சித்தால் மோக்ஷத்தையும் கொடுக்கும். சூர்யன் மறையும் அந்தப்ப்ரதோஷ வேளையில் பஞ்சாக்ஷரம் சொல்லி பரமேச்வரனை ஆராதித்தால் முக்காலத்திலும் ஸமமாக விரும்பிய பயனை திண்ணமாக கொடுக்கும்.