மாத்ருகா பஞ்சகம் 1 ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :

மாத்ருகா பஞ்சகம்

1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா

நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I

ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :

தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா

யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I

குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்

ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா

ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!

4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி

ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I

இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:

ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்

ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -

த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.

மாத்ருகா பஞ்சகம் முற்றிற்று.