கௌடர்; திராவிடர் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்தியாவில் விந்த்ய மலைக்கு வடக்கேயுள்ள பாதி பாகம் முழுவதையுமே கௌடதேசம் என்றும், தெற்கேயுள்ள பாதி முழுவதையுமே த்ராவிட தேசம் என்றும்தான் பிரிவினை செய்திருக்கிறது. அப்புறம் அந்த கௌடதேசத்தில் பஞ்ச கெளடம் என்பதாக ஐந்து பிரிவு, த்ராவிட தேசத்தில் பஞ்ச த்ராவிடர் என்பதாக ஐந்து பிரிவு எண்டு செய்திருக்கிறது. பஞ்ச கௌடர்கள் யார் யாரென்றால், வட கோடியில் ஸாரஸ்வதர்கள் என்னும் காச்மீரிகள், அப்புறம் பஞ்சாப், U.P. – க்களிலுள்ள கான்ய குப்ஜர்கள் நேபாளத்திலும் பிஹாரிலுள்ள மைதிலர்கள், உத்கலர்கள் என்று ஒரிஸாக்காரர்கள் – இந்த நாளும் போக ‘கௌடர்’ என்ற மூலப் பெயருடனேயே வங்காளத்திலுள்ள வங்காளிகள் ஆகியோர். பஞ்ச த்ராவிடர் யார் யாரென்றால் வடக்கே குஜராத்திலுள்ள கூர்ஜரரில் ஆரம்பித்து, மஹராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகர் ஆகிய நாலுபேரும் கடைசியாக, த்ராவிடர் என்ற மூலப்பெயருடனேயே உள்ள தமிழ் மக்களும் ஆவார்கள். (மலையாள பாஷை ஸுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்தான் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கலந்து ஏற்பட்டதால் மலையாளிகள் இதில் தனியாகச் சொல்லப்படவில்லை.) இதிலே ஒரு ஒற்றுமை, ‘கௌடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட வங்காளிகளும், ‘த்ராவிடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட தமிழர்களும்தான் மற்றவர்களுக்கு முந்தி இங்கிலீஷ் படிப்புப் படித்து வெள்ளைக்காரர்களிடம் குமாஸ்தாக்களாகப் போனவர்கள்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is விபரீதம் விளைந்தது!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  தப்பித்த சீடருக்குச் சாபமும் அநுக்ரஹமும்
Next