பௌத்தத்தின் மும்முனை ஆக்ஷேபணை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பௌத்தம் வைதிக தர்மத்தின் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை, ஞான ஸித்தாந்தம் ஆகிய மூன்றையுமே ஆக்ஷேபிப்பது.

ஆனாலும் இவற்றில் பௌத்தர்களின் ஸித்தாந்தம் ஞான ரீதியில் ஓரளவுக்கேனும் அத்வைத்தோடு ஒத்துப்போவதே. மாயைக் கொள்கை அவர்களுக்கும் உண்டு. மனஸை அப்படியே அழித்துப் போட்டுவிடுவதுதான் அவர்களுடைய நிர்வாண லக்ஷ்யமும். ஆனால் மனஸ் அழிந்தபின் ப்ரகாசிக்கும் ப்ரஹ்ம பூர்ணத்தைச் சொல்லாமல் சூன்யமாக அவர்கள் முடித்தவிடுவது பெரிய வித்யாஸம். இன்னும் சில வித்யாஸங்களும் உண்டு. அதெல்லாம் சொல்லிப் புரிய வைப்பதென்றால் கஷ்டமான பாடம் நடத்துகிறமாதிரி ஆகிவிடும். மொத்தத்தில் ஞான ஸித்தாந்தத்தில் நம் வேதாந்தத்துக்கு பௌத்தம் அடியோடு மாறுபட்டதல்ல.

பக்தி என்று எடுத்தால், ஸ்வாமி என்பதையே ஒப்புக் கொள்ளாததால் பௌத்தம் வைதிக தர்மத்திற்கு அடியோடு வித்யாஸமாயிருக்கிறது. கர்மா என்று பார்க்கும் போதும் யஜ்ஞாதிகள் கூடவே கூடாது, இன்னின்னாருக்கு இன்ன அநுஷ்டானம் என்று ஒழுங்குபடுத்தியுள்ள வர்ண தர்மமும் கூடாது என்றதால் அது வேத மதத்துக்கு அடியோடு ஆப்போஸிட்டாக இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பௌத்த கண்டனத்தில் மீமாம்ஸகர்களின் உதவி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கடவுட் கொள்கையை நிலைநாட்டியது
Next