தூவிரிய

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

தூவிரிய

திருவாலி: 2

பகவான், தம் மனத்தில் வந்து தங்கியிருந்தாலும் அவனை நேருக்கு நேர் கலந்து அநுபவிக்க ஆசைப்பட்டார் ஆழ்வார். பிரிவாற்றாமை காரணமாகப் பிராட்டியின் நிலையடைந்து தம் நிலையைத் தெரிவிக்கிறார்.

பிரிவாற்றாத தலைவி வண்டு முதலியவற்றை விளித்து இரங்கிக் கூறல்

தரவு கொச்சகக் கலிப்பா

வண்டே! திருவாலிப் பெருமானிடம் எனது நிலையை உரை

1198. தூவிரிய மலருழக்கித்

துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும்

பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும்

புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக்

கென்னிலைமை யுரையாயே. 1

வண்டே! மணவாளனிடம் என் காதலைச் சொல்

1199. பிணியவிழு நறுநீல

மலர்கிழியப் பெடையோடும்,

அணிமலர்மேல் மதுநுகரும்

அறுகால சிறுவண்டே,

மணிகெழுநீர் மருங்கலரும்

வயலாலி மணவாளன்,

பணியறியேன் நீசென்றென்

பயலைநோ யுரையாயே. 2

குருகே! மணவாளனிடம் குறிப்பறிந்து கூறு

1200. நீர்வானம் மண்ணெரிகா

லாய்நின்ற நெடுமால்,தன்

தாராய நறுந்துளவம்

பெருந்தகையெற் கருளானே,

சீராரும் வளர்பொழில்சூழ்

திருவாலி வயல்வாழும்,

கூர்வாய சிறுகுருகே!

குறிப்பறிந்து கூறாயே. 3

வண்டே! எனது நோயை மணவாளனிடம் சொல்

1201. தானாக நினையானேல்

தன்னினைந்து நேவேற்கு,ஓர்

மீனாய கொடிநெடுவேள்

வலிசெய்ய மெலிவேனோ?

தேன்வாய வரிவண்டே!

திருவாலி நகராளும்,

ஆனாயற் கென்னுறுநோ

யறியச்சென் றுரையாயே. 4

குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக

1202. வாளாய கண்பனிப்ப

மென்முலைகள் பொன்னரும்ப,

நாணாளும் நின்னினைந்து

நைவேற்கு,ஓ!மண்ணளந்த

தாளாளா! தண்குடந்தை

நகராளா! வரையெடுத்த

தோளாளா, என்றனக்கோர்

துணையாள னாகாயே! 5

கருடவாகனன் என் வளையும் கவர்வானோ!

1203. தாராய தண்டுளவ

வண்டுழுத வரைமார்பன்,

போரானைக் கொம்பொசித்த

புட்பாக னென்னம்மான்,

தேராரும் நெடுவீதித்

திருவாலி நகராளும்,

காராயன் என்னுடைய

கனவளையும் கவர்வானோ! 6

மணவாளா! என் கண்ணில் c உள்ளாயே!

1204. கொண்டரவத் திரையுலவு

குரைகடல்மேல் குலவரைபோல்,

பண்டரவி னணைக்கிடந்து

பாரளந்த பண்பாளா,

வண்டமரும் வளர்பொழில்சூழ்

வயலாலி மைந்தா,என்

கண்டுயில்நீ கொண்டாய்க்கென்

கனவளையும் கடவேனோ! 7

மணவாளா! ஒரு நாளாவது என்னைத் தழுவு

1206. நிலையாளா! நின்வணங்க

வேண்டாயே யாகிலும்,என்

முலையாள வொருநாளுன்

னகலத்தால் ஆளாயே,

சிலையாளா! மரமெய்த

திறலாளா! திருமெய்ய

மலையாளா, நீயாள

வளையாள மாட்டோமே. 9

இத்தமிழ்மாலை படித்தோரைத் தீவினைகள் சேரா

1207. மையிலங்கு சுருங்குவளை

மருங்கலரும் வயலாலி,

நெய்யிலங்கு சுடராழிப்

படையானை நெடுமாலை,

கையிலங்கு வேல்கலியன்

கண்டுரைத்த தமிழ்மாலை,

ஐயிரண்டு மிவைவல்லார்க்

கருவினைக ளடையாவே. 10

அடிவரவு: தூவிரிய HE நீர் தான் வாள் தாராய கொண்டு குயில் நிலை மையிலங்கு --- கள்வன்.












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கள்வன்கொல்
Next