அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும்

அன்னம் சுத்ரதமானால் எண்ணம் சுத்தமாகும்.

ஆஹார சுத்தே ஸத்-த்வ சுத்தி

இன்று நாம் படும் அநேக இன்னல்களுக்குக் காரணம் வெளிநாட்டுப்

பழக்கவழக்கங்களையே நாமும் காப்பி அடிப்பதுதான். இவற்றில் ஒன்று, பயிர்

பச்சைகளுக்க ரஸாயன எரு போடுவது, இந்த வழக்கத்தைவிட்டு இயற்கையான

எரு உபயோகிக்க ஆரம்பித்தாலே போதும், நம் தேசத்துக்கே விசேஷமான

ஞானத்தைத் திரும்பப் பெறுவதில் முன்னேறி விடுவோம்.

நம்முடைய மனசு, எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமானால், நாம்

உண்ணும் உணவு தூயதாக இருப்பது மிகவும் அவசியம். தானியத்தையும்,

காய்கறிகளையும் சமைக்கிற போதில் அவற்றில் பலவிதமாகத் தூய்மைக்குறைவு

உண்டாவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் இந்தத் தானியங்கள், அல்லது

காய்கறிகளே எப்படி விளைச்சல் செய்யப்பட்டன என்று கவனிக்க வேண்டும்.

ரஸாயன உரம் போட்டு விளைவிக்கும் பயிர் பச்சைகள் சுத்தக்

குறைவானவைதாம்.

பசும் சாணத்தை உரமாக உபயோகிப்பதுதான் நம் பழைய வழக்கம். பசு

ஸத்வ குணம் நிறைந்த பிராணி எனவே அந்த உரத்திலிருந்து விளைந்த பயிரும்

நமக்க பெருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கெமிகல் ஃபெர்டிலைஸருக்கு

மாறியிருக்கிறோம். மனசுக்கு அநுகுணமாக தேகத்தை வளர்க்கிற முறையே

இதனால் மாறிவிட்டிருக்கிறது.

தூய உணவு என்றால் நன்றாகத் தீட்டி, 'பாலிஷ், செய்த அரிசியை வெள்ளை

வெளேரென்று சமைத்துப்போடுவது அல்ல. பலவிதமான எச்சில், துப்பல்,

அநாசாரங்களைச் வெளெரென்று ஒரு லாண்டிரியில் துணியை வெள்ளை

வெளெரென்று ஆக்கிக் கொடுத்து விட்டால், அதை மடி என்ற வைத்துக்

கொள்வோமா? எனவே பார்வைக்கு வெளுப்பாக இருந்துவிட்டாலே ஒன்றை

நல்லது என்றோ தூயது என்றோ, ஆசாரமானது என்றோ சொல்ல முடியாது.

வெளியில் சுத்தமாகத் தெரிவது வேறு, உள்ளே புனிதமாயிருப்பது வேறு.

சமைக்கிறவனின் மனோபாவம், அவன் சமைக்கிற உணவில் இறங்கி, அதை

உண்பவன் உள்ளும் சென்று விடுகிறது. ஸத்வகுண அபிவிருத்திக்கு உதவுகிற

உணவுகள் என்று கீதை மற்றும் சாஸ்திரங்கள் சொல்லியுள்ள வஸ்துக்களைக் நல்ல

ஸத்சிந்தனையோடு சமையல் செய்துபோட்டால் அது போஜனம் செய்கிறவனுக்குச்

சித்த ஸ்துதியைக் கொடுக்கும். மற்றவர்கள் சமைக்கிறபோது வெளித்தூய்மை,

உள்தூய்மைகளை எவ்வளவுக்குத் கைக்கொள்கிறார்கள் என்று நாம் தீர்மானமாகத்

தெரிந்து கொள்வதற்கில்லை. அதனால் அவரவரும் தானே சமைத்துச் சாப்பிட

வேண்டும் என்று வைத்து, இதை "ஸ்வயம் பாகம்" என்று ஒரு உத்தமமான

விதியாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. பகவந்நாமங்களைச் சொல்லிக்

கொண்டே அவரவரும் சமைத்துச் சாப்பிடுவது என்று ஏற்பட்டால் ஸத்வகுணம்

தேசத்தில் வளர்ந்துவிடும். முன் காலத்தில் மோர் சிலுப்புவது சமைப்பது ஆகிய

சமயங்களில் பெண்மணிகள் ஏதாவது ஸ்தோத்ரங்கள் தெய்வ சம்பந்தமான

பாடல்கள் பாடியபடி தான் இருப்பார்கள்.

ஹோட்டல் சாப்பாடு என்று எடுத்துக் கொண்டால், அது தீட்டின அரிசி

போலவும், லாண்டிரி துணிபோலவும், வெளியே பார்த்தால் அழகாக, சுத்தமாக

இருந்தாலும் அதில் வாஸ்தவத்தில சாரமில்லை. உடம்பு, உள்ளம் இரண்டுக்கும்

அதில் நல்லதில்லை. போஜன சாலைகளில் சமைக்கிறவர் எப்பேர்ப்பட்ட

எண்ணங்களுடன் தம் காரியத்தைச் செய்வாரோ? நிச்சயமாக அவரக்கு அதைச்

சாப்பிடப் போகிறவரிடம் அன்பும் நல்லெணண்மும் பெருகப் போகிறதில்லை,

விற்பனை என்று வந்து விட்டால், உண்கிறவருக்கு வயிறாரப் போட வேண்டும்

என்ற எண்ணத்துக்குக்கூட இடமில்லை. சாப்பிடுகிறவனுக்கோ இன்னும் கொஞ்சம்

கேட்கக்கேட்க அதற்குப்பணம் கொடுத்தாக வேண்டுமே என்ற கவலையிருக்கிறது.

அதோடுகூட தான்நிறையச் சாப்பிட்டால் பக்கத்தில் உட்கார்ந்து உண்பவர் என்ன

நினைப்பாரோ என்று வேறு உண்பவருக்குச் கூச்சமாக இருக்கிறது. அதெல்லாம்

தவிர, ஹோட்டல் சரக்கில் என்னென்ன கெடுதல் இருக்குமோ? நிறையச் சாப்பிட்டு

விட்டால் அது வயிற்றைக் கெடுத்துவிடப் போகிறதே என்று பயம் வேறு.

வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் நிறைந்த மனதோடு சாப்பிடுவதே ஹோட்டலில்

முடியாமலிருக்கிறது. இதனாலெல்லாம் தான் சாதாரணமாக வீட்டில் ஐந்து, அறு

இட்லி சாப்பிடுபவர்கள் கூட ஹோட்டலுக்குப் போனால் இரண்டு இட்லிக்குமேல்

சாப்பிடாமல் வந்தவிடுகிறார்கள். உடம்புக்குப் போஷாக்கு தருகிற அளவுக்குக்கூட

ஹோட்டல் முதலான வெளியிடங்களில் சாப்பிட முடிவதில்லை சித்த சுத்திக்கோ

அது துளிகூட உதவுவதில்லை.

ஹோட்டலிலேயே (அல்லது அதுபோன்ற வெளிவிடுதிகளிலேயே)

சாப்பிட்டவர்கள், ஒரு வாரம் அல்லது பத்து நாள் நல்ல அக - புறச் சூழலில்

தயாரித்த வீட்டுச் சாப்பாட்டை பந்துக்களோடு சேர்ந்து ஆனந்தமாகச் சாப்பிட்டால்

தெரிந்து கொள்வார்கள், சித்தத்துக்கு எவ்வளவு தெளிவு பிறக்கிறதென்று.

வீட்டிலேயே மனைவி பரிமாறுவதைவிடத் தாயார் பரிமாறும் உணவுக்கு

விசேஷம் அதிகம்.

விந்தியமலைப்பகுதிக் காடுகளில் நான் யாத்திரை செய்துகொண்டிருந்தேன்.

நாங்கள் ஒவ்வொரு ராஜ்யத்து வழியாகச் செல்கிறபோதும், அந்தந்த ராஜ்யத்துப்

போலீஸ் கான்ஸ்டபிள்கள் எங்களுக்குத் துணை வரவது வழக்கம்.

மத்யப் பிரதேசத்துப் போலீஸ்காரர்கள் தாங்களே தான் ரொட்டி செய்து

சாப்பிடுவார்கள். நாங்கள் மடத்தில் சுத்தமாகத் தயாரித்து அவர்களுக்கு ரொட்டி

கொடுக்கிறோம் என்று எவ்வளவோ சொல்லியும் கூட, அவர்கள் அதை ஏற்க

மறுத்து, ஸ்வயம் பாகம்தான் செய்து கொண்டனர்.

விந்திய வனங்களில் எங்களுக்கு இவர்கள்தாம் முதலில் துணைக்கு

வந்தவர்கள், பிற்பாடு உத்தரப்பிரதேசம் தொடங்கிவிட்டது, ம.பி

போலீஸாரிடமிருந்து காவல் பொறுப்பை வாங்கிக்கொள்ள உ.பி போலீஸ்காரர்கள்

வந்தனர். அடுத்த முகாமிலிருந்து இவர்கள் 'சார்ஜ்' எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுவரையில் இரண்டு ராஜ்யங்களின் கான்ஸ்டபிள்களுமே சேர்ந்து எங்களோடு

வந்தனர்.

இரவு சுமார் பத்து மணி இருக்கும். எங்களுக்கு எதிரில் வனவிலங்குகள்

சஞ்சரிக்கத் தொடங்கின. உ.பி. கான்ஸ்டபிள் ஒருவன் தடியை தூக்கிக்கொண்டு

அவற்றை அடிக்கப் புறப்பட்டான்.

அவனிடம் அப்போது ம.பி போலீஸ்காரர்கள் கூறியது என் நினைவில்

என்றும் பசுமையாகப் பதிந்திருக்கும் "c யாரோடு போகிறாய் என்பதை நினைவு

வைத்துக்கொள். ஸ்வாமிஜியோட போகிறாய். எனவே மிருகங்களை அடிக்காதே.

வெறுமனே பயமுறுத்தியே அவற்றை அப்பால் மட்டும் விரட்டிவிடு" என்று

சொன்ன அவன் தொடர்ந்தான்.

ப்ராணியோம் ஸே ஸத்பாவனா ஹோ

"உயிரிணங்களிடம் நல்லெண்ணமே இருக்கட்டும்" என்று இதன் அர்த்தம்.

என்மீது விலங்கு பாய்ந்துவிடப்போகிறதே என்று கவலையில்தான் உ.பி.

போலீஸ்காரன் அதன் மேல் தண்டப் பிரயோகம் செய்ய இருந்தான். அந்தச்

சமயத்திலும்கூட வாஸ்தவத்தில் அதைத் தடியால் ஹிம்ஸித்துவிடாமல் தடியை

ஆட்டியே விரட்டும்படி ம.பி. கான்ஸ்டபிள் புத்திமதி கூறி, அவனைத் தடுத்தான்.

தடியால் ஒரு போடு போட்டிருக்க வேண்டியவன், சட்டென்று அதைப் பின்னுக்கு

இழுத்துக்கொண்டான். மிருகமும் ஓடிவிட்டது.

போலீஸ் படையில் இருந்தும் கூட இவ்வளவு அஹிம்ஸா சித்தம் அந்த

மத்தியப் பிரதேசக் கான்ஸ்டபிளுக்கு இருந்ததென்றால் அதற்கு அவனது ஸ்வயம்

பாகம் தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்று மக்களின் மனம் பல தவறான வழிகளில் சென்றிருப்பதற்குத்

தூய்மைக் குறைவான உணவு ஒரு மிக முக்கியமான காரணம். இனிமேலாவது நாம்

சீரிய சிந்தையும் ஸத்வ குண வளர்ச்சியும் பெறும் பொருட்டு ஸாத்விக உணவுப்

பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is புத்தாண்டு அருளாசியும் புண்ணிய காலங்களும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  வரதட்சணை
Next