அனுஷ்டானங்கள்

அனுஷ்டானங்கள்

இந்த உலகில் மனிதர்களைத் தவிர மற்ற ஒவ்வொரு ஜீவராசிகளும்

தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் காலைக்கடன்களை முடிப்பதோ, கடவுளைக்

கும்பிடுவதோ, கை கால்களைக் கழுவுவதோ கிடையாது. எழுந்தவடன் அப்படியே

எங்கு ஆகாரம் கிடைக்குமோ அதைத்தேடிச் சென்று விடுகிறது. மனிதன்

எழுந்தவுடன் அப்படிச் செய்வதில்லை. கைகால்களைக் கழுவி, காலைக்

கடன்களை முடிக்க விழைகிறான். ஒவ்வொரு மனிதனும் காலையில எழுந்தவுடன்

இரு கைகளையும் உரசிவிட்டு முன் பக்கம் வைத்து பார்க்க வேண்டும். அப்போது

நம் உள்ளங்கையில் மேல் பாகத்தில் லட்சுமியையும், மத்ய பாகத்தில்

சரஸ்வதியையும், கையின் முடிவில் துர்க்கா தேவியையும் நினைத்துக் கொள்ள

வேண்டும். இரவு தூங்கும்போது ஒய்வு கிடைக்கிறது. எல்லா உறுப்புகளும்

அடங்கியிருக்கிறது. காலையில் எழுந்தவுடன் உடம்புக்கு புதிய சக்தி கிடைக்கிறது.

அந்த உடலின் சக்தியை வெறும் பௌதிக சக்தியாக இல்லாமல் ஆன்மீக சக்தியாக

மாற பௌதிக சக்தி, ஆன்மீக சக்தியும் இணைந்து விளங்க வேண்டும்

என்பதற்காக காலையில் எழுந்தவுடனே ஆன்மீக சக்திவளர்ச்கிக்காக துர்க்கா,

லட்சுமி, சரஸ்வதி இந்த மூன்று சக்திகளை நினைத்துக் கொண்டு அத்யாத்மீக

சக்தியுடன் நம் வாழ்வு விளங்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்தவுடன் கால், கைகளை

கழுவிக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். நதி போன்ற ஓடும் நீரில், அல்லது

கிணற்றில் அல்லது குழாய் ஜலத்தில் உடல் நலம் குறைவாக உள்ளவர்கள்

வென்னீரில் சூர்ய, சந்திர கிரஹணம், அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில்

சமுத்ர ஸ்நானம் செய்யலாம். எதில் செய்யலாம். எதில் ஸ்நானம் செய்தாலும்

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, போன்ற புண்ய நதிகளின்

பெயரைச் சொல்லிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் ஸ்நானம் செய்யவேண்டும்.

கிணற்று குழாய் போன்றவற்றில் ஸ்நானம் செய்தால் புண்ணியமும் கிட்டுகிறது.

ஓடும் புண்ய நதிகளிலும், சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வது ஆயிரம் மடங்கு

புண்யம் கிடைக்கிறது. புண்ணிய நதிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு

ஸ்நானம் செய்யும் போது மனது புனிதம் அடைகிறது.

ஒவ்வொருவரும் ஸ்நானம் செய்தவுடன் முதல் நாள் சுத்தம் செய்து

உலர்த்தியிருந்த துணியை உடுத்திக் கொள்ளவேண்டும். அல்லது மடிசஞ்சியில்

வைத்திருந்ததை உடுத்திக் கொள்ளலாம், அல்லது அனஷ்டானம் பூஜை வரை

பட்டு வஸ்த்ரம் உடுத்திக்கொள்ளலாம். அல்லது அனுஷ்டானம் முடியும் வரை ஈர

வஸ்த்ரத்தை ஏழுமுறை உதறிவிட்டு உடுத்திக் கொள்ளலாம், மாலை வேளையில்

பழைய துணிகளை களைந்து விட்டு, கைகால்களை அலம்பிக்கொண்டு ஜலத்தால்

ப்ரோட்சணம் செய்த உடைகளை அணிந்து மாலை அனுஷ்டானம் செய்யலாம்.

விசேஷமாக பூஜை செய்யும் போது ஸ்நானம் செய்து விட்டு காலையில் உலர்த்திய

துணியை அல்லது பட்டாடை கட்டிக் கொண்டு பூஜை செய்யலாம்.

ஒவ்வொருவரும் ஸ்நானம் செய்து சுத்தமான உடையை அணிந்து கொண்டு

பிறகு குங்குமம், சந்தனம், திருநீறு ஏதாவது ஒன்றை நெற்றியில் இட்டுக் கொள்ள

வேண்டும் பிறகு அவர்களை சந்த்யாவந்தனம் நித்ய கடன்களைச்

செய்யவேண்டும். பஞ்சாட்சரம், அஷ்டாச்ரம் முதலிய நாமங்களை 108 தரம்

ஜபிக்க வேண்டும். 12 தடவை சூர்ய பகவானுக்கு ஒவ்வொரு பெயரைச் சொல்லி

சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். 1.மித்ராய நம, 2.ரவயே நம, 3. சூர்யாய

நம, 4.பானவே நம, 5. கசாய நம, 6.பூஷ்ணே நம, 7.ஹிரண்யகர்ப்பாய நம,

8.மரிசியே நம, 9.ஆதித்யாய நம, 10 ஸவித்ரே நம, 11. அர்க்காய நம, 12,

பாஸ்கராய நம, பிறகு பகவத்கீதை , ராமாயணம், தேவாரம், திருவாசகம் போன்ற

பக்தி நூல்களை பாராயணம் செய்யவேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சாப்பிடும் உணவு இனிப்பாகவும் அதிக உப்பு, காரம்

புளிப்பு இல்லாமலும் மிருதுவாகவும், எளிதில் ஜீர்ணமாக கூடியதாகவும்,

பகவானுக்கு நிவேதனம் செய்ததாகவும் இருக்க வேண்டும். உண்பதற்கு முன்பு

ஏழைகளுக்கு எதிர்ச்சையாக வரும் அதிதிகளுக்கு, சன்யாசிகளுக்கு உணவு

அளித்து விட்டு உண்ண வேண்டும். உண்பதற்கு முன்பு எல்லா பொருட்களும்

இலையில் வைத்தபிறகு ஜலத்தினால் சுற்றி கீழ்கண்ட ஸ்லோகங்களை

சொல்லவேண்டும்.

1.அன்ன பூர்ணே ஸதா பூர்ணே  ¢

சங்கர ப்ராண வல்லபே

ஞான வைராக்ய ஸித்தியர்த்தம்

பிக்ஷ£ம் தேஹிச பார்வதீ.

2. அஹம் வைச்வான ரஹ பூத்வா

ப்ராணி னாம்ட தேஹமாச்ரித:

ப்ராணபான சமாயுக்தோ

பசாம்யன்னம் சதுர்விதம்

என்று கை கூப்பி சொல்லிவிட்டு சாப்பிட வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is இறைவழிபாட்டின் பெருமை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  கர்மாக்கள்
Next