பொங்கல் நன்னாள் வாழ்த்து

பொங்கல் நன்னாள் வாழ்த்து

மனத்தில் உள்ள இருளை அகற்றுபவர் சூரிய பகவான். அவரை வழிபட்டு பொங்கல் திருநாளில் அருளைப் பெறவேண்டும்.

ஆறுவிதமான வழிபாடுகளில் சூரிய வழிபாடு முக்கியமானது. சூரிய வழிபாட்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும். பொங்கல், சங்கராந்தி என்று சொல்லக் கூடிய ஒரு பண்டிகை முதல்நாள் போகிப் பண்டிகையாகவும், மறு நாள் சூரிய பூஜையாகவும் உள்ளது. சூரியனுக்குப் பூஜை செய்வதன் நோக்கம். ஒன்று நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுத்து, நம்முடைய காரியங்களெல்லாம் செய்வதற்கு வழித்துணையாக நிற்பவர். இரண்டாவது ஆத்மஸ்வரூபத்தை அடைவதற்குச் சாதகமாக உள்ளனர். இருவகையிலுமே சூரிய பகவானை வழி படுகிறோம். புற இருளை அகற்றுவது சூரியன். மனத்திலுள்ள தீய எண்ணங்களை அகற்றுவது சூரியன். மனத்திலுள்ள தீய எண்ணங்களை அகற்றுவது சூரிய வழிபாடு. இப்படிப்பட்ட சூரிய பகவானை நாமெல்லாம் வழிபாடு செய்து பொங்கல் திருநாளில் அருளைப் பெற வேண்டும். 'க்ராந்தி' என்றால் செல்வது, வேகமாகச் செல்வது என்று பொருள், 'சங்கராந்தி' என்றால் மிகவும் தீவிரமாக இருப்பது என்பது. மார்கழி மாதம் வரை குளுமையாக உள்ள சூழ்நிலை மாறி சூரியனுடைய ஒளிமூலம் சூடு ஏற்படும். அதைத்தான் சங்கராந்தி என்கிறார்கள். நம்முடைய இந்தப் புண்ணியக் காலத்தை ஒட்டித்தான் ஆங்கில வருடமும் தொடங்குகிறது.

ஏதோ, நல்ல நாளிலே நல்லது செய்தால் அதனுடைய பலன் விசேஷமாகக் கிடைக்கும். ஆகவே ஒவ்வொருவரும் நல்ல நாளிலே நல்ல காரியத்தைச் செய்து, நல்ல பயனைப் பெற்று, நம்முடைய வாழ்விலே எல்லா நலமும் பெற வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is போகிப் பண்டிகை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  மகாமகம்
Next