அதர்வ வேதமும் அநுஷ்டானத்தில் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தற்காலத்தில், ஏன் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்தே, அநுஷ்டானம் அற்றுப் போய்விட்ட அதர்வவேதத்தைப் பதினோராம் நூற்றாண்டில் இந்தத் தமிழ்நாட்டுப் பாடசாலையில் பத்துப் போ் அத்யயனம் செய்திருக்கிறார்கள். கடிகைக் கதையை நான் ஆரம்பித்தபோதே ‘கல்பதரு’வில் அதர்வவேத வித்யார்த்திகளைப் பற்றியிருப்பதைத்தானே சொன்னேன்? இப்படியேதான் பாஹுரிலும்கூட அதர்வ வேத அத்யயனம் நடந்திருக்கவேண்டும். ஏனென்றால், நமது மதத்துக்கு ஆதாரமான பதிநாலு வித்யாஸ்தானங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் அந்த வித்யாசாலையில் இருந்ததென்பதால் இந்தப் பதிநாலில் ஒன்றான அதர்வ வேதமும் அங்கே போதிக்கப்பட்டுத்தான் இருக்கவேண்டும். காசாகுடி சாஸனத்திலிருந்தும் அதர்வ வேத அத்யயனம் அங்கே இருந்துவந்ததாகத் தெரிகிறது. எதனாலோ பிற்காலத்தில் அந்த வேதக்காரர்களும், அதைப் படிப்பவர்களும் மறைந்துபோயிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தமிழகத்தின் வேதக் கலாசாலைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பல சாஸ்த்ரங்களுக்கு ஆதரவு
Next