கிராமக் கலைகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வம்ச வாரியாகப் பூசாரி உடுக்கடித்து பாரதம் சொல்லிக்கொண்டு வருகிறானா? அப்படியானால் அதுவும் ஒரு கலை. அதுவும் ஒரு சாஸ்த்ரம். அது இந்தத் தலைமுறையோடு போகாமல் பிள்ளைக்கோ, இன்னொருத்தனுக்கோ அவன் சொல்லித் தருவதற்கு சாச்வதமாக திரவிய உதவி ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இப்படியே கரகம், பொம்மலாட்டம் எதுவானாலும் கோவில், தெய்வம், புராணம் ஸம்பந்தப்பட்டதாக இருக்கிற அந்த கிராமக்கலை (நம் தேசத்தில் கிராமக்கலை, நகரக்கலை எதுவானாலும் ஈச்வரனை மையமாகக் கொண்டதுதான்) நம் காலத்தோடு நசிக்காமல் அடுத்த தலைமுறைக்குப் போகும்படியாகச் செய்யுங்கள் என்று சொல்லிவருகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சில்ப சாஸ்த்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆசிரியர்களையும் உண்டாக்கவேண்டும்
Next