£ஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -11

ன்று வெள்ளிக்கிழமை அம்ம்பாளுக்கு உகந்த நாள். இங்கு க்ருபாகரோ என்று பாடினார்கள். இது நமது பிரார்த்தனை. நாம் செய்வது பிரார்த்தனை. தெய்வம் நமக்கு அருள்வது ஆசீர்வாதம். நல்லதை செய்வதற்கென்றே நமக்கு மனிதப்பிறவி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யவில்லை எனில் மனித வடிவில் மிருகங்கள் சஞ்சரிக்கின்றன மனுஷ்ய ரூபேண ம்ருகாஸ்சரந்தி என்ற கவியின் சொற்கள் உண்மையாகிவிடும். நல்ல காரியங்களைத்தான் செய்ய வேண்டும். ஈஸ்வர சம்பந்தமான செயல்களை செய்ய வேண்டும். உண்மை பேசுதல், பரோபகாரம் செய்தல், நல்லதை பேசுதல், கோபம், த்வேஷம், மதம், மாத்ஸர்யம் இல்லாமல் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். மனம், வாக்கு, காலம் என்று த்ரிகாண சுத்தமாக இருக்க வேண்டும். அடுத்தவர்கட்கு தீங்கு நினைக்காமல் இருப்பது மன சுத்தம். அடுத்தவரைப் பற்றி அபவாதம் பேசாமல் இருப்பது வாய் சுத்தம். சரீரத்தால் கெட்டது செய்யாதிருப்பது காய சுத்தம். பேசும் மொழியில் சுத்தமாக இருப்பது பாஷா சுத்தம். கர்வம் இன்றி இருக்க வேண்டும். இங்ஙனம் இருப்பின் சாந்தமாக இருக்கலாம். நமது நாடு புண்ணிய பூமி. இதனைக் கேவலம் மணணாகப் பார்க்கக் கூடாது. ம்ருத்திகே தேஹிமே புஷ்டிம் என்று எனக்கு பிரார்த்தனை செய்கிறோம். வழிபாடு தெய்வமாக பார்க்க வேண்டும். பூமிக்கு ரத்தின கர்பா என்று பெயர். ஆகவே பூமிக்கு வணக்கமும் மரியாதையையும் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியதைச் செய்தாலே போதும். தற்சமயம் இங்கு வந்தது போல் நீங்கள் அடிக்கடி இங்கு வர வேண்டும். நீங்கள் பிரார்த்தனையை '' லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து '' என்று செய்ய வேண்டும். மனதிற்கு வரும் கஷ்டத்திற்கு ஆதி என்றும் சரீரத்திற்கு வருவதற்கு வியாதி என்று பெயர். யாவரும் பகவத்கீதையை படிக்க வேண்டும். இதில் உணவிலிருந்து அத்வைதம் வரையில் சொல்லப்பட்டுள்ளது. ஸாத்வீக, ராஜஸ, தாமஸ ஆகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. மனமேவ மனுஷ்யாணாம் காரணம் பந்த் மோசனம் நமது மனம் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இறைவனிடத்தில் அசையாத பக்தி இருக்க வேண்டும். இந்த பக்தி எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

பிரத்யக்ஷமான தெய்வம் யார் எனக் கேள்வி கேட்டு அதற்கு தானே ஆதிசங்கரர் தாய் (மாதா) என பதில் அளித்துள்ளார். பண்டரீபுரம் என்று ஒரு இடம் உள்ளது. இது மஹாராஷ்டிராவில் உள்ளது. அங்கு ஒரு கதை. புண்டரீகன் என்பவன் தன் தாய் தந்தையர்க்கு சேவை செய்து கொண்டிருந்தான். பகவான் நேரில் வந்த போதும் தாய் தந்தையரின் சேவையை விடாமல் தொடர்ந்து, இரண்டு செங்கல்களை எடுத்துப்போட்டு அதன் மேல் பகவானை நிற்குமாறு கேட்டுக் கொண்டு தனக்கு வரமாக பகவானை அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டினான். அதே போல் பகவானும் இன்று வரையில் செங்கல்களின் மீது நின்று கொண்டு யாவர்க்கும் அருள் பாலித்து வருகிறார்.

குரு முகமாக எல்லா நல்லவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு தான தருமங்களை தேசே காலே ச பாத்ரே ச என்று நல்ல காலத்தில் சத்பாத்திரத்திற்கு நல்ல தேசத்தில் செய்ய வேண்டும். தானத்தை தானம் பரிய வாக் ஸஹிதம் இனிமையான சொற்களுடன் கர்வமில்லாமல், தான் அளிக்கிறேன் என்ற மமதை இல்லாமல் அளிக்க வேண்டும். நாம் பக்தி செய்தாலே கூட நல்ல பலன் கிட்டும். நீங்கள் யாவரும் காலை மாலையில் 108 தடவை உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜபம் செய்து புண்ணிய தீர்த்தங்களையும் «க்ஷத்திரங்களையும் நினைத்து நாமஸ்மரணம் செய்து திடமான பக்தியுடன் ஏகாக்ர சித்தத்துடன் எப்போதும் பக்தியுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தித்து பசுக்களாகிய நாம் யாவருக்கும் பதியாகிய பசுபதியினை தரிசித்து நலம் யாவும் வாழ்வில் கிட்டி வாழ ஆசீர்வதிக்கிறோம்.

(23-01-97 கீழ் திருப்பதி தியாகராஜ மண்டபத்தில் ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் -10
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 12
Next