காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -5

  ம்முடைய தர்மம் மிகவும் பழமையானது. இதற்கு ஸனாதன தர்மம் என்று பெயர். ஏஷ தர்ம ஸனாதன : மனிதப் பிறவி எடுத்த யாவரும் ஞானியாக இருக்க ஆசை வைக்க வேண்டும். இதற்கு ஈஸ்வர பக்தி, குரு பக்தி, ஸதாசாரம் ஆகியவை தேவை. இவை நல்ல பழக்க வழக்கங்களைக் கொடுக்க வல்லது. சாஸ்திரங்களில் செய்யச் சொன்ன கர்மாக்களை தாமாகச் செய்தல், செய்யச் சொன்னதை செய்யமால் விடுதல், செய்யக் கூடாது என தவிர்த்ததை செய்தல் ஆகியவற்றினை தவிர்கக வேண்டும். நமக்கு என விதிக்கப்பட்ட தர்மத்தினை பக்தியுடன், சிரத்தையுடன், நம்பிக்கயுடன் செய்ய வேண்டும். கர்வமில்லாமல், வினயத்துடன், அடக்கத்துடன் செய்ய வேண்டும். இந்த நிலை வர பூஜை, த்யானம் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மந்திர சித்தி கிட்டுகிறது. நல்லவர்களாக இருக்க நினைத்தால் சுகம் கிட்டுகிறது. தரித்தரமும் போக்கடிக்கப்படுகிறது. இவையாவும் உலகத்திற்குப் போதுமானது. தக்ஷிணாமூர்த்தி உயர்ந்த ஞானத்தை அளிக்கிறார். தான் பேசாமல் மௌனமாயிருந்து கைமுத்திரையினாலேயே விளக்கி அருளுகிறார். என்னே ஸ்வாமிகளின் கருணை பகவானுக்கு கங்காதரர் என ஒரு பெயர் உண்டு. உத்தேசம் தனக்காக மட்டும் இருக்கக் கூடாது. எண்ணத்தில் ஆழமும் விசாலமும் இருக்க வேண்டும். இதனைத்தான் பகீரதனின் கதை விரிவாக சொல்கிறது. நினைத்தாலே புண்ணியத்தை அளிக்கக் கூடிய கங்கையின் பெருமை விளக்கப்படுகிறது. பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து விஷ்ணுவின் பாதத்திற்கு வந்து, சிவபிரானின் தலைக்கு வந்து பின் ஒன்று மகரிஷியின் காது வழியாக வெளி வந்து உலகத்தை பாவனம் செய்து கொண்டிருக்கிறது கங்கை. உலக நன்மைக்காகவே சிவ பெருமான் தலையில் கங்கையினை தாங்கிக் கொண்டு கங்காதரராக அருள் பாலிக்கின்றார்.

பாற்கடல் கடைந்து போது எழுந்த கொடிய விஷத்தை அருந்தி உலகத்தினைக் காப்பாற்றி நீலகண்டன் எனப் பெயர் பெற்றார் சிவபெருமான். ஈஸ்வரன் முடியில் சந்திரன், கழுத்தில் பாம்பு, நல்லதை கொண்டாடத் தெரிய வேண்டும். தோஷங்களைத் தடுக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் உலகிற்கு எடுத்துக்காட்டவும் இவர் கருணாமூர்த்தி என்பதற்காகவும் ஏற்பட்ட கோலம் இது. பக்தி பண்ணினால் கருணை ஏற்படும். இந்த பக்தியானது ஸதாசாரத்தால் தான் முடியும். பவித்ரமான தேகம் என்று சொன்னால் மட்டும் போதாது. உடலும் உள்ளமும் பவித்ரமாகவே இருக்க வேண்டும். ஈஸ்வர பக்தி செய்து நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் தவறாமல் செய்து வர வேண்டும். ஸதாசாரம், ஈஸ்வர பக்தி, ஞானம் கிட்ட ஆசீர்வதிக்கிறோம்.

(11-03-96 அன்று சென்னையில் ஆற்றிய உரையின் சாரம்.)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 4
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 6
Next