திருமுகத்தலை

திருவிசைப்பா

திருமுகத்தலை

பன்னத்தெரு

தஞ்சை மாவட்டத்திலுள்ள தலம்.

மக்கள் வழக்கில் பன்னத்தெரு என்று வழங்குகிறது. திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சாலையில் 4 A.e சென்று 'கொக்காலடி' என்னும் ஊரையடைந்து, அங்கிருந்து மானாச்சேரி (மாராச்சேரி) பாதையில் 3 A.e. செனர்றல் திருமுகத்தலை - பன்னத்தெரு கோயிலை அடையலாம்.

மணல்பாதை ஒத்தையடிப்பாதைதான். பெரிய பேருந்துகள் சற்று கவனமாகச் செல்ல வேண்டும்.

மதுரை திருஞாநசம்பந்தர் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட திருக்கோயில். முகலிங்கம், பண்டைநாளில் முகத்தலைலிங்கம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. அம்மகத்தலைலிங்கம் அமைந்துள்ள தலம். இதுவே பிற்காலத்தில் முகத்தலை என்றாயிற்று என்பர். இதற்கேற்ப கோயிலின் உட்பிராகாரத்தில் முகலிங்கம் ஒன்றுள்ளது. கோயில் சாலையோரத்திலேயே ஊர்த்தொடக்கத்திலேய உள்ளது. கோயிலுக்கு வெளியில் உள்ள பகுதி 'முகத்தலைக் கோட்டகம்' எனப்படுகிறது.

கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பதிகம் பெற்றது.

இறைவன் - பன்னகாபரணேஸ்வரர்.

இறைவி - சாந்தநாயகி.

தலமரம் - புன்னை, கோயிலுக்கு எதிரில் திருக்குளம் உள்ளது.

பன்னகாபரணேஸ்வரர் வீற்றிருக்கும் தலமாதலின் பன்னத்தெரு என்று ஊரக்குப் பெயராயிற்று என்பர். சிறிய கோயில், சுற்றிலும் பசுமையான சூழல்,

முகப்பில் சிமெண்டு கூரை போடப்பட்டுள்ளது. முன்னர் நந்தி, பலிபீடம் உள்ளன. நேரே பார்த்தால் மூலவர் தரிசனம் கிடைக்கிறது. முன்மண்டபத்தில் வலப்பால் புன்னை மூலவர் தரிசனம் கிடைக்கிறது. முன்மண்டபத்தில் வலப்பால் புன்னை (தல) மரம் உள்ளது. மரத்தின்கீழ் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வாயிலைத் தாண்டி பிரகாரத்தில் சென்றால் (இடப்பக்கமாக) பூச்செடிகள், வாகன அறை. அடுத்து விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், திருமுகத்தலை நாதர் என்னும் சிவலிங்கமூர்த்தம் (முகத்தலை லிங்கம்) காட்சியளிக்கிறது. பக்கத்தில் மகாலட்சுமி, அடுத்து பைரவரும், சனி பகவானும், சம்பந்தர், சுந்தரர், அப்பர் சந்நிதிகள் உள்ளன.

வலம்முடித்து, வெளவால் நெத்தி மண்டபம் புகுந்து உட்சென்றால் வலப்பால் அம்பாளின் - சாந்தநாயகியின் அற்புத தரிசனம் கிடைக்கிறது. நின்ற திருக்கோலம் - மனத்திற்குச் சாந்தி தரும் காட்சி.

நேரே மூலவர் - பன்னகாபரணேஸ்வரர், பெயருக்கேற்ப வெள்ளி நாகாபரணம் சார்த்தப்பட்டுப் பிரகாசிக்க ஒளிர்விட்டுக் காட்சியளிக்கிறார். முழுக்கவசத்தில் தரிசிக்கும் அழகே தனியழகு - திருநீற்றுப்பட்டை ஜ்வலிக்கிறது.

ஆதீனத்தின் மேலாளர் ஒருவர் அங்கிருந்து கொண்டு கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார். நல்ல பராமரிப்பு.

நித்திய வழிபாடுகள் குறைவின்றி நடை பெறுகின்றன.

மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டக்களில் இடம் பெற்றுள்ள இத்தலத்தில், கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட செய்திகள் தெரியவருகின்றன.

இத்தலம் மிகவும் உள்ளடங்கியிருப்பதால் யாத்திரை செல்வோர் முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டுச் செல்வது நல்லது.


"புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே

பூரணா ஆரணம் பொழியும்

பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்

பசுபதீ பன்னகாபரணா

அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்தடியேன்

அகத்திலும் முகத்தலை மூதூர்த்

தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்

தனியனேன் தனிமை நீங்குதற்கே."


"என்னையுள் பாத பங்கயம் பணிவித்து

என்பெலாம் உருக c எளியவந்து

உன்னையென் பால்வைத்து எங்கும் எஞ்ஞான்றும்

ஒழிவற நிறைந்த ஒண்சுடரே

முன்னையென் பாசம் முழுவதும் அகல

முகத்தலை அகத்தமர்ந்து எனக்கே

கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும்

கனியுமாய் இனிய ஆயினையே".


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பன்னகாபரணேஸ்வரர் திருக்கோயில்

பன்னத் தெரு

மாராச்சேரி அஞ்சல் - (வழி) பாமணி 614 711

திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திரைலோக்கிய சுந்தரம்
Next