விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பதாவது- தூர்வைமகத்துவம் சைவவேதியனானமதுசூதனன்முனந்தன்னைப்பழித்தசுலபன் றனெருதவன்மனைபுலைச்சியாகச்சொல

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பதாவது- தூர்வைமகத்துவம்

சைவவேதியனானமதுசூதனன்முனந்தன்னைப்பழித்தசுலபன்

றனெருதவன்மனைபுலைச்சியாகச்சொலத்தையலவனைக்கரமதாய்

வைவுற்றவாறுதித்துழவன்வண்ணான்புலைச்சேரியிடமாய்வதியுநாண்

மழையடைவினாலவையருங்குசேர்ந்தைங்கரன்மந்திரத்தார்ப்புவுறுவர்

நைவுறடிக்கவலமாகவோடினதுமவிலங்கின்வாய்நாரிகைப்புல்

நழுவவதனைக்காற்றெழுப்பலின்விநாயகர்நன்முடிதனைச்சார்ந்ததும்

கைவிட்டவூணுமந்நாட்சதுர்த்தியதாற்கருத்திசைச்சபரியாயக்

கடவுணாட்டருளினான்மூவரும்பெறலருங்கதியடைந்தனர்களன்றே

இதன் சரித்திர சங்கிரகம்

அவந்தியெனும் பட்டணத்தில் சுபத்திரா தேவி நாதனான சுலபனெனும் வேந்தன் அரசியற்று நாளில் சிவபத்தியிற் சிறந்து மிக வுந்தாரித்திரனாய்ப் பிச்சைக்குவந்த, மதுசூதனனென்னும் வேதியனைக் கண்டு அவ்வரசனவமதிப்பாக நகைக்க அவ்வேதியன் கோபித்தரசனையெருதாகச்சபிக்க அதற்கவ்வரசன்றேவி அவ்வேதியனைக் கழுதையாகவும் அவ்வேதியனைக் கழுதையாகவும் அவ்வேதியின் அவ்வரசியைப் புலைச்சியாகவும் மொருவர்க்கொருவர் சபித்தவாறே, அரசன் உழவனிடத்திலும், வேதியன் வண்ணானிடத்திலும், இராஜபத்தினி புலைச் சேரியிலுமாக, வுதித்திருக்குநாளில் அம்மூன்று பிராணிகளும் மிகுந்த மழையடைவால் அவ்வூர்க்கடுத்த விநாயகராலயச் சார்பாகச் சந்தித்து ஒன்றினையன்றுதைத்ததாலு முட்டினதாலுமுண்டானவமலைக்காற்றாது, அன்று விநாயக சதுர்த்தியாதலால் சந்தியா பூஜை நிறைவேற்றி ஜபஞ்செய்திருந்த முனிவர்கள் ஆலயப்புறம்பாக அடித்துத்துரத்தியும் மழைத் தடையால் அவைகள் அக்கோயிற் பிரகாரத்துட்சுற்றி வருகையில் அவ்வெருதுங்கழுதையும் அப்புலைச்சியின் சுமையினின்றும் பிடுங்கிவாயிற்குதட்டுகையிற் சிந்தின புல்லும் அவள் கையிற் கொண்டிருந்த புல்லுங்காற்றினா லெழும்பி யச்சன்னிதிக் கடவுட்டிருமேனியிற் சாத்தப்படலும் அதுகண்டு அவ்வாராதியர்கள் விழுப்பு நேர்ந்து விட்டதென்று அக்கடவுளுக்கும் பாபிடேகஞ் செய்தனர். முன்காற்றினாற்படிந்த மூன்று புற்களும் பின்னாக நேர்ந்த அபிஷேகமும் அப்பிராணிகள் செய்ததாகவும், பிரகாரத்துள்வெருண்டுசுற்றியோடினதுவலம் வந்ததாகவும், ஆகாரமில்லாதிருந்தது உபவாசமாகவும், ஒப்புக்கொண்ட அக்கடவுளது பெருங் கருணையால் அச்சதுர்த்தி தினத்தில் உயிரிழந்த அம்மூன்று பிராணிகளுந் தேவவுருவம் வாய்ந்து விமானாரூடம் பெற்று புண்ணியலோகமடைந்தன.

***********************************************************************