விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்துநான்காவது- தூர்வைதுவிலையேற்றல் முதிர்நண்பனாங்கவுண்டினியமுனிவனைநோக்கிமுந்தொரறுகாற்றிரிசிரன் ம

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்துநான்காவது- தூர்வைதுவிலையேற்றல்

முதிர்நண்பனாங்கவுண்டினியமுனிவனைநோக்கிமுந்தொரறுகாற்றிரிசிரன்

முழுச்செல்வனாகநிதமயுததூர்வார்ச்சனையின்முற்றுமிடிபெற்றதென்னென்

றெதிர்வினவுதேவியங்கையிலோரறுகினையெடுத்தீந்திவ்விடையிந்திர

னிடைசென்றுபொன்கொணர்தியெனவேகியவனிசைவினெழில்குபேரற்சார்ந்தவண்

கதிர்செய்பொற்குவைபலநிரப்பிடுநிறைக்கறுதட்டெழக்காண்கிலானாய்க்

காதலியடவனேறுபின்பயனொடிந்திரன்கார்வணன்கண்ணுதற்கோன்

சதிரெரடத்துலையினேறியுமவிதமுறவதிசயித்தமாதவனிடம்போய்ச்

சகலருமீவற்புகழ்ந்தமரர்வளனுதவிதத்தம்பதமடைந்தாரரோ

இதன் சரித்திர சங்கிரகம்

தாபர மென்னும் நகரைச் சார்ந்த தோர்சோலையிற் றவஞ் செய்பவரும் தமதாச்சிரமத்தில் கணேசமூர்த்தியை பிரதிஷ்டை செய்து பிரதி தினம் பதினாயிரம் அறுகினைக் கொண்டர்ச்சனை செய்பவருமான கவுண்டின்யமுனிவரை ஆசிரியையென்னுமவர் பத்தினியார் மிதுலாபுரி அந்தனுக்கோர் தூர்வையால் அகண்ட பாக்கிய முதவின கடவுள் அவனினும் விசேடமாய்த் தூர்வை கொண்டர்ச்சித்தும் நமக்கவ்வாறளியாதி திருப்பதேனென வினவலும் அது கேட்டம் முனிபுங்கவர் புன்னகை கொண்டு தூர்வையின் மகிமையை பலருமுணர்ந்து பவித்திரராகும்படி தமர்ச்சித் தவற்றுளோர் தூர்வையை யெடுத்து இதனை இந்திரனிடத்திற்றந்து அவன்றருமதனிடைக்கான பொன்னைக் கொண்டுவாவென்று கொடுத்தனுப்ப, அதனையேந்தி சொர்க்கத்திற் சென்று அவ்வாசவனோடுரைத்தவுடன் பத்திமைமிக்கானாயவ்விருஷிபத்தினியை மிகவும் பூஜித்து சில தூதவருடன் கூட்டிக் குபரேனிடத்திற்கனுப்ப அவ்வளகேசன்பணிந்து அவ்வறுகினையோர் துலையிலிட்டு அதனிடைக்குத் தன்பாலுள்ள பொற்குவையோடு தன்னகரத்துள்ள பொருள்களையுமிட்டு துலையவ்வாமல்மனைவியுடன் தானு மத்துலையிலேறியும் அத்தூர்வைதட்டெழாமையாக, அவ்வற்புதத்தைக் கேள்வியுற்று ஆங்கடைந்த இந்திரனும் அவ்வாறே தன்னகரத்துள்ள பொருள்களையுமிட்டு இந்திராணியுடன் அவனும்துலையிலேறியும் அஃதவ்வாறாகவே கண்டு அவன் தியானித்தழைக்க வந்த திரிமூர்த்திகளுந் தம்பதிசமேதராய் தத்தம்பரிஜனங்களோடு அத்கட்டிலாரோகணித்து அத்தூர்வை தட்டு நிலத்தூடிருக்கக் கண்டதற் பின், அக்கவுண்டின்ய முனிவரிடத்திற்கனைவருமாகச்சென்று அவர் தவத்தின் மகிமையையும் அறுகின் பெருமையாயும் புகழ்ந்து, அத்தூர்வையையணியும் விநாயமூர்த்தி பத்தர்களில் நீரே சிரேஷ்டனாமெனத் திரிமூர்த்திகளுங் கொண்டாடி அவர்க்குக் கற்பகவிருக்ஷம் காமதேனு முதலியவெல்லா மேவல் செய்யத் தக்கதாக அமைத்ததுடன் தங்கள் தங்கள் சுயேச்சையாயனந்தவரங்களையு மனுக்கிரகித்துச் சென்றனர்.

***********************************************************************