விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தைந்தாவது - வன்னிமகத்வம் கணடகர்களானசாம்பன்சொறுற்புத்தியுங்காவலனமைச்சனென்னக் கடைப்படுநெறிக்கொடுவ

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தைந்தாவது - வன்னிமகத்வம்

கணடகர்களானசாம்பன்சொறுற்புத்தியுங்காவலனமைச்சனென்னக்

கடைப்படுநெறிக்கொடுவிதற்பநாடாண்டுவருகால்வேட்டையாடிமீண்டோர்

தண்டலையினமர்வரதகணபதிநிகேதனஞ்சார்ந்துகனிநைவேதனஞ்

சமர்ப்பித்துமேற்பத்திசெய்தேகுபின்சினாடனிலிறந்தெமயாதனை

யெண்விடர்விதத்தனுபவித்தபின்வனசரனிராக்கதனெனச்சனித்தே

யிகலியருவனையருவனனிதுரந்தெதிரினேர்ந்தேறுசமிமரமதிர்தரற்

கொண்டளமிரண்தன்கீழ்ப்பொலிவுறூஉம்விநாயகருபயவடியின்மேவ

வுவப்பொடர்ச்சித்தவாறாயவர்க்கெந்தையினிதுதவினன்சாலோகமே

இதன் சரித்திர சங்கிரகம்

விதற்பதேசாதிபதியான புண்ணியகீர்த்தியெனு அரசன் வேதாகமங்களில் வலலவனாகியும், தண்ணிய கொடையை யுடையவனாகியும், அளவற்றயாகங்களை முடித்தவனாகியும், சத்துருக்களை நாசஞ்செய்து நாட்டிய வெற்றிக் கொடியை யுடையவனாகியு மிருந்தனன் அவன் மதவனாவதியெனும் நாயகியுடன் வாழ்ந்தரசாண்டு புத்திரப் பேறில்லாமல் வாழ்நாள் முடிவெய்தி அரசியும் அனுமரணஞ்செய்ததன் மேல் அமைச்சர் அவ்வரசன் ஞாதியானதுத்திரிடராஜன் மனைவி சோரத்துவமா யோர்வலைஞனுடன் கூடிப்பெற்ற குமாரனான சாம்பனை அரசனாகவைத்ததன் மேல் அவன்கள்ளுண்டல், உயிர்க்கொலை செய்தல், பரஸ்திரீகளைப் புணர்தல், பிறர்பொருளைக் கவர்தன், முதலிய பாதகங்களைச் செய்து செங்கோன்மையிற்றவறித்தன் தீயவொழுக்கத்திற்கிணங்காத அமைச்சர்களைச் சிறையிலிட்டு தனக்கிணங்கிடந்த துற்புத்தியெனு மந்திரி முன்னிலையில் சர்வாதிகாரமும் நடத்தி வருகையில், ஒர்நாளம் மந்திரியுடன் சொன்று வேட்டையாடி மீள்கையில் வசிஷ்டராற் பிரதிஷ்டை செய்யப்பட்டதாயும், தசரதராஜன் தசாக்ஷர மந்திரத்தை உபாசிக்கப் புத்திரப்பேறருளினதாயும், விளங்கும் வரதகணபதி சன்னிதானத்துள் நுழைந்து அவண் பூஜித்துக் கொண்டிருக்கும் அன்பர்களைக்கண்டு தானுமந்திரியுமாகக் காட்டிற்பறித்து வந்த காய்கனிகளை விளையாட்டா அக்கணேசமூர்த்திக் கெதிரேவைத்து நிவேதித்துப் பிரதக்ஷணஞ் செய்து நகரிற் சேர்ந்த சின்னாட்பின்னரிறந்து அனந்தவிதமான யமதண்டனைக்குள்ளாக வருந்தியனுபவித்து நின்ற பாபசேடத்தினால் அவ்விருவர்களுமொருவர்க்கொருவர் சத்துருத்துவமானவையாய்ப் பக்ஷி, மிருக முதலான பலவகைப்பட்ட ஜனனமெடுத்து, கடையில் அவர்களிலொருவன் விதர்ப்பத்தைச் சார்ந்த ஆதேய நகரில் வீமனெனும் வேடனாகி, தீமையேயன்றி நன்மையென்பதைச் சிறிதுமறியாதவனாய் எந்நாளும் வழிபோக்கர்களையெல்லாம்மடக்கிப் பொருள் பறித்தும், மிருகங்களையலறக்கொன்று அவைகளை விலைக்குமாறியும், வாழ்ந்து வருகின்ற நாளையில் அவ்வூர்த் திருவிழாவிற்கு வந்து திரும்பின பிராமணர்களை வழிமறித்துப் பொருள்களைப் பறித்துக் கொண்டு கொலை செய்தவுடன், மற்றொருவன் அவ்வந்தணரைக்கொன்ற பிரமஹத்தி அவனைப் பிடித்தது போல கொலையிலவனிலுஞ் சிறந்தவனாகியும், வலியில், மதயானையையத்தவனாகியும், நிறத்தில் பொன்மைகலந்த மேனியையுடைய இராக்கதனாய் மானைத் தொடர்ந்து செல்லும் வேங்கையைப் போலவந்து அவ்வேடனைத்துர்த்த அது கண்டு அவனஞ்சியோர் வன்னி

மரத்தேறுகையில் அவ்விசையாலுதிர்ந்த வோரிலை யதனிடத்தெழுந்தருளியிருந்த வாமன விநாயகமூர்த்தி திருவடியிலும், பின்றொடர்ந்தேறின அரக்கனாலுதிர்ந்த மற்றோரிலை யவர் முடியிலுமாகவீழ, அவ்விருவர்களுமொருவரோடொருவர் இறுகப்பிணித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்திறந்தவுடன், வன்னிப்பத்திரத்தாற் றம்மையர்ச்சித்ததாகப்பாவித்த கணேசர்த் திருவருளால் அவர்கள் விமானாரூடராய் விநாயகசாலோக மடைந்தனர்.

இதனால் விநாயகக் கடவுளைப் பூஜித்தற்கு பலவகை பூஜா திரவியங்களிருந்த போதிலும் அறுகே சிரேஷ்டமெனவும், அவ்வறுககப்படாத காலத்தில், வன்னிமந்தாரமாமெனவும், அவற்றுள் வன்னியையன்றி பூசித்தால் அப்பூஜை பயன்படாதெனவும் குறித்தன.

ஆதியிலரசனாயிருந்த போது ஓர் நாள் மந்திரியுடன் வரதகணபதி கோயிலை வலம் வந்த புண்ணியம் இச்சென்மத்திலவர்களை வன்னிமரத்தேற்றுவித்து சிவபதமடைதற்கேதுவாக்கின.

***********************************************************************