விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் முப்பத்தேழாவது- விண்டு-வாமனராயுபாசித்து இரணியாக்கன்பேரனாயுமினனாலொர்முடியேய்ந்திடுவிரோசனன்ற னினியபுதல்வ

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

முப்பத்தேழாவது- விண்டு-வாமனராயுபாசித்து

இரணியாக்கன்பேரனாயுமினனாலொர்முடியேய்ந்திடுவிரோசனன்ற

னினியபுதல்வனுமானவரசாளுமாவலியிணையிறேவேந்த்ரபோகம்

பொருண்மையாய்வேட்டசுவமேதமூன்றுறழுழுப்பான்மூன்றினளவுபுரியும்

போதுணர்ந்தலமரீஇகுறையோதுவாசவன்புன்கண்டவிர்க்குமாறு

தருணவெழில்வாமனனெனாவதிதிமாதவந்தனிலவரித்தநெடுமாற்

றாமுனம்பூஜித்தசமிவிநாயகர்சனிதிசார்ந்தேத்தியுறுவரத்தான்

முரணியலுசுரர்கோன்பாலேற்றபூதானமூவடிதனக்குமண்விண்

முற்றுமீரடியாயளந்தோரடிக்கவன்முடிவைத்துபிலமுய்த்ததே

இதன் சரித்திர சங்கிரகம்

இரணியாக்கன் பேரனான மாவெலியென்பவன் (சூரியனிடத்திற்றவத்தாற் பெற்ற சொர்ணகிரீடந்தரித்து இரணியகசிபனுக்குப் பின்னர் அரசாண்டிருந்த தனது பிதாவான விரோசனன் காலமடைந்த பின்பு) மனுநீதி தவறாது செங்கோற் செலுத்தி வருகையில்-ஞாதியாகிய தேவேந்திரனையப்ப சதக்கிருது முடிக்கிற்போக பாக்கியங்களை அனுபவிக்கலாகுமெனச்சுக்கிரனாற் சொல்லக் கேட்டு அவ்வாறே தொண்ணூற்றொன்பது யாகமும் நிறைவேற்ற-அதை இந்திரனறிந்து மனங்கலங்கி வைகுண்டபதியாகிய விஷ்ணுவை வணங்கி முறையிட்டுக் கொண்டதன் மேல்-அதற்கவர் நேர்ந்து அக்குறையை முடிக்க வேண்டி தம்மைப் புத்திரனாகப் பெறத்தவஞ் செய்திருந்த அதிதி வயிற்றில் சதுர்ப்புஜங்களும் காயாம்பூநிறமுடன் வாமனராயவதரித்து வளர்ந்து பிதாவால் விநாயகர் சடக்ஷர மந்திரோபதேசம் பெற்று விதர்ப்ப தேசத்தைச் சார்ந்த ஆதேய நகரத்தில் முன்தம்மாற் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த வன்னி விநாயகரையடைந்து ஓர் வருட பரியந்தம் உபாசித்து வருகையில் கஜமுகராய் தசாஸ்தம் விளங்க மயில்வாகனத்தின் மேற் கணேசர் பிரசன்னமாகி வேண்டினவரங்களைத்தரப் பெற்றுமீண்டு-நூறாவதஸ்வமேத யாகத்தை செய்து கொண்டிருக்கும் அம்மாவலியிடஞ் சென்று தவஞ் செய்தற்கென்றிரந்து மூன்றடிநிலம் தானமாக வழங்கப்பெற்ற-திருவிக்கிரமராய் விஸ்வரூபங்கொண்டு விண்ணையு மண்ணையு மீரடியாகவளந்து மற்றோரடிக்கு அம்மாவலிசிரசில் தமது பாதத்தைவைத்து அவன் பாதலலோகத்திற் செல்லும்படி அழுத்தி-இந்திரன் குறையை முடித்தனர்.

விண்டு-வன்னி விருக்ஷத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து பூஜித்தால்-வன்னிவிநாயகர்-விண்டு விநாயகரெனவும், பின்னர்-அம்மூர்த்தியிடம் வாமனராகச் சென்று பூஜித்ததால்-வாமன விநாயகரெனவும், வழங்குகின்றன.

***********************************************************************