விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தாறாவது- இராவணனுபாசித்தது இலங்கைநகரெக்காலுமழியாமனிலைபெற்றிடக்கைலைதனின்மாதவ மியற்றியவிராவணனுமேச

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தாறாவது- இராவணனுபாசித்தது

இலங்கைநகரெக்காலுமழியாமனிலைபெற்றிடக்கைலைதனின்மாதவ

மியற்றியவிராவணனுமேசரானல்கிடுமிலிங்கமவணிறுவவெணிகைத்

தலங்கொடுநடந்தேகுபாதஃதுணர்ந்தச்சதக்கிருதுநெஞ்சமஞ்சிச்

சாற்றுமுறையேற்றொரிவேதியனாய்க்கணேசர்வருணனையேவியெதிர்சார்தலும்

நிலந்தொடவொணாதென்னவேண்டிக்கரத்துய்த்தநிருதனீர்க்கேகிவருமு

னிமலன்முக்காற்கூவியச்சிவக்குறியைமண்ணிடவவனுநேர்ந்துநொந்து

பலங்கொண்டமட்டிழுத்தேலாமையாலுருத்தப்பகவனொடுபகைத்துப்

படாப்பாடுபட்டபின்பெரிதேத்மலரடிபணிந்துபதிபுக்கினானால்.

இதன் சரித்திர சங்கிரகம்

இலங்கைக்கரசனாகிய இராவணன் - எல்லா வுலகங்களுமழியுங் காலத்தினு - மிலங்காபுரி யழியாதிருக்கத்தக்கதாக-வரம்பெற வேண்டி கைலயங்கிரிக்குச் சென்று-அரியதவஞ் செய்ய-சிவபெருமான் பிரத்தியக்ஷமாகி-அவன் வேண்டின வண்ணமெய்த-வோர் சிவலிங்கங் கொடுத்தருளி-இதை-மார்க்க மத்தியில்-பூமியிண் கண் வைக்கப்படாதென்றும், வைத்தால் நிலத்தூடழுந்திவிடுமென்றும், வாகனத்தேறாது கொண்டு போயிலங்கையிற் பிரதிஷ்டை செய்து பூஜித்து வரக்கடவையென்றும், கட்டளையிட்டருளப் பெற்று மீண்டு அச்சிவலிங்கத்தைக் கரத்திலேந்திச் செல்கின்ற காலையில் அதை இந்திரனறிந்தினி தேவகணங்களுக்கு இடருழக்க நேருமென்றலமரலுற்ற-மிகவும் பிரார்த்தித்ததற்கு இரக்கமுற்ற கணேசர்-அவ்விராவணன்-ஜலோபாதையால்-சகிக்கக் கூடாமல் வருந்தத்தக்கதாக-வருணனைக்கொண்டு அவன்

வயிற்றில் நீரைச் சுரப்பித்து-தாமோர்பிராமணப் பிள்ளை வடிவங் கொண்ட-டவனுங் கெதிராககவர-கண்ட இராவணனவ்விலிங்கத்தை தான் ஜலஸ்பரிசத்திற்குப் போய் வருமளவும் வைத்திருக்கும் படி வேண்டிக்கொள்ள-அதற்கியைந்தனை-தமது திருக்கரத்தேந்தும்போ-தவனுடன் கூறின படியே முக்காலவனைக் கூவி-நிலத்தில் வைத்தவிட-விரைந்தோடி வந்த இராவணன்-தன்னாற் கூடின மட்டும்-இருபது கைகளாலும் தூக்கியும்-தூக்கப்படாமல்-மண்ணைத் தோண்டியும்-அஃதூடுருவி நிற்கக் கண்டு-மனவருத்தமுற்று-மீட்டுக் தனது பூரண வலியுடன்-கரங்களாற் பாய்ச்சியிழுத்ததற்கு-அச்சிவலிங்கம்-கைக்கு வராமற்-பசுவின் காது போற்குழைந்து பிரகாசித்ததால்-அவன் கோபங்கொண்டு-அப்பிராமணப்பிள்ளை சிரமீதிற்குட்ட, உடனே அவ்வடிவமாறி-தமது சொருபத்தைக்கொண்டு-அவனைத் துதிக்கரத்திலெடுத்து-அண்ட- முகட்டிற்படவீசியும், திருவடிகளால் பாதலத்தழுந்தும் படியாகவும்-என்புகணெரிபட நிலத்தில் வீழவுமாகத், தள்ளுகையில்-அவன் சகிக்கக்கூடாமல்-உயிர்பிச்சைநல்குதியெனப் பலவாறேலமிட்டுத்துதி செய்ததன் மேல்-திருவுளமிரங்கி நிலத்தில் விட்ட- பின்னர்-அவ்வவுணேசன்-திவ்யபுஷ்பங்களால் திருவடிகளையர்ச்சித்து-வேதாகமங்களால் துதித்து-தன்தலையிற் குட்டிக்கொண்டு பணிந்து அக்கடவுளால் பலவரங்களையும் பெற்றிலங்கைப் பதியையடைந்தின் புற்றிருந்தனன்.

இராவணன்-தனதிருபதுகரங்களைப் காய்ச்சியிழுக்கையில்-அச்சிவலிங்கம் பசுவின் காது போற் குழைந்து பிரகாசித்த காரணத்தால்-அத்தலம்-கோகர்ணமெனவும், வலியுடன் பற்றியிழுததற் கச்சிவலிங்கம்-பேர்க்கப்படாமற் போனதை நோக்கிமஹா பலமுள்ளதென-வியந்துரைத்த-அவ்வரக்கன் வாக்கின்படியே-மாபலிங்கமெனவும், அத்தலமூர்த்தநாமம் வழங்குகின்றன.

***********************************************************************