விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 5 கஜானனர் ஈடிலாநான்முகன்கொட்டாவிவருசிந்துராசுரற்கஞ்சியிமையோ ரேத்தவுமையம்மைகருவுற்றவவுணற்சதியினெய்துசிர

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

5. கஜானனர்

ஈடிலாநான்முகன்கொட்டாவிவருசிந்துராசுரற்கஞ்சியிமையோ

ரேத்தவுமையம்மைகருவுற்றவவுணற்சதியினெய்துசிரமின்றிவெளிவந்

தாடலேறழகரச்சனைபுரிமயேசனாமரசர்கோன்யானைத்தலை

யங்கேற்றுவிகடரென்றணிகயிலைதன்னிலரியாதனத்தமரர்சூழப்

பீடுபெறவீற்றிருந்துழிவலிதினிற்போர்க்கெதிர்ந்தவப்பிரபலவசுரன்

பெற்றுளவரத்தின்முடிபாய்ந்துவான்றுருவுமோர்பேருருக்கொண்டுவண்டா

ரேடவிர்கடுக்கைக்கியற்படவற்பற்றியின்றேய்வையிற்குழைத்தங்

கெழினுதற்சிந்துரமதாயணிகஜானனரெனும்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

முன்னொரு காலத்தில் பிரமதேவன் கொட்டாவி விட-அதினின்றுந் தோன்றின வோரசுரன் புத்திரனெனு முரிமையால் தனக்குப் பெயரும் இடமும் நியமிக்கும் படி கேட்க-அவ்வாறே சிந்துரனெனும் பெயராய்-மூவுலகத்து ளிச்சித்த விடங்களி- லிருக்கவும்-எதிர்த்தவர்களை கையாற் றழுவினவளவி லவர்களிறக்கவுமான-பலவரங்களைப் பிரமன் கொடுக்க-அதைப் பெற்றுக் கொண்டு பூலோகத்திற்கு வந்த பின்-தவமின்றிக் கிடைத்ததால் ஐயங்கொண்டு சோதிப்பானாக-பிரமனை யடைந்து தழுவச் செல்ல-அதை பிரமன் கண்டு கோபித்து-விநாயகராலவனழியத் தக்கதாகச் சபித்துக் கரந்து-விஷ்ணுவிடத்தில் தன் குறை சொல்லி நிற்கையில்-அச்சிந்துரன்-அவ்விஷ்ணுவைத் தேடி வந்து யுத்தத்திற்கழைக்க-அவர் இதவார்த்தையாடி-உருத்திரமூர்த்தியிடஞ் செல்லும்படி சொல்ல-அவனும் அவ்வகையே கைலையை நோக்கிச் சென்று அங்கு உருத்திர மூர்த்திகள் யோகநிலையிலிருந்தனராக-அவர் தேவியாரைக் கண்டு காமுற்றெடுக்க எண்ணங்கொண்டு நெருங்க-அதையறிந்தவர் முறையிட-உருத்திரமூர்த்திகளும் யோகம் விட்டெழுந்து அவனெதிர் செல்ல-சிந்துரன் அவரைத் தழுவ நெருங்கும் போது-கணேச ரவ்விருவரிடையிலோரந்தணராய்த் தோன்றி நின்று தமது மழுவை நடுவே நாட்டி அவ்விருவரையு நோக்கி மல்யுத்தஞ் செய்வதை விட்டு வேறு யுத்தஞ் செய்மின்களெனச் சொல்ல அவ்வாறே ய்வ்விருவரும் யுத்தஞ் செய்யுங்கால்-சிந்துரன் மீறி-முன் போற்றழுவப்போகையில்-அவனைப் போகவொட்டாதுமழுதடுக்க-அதுபோதில் உருத்திர மூர்த்திகளோடு யுத்தஞ்செய்யலாகாதென்று-விநாயகராகிய அந்தணரும் அச்சுறுத்த-அது கேட்ட வனஞ்சியகன்ற பின்னர்-உமாதேவி-யவ்வந்தணரைப் பார்த்து-நீராரென-அவர் தமது திருவுருக்காட்டி-இனி சிந்துரனையழிக்கும்படி குமாரனாக-உமது திருவயிற்றுவருவோ மென்றருளிப் போயினர்-பின்பு பிரமன் முதலியோர்-சிந்துரன் செய்யுங் கொடுமைக் காற்றாராய் கணேசமூர்த்தியைப் பிராத்திக்க தாம் கஜானனராயவதரித்துச் சிந்துரனைக் கொல்வதாக அவர்களுக்குத் திருவாக்கருளி-உமா தேவியார் திருவயிற்றில் கருவாகப் பிரவேசித்து வளர்ந்து வருநாளில்-அவரக்கருவாலுண்டாகிய வெப்பந்தணிய-பூமியில் பரியலி எனும் வனத்தில்-உருத்திரமூர்த்திகளோடு சென்று-அவணமைத்த இரத்தின மண்டபத்தில்-வசித்திருக்கும் நாளில் மயேசுரனென்னு மோரரசன்-சிவபக்தியிலும் நீதியிலும் சிறந்தவனா யரசுபுரியுங் காலத்தில்-பிரகல்பதி தேவர் அங்கு வரக்கண்டு-அவ்வரசனவரை வணங்கிற்க-அதற்கவர் மகிழ்ந்து-உன்றலை-தேவர் முனிவர் முதலியயாவராலும் வணங்கப்படுவதாக வென்றாசீர்வதித்துச் சென்றனர்-பின்பொருநாள்-அவ்வரசன் தன்னகரை விட்டு சேனைகளோடு செல்ல-அங்கு நாரதர் எதிராகவரக் கண்டு-அவன் வந்தனை வழிபாடு

செய்யாமையைக் குறித்தவர் சபித்தவாறே-யானைக்குழத்துள் கஜமுகாசுரனென அவணுதித்திருக்கையில் ஓர் நாள் அம்மண்டபத்தைக் கோட்டினால் அவன் முட்டியெடுத்து நிலத்தில் விழத்தள்ளலும்-அம்மையஞ்ச-உருத்திரமூர்த்திகள் சூலத்தாலவன் றலையத்த் துணிக்க-அப்போது-அவன் முட்டியெடுத்து நிலத்தில் விழத்தள்ளலும்-அம்மை- அஞ்ச-உருத்திரமூர்த்திகள் சூலத்தாலவன் றலையை துணிக்க-அப்போது-அவன் சிவாயநம வென்று சொல்லி நிலத்தில் வீழ்ந்தது கண்ட வரிரங்கி-அவனுக்கு சாரூபபதமளித்து-அது முதலாய்-கிருத்திவாசரென அவன் தோலையரையினுடுத்தி-சிரசை வைத்து பூஜித்து வந்தனர்-அது நிற்க-அச்சிந்துரன்-எல்லா வுலகங்களையும் அதப்படுத்தினக்கெதிரில்லையென அகங்கரித்திருக்கும் நாளில்-அசரீரியால்-தனக்கிறுதி செய்ய கணேசர் உமாதோவியார் திருவயிற்றில் வளர்வதாகச் சொல்லக் கேட்டு-அங்கு சென்றவர் கழுத்தியிருக்குந்- தருணமறிந்து-வாயுவடிவாயுண்ணுழைந்து அக்கருவின் சிரசைக் கொய்து-விந்தமலைக்கடுத்த நருமதை நதிதீரத்தில் வைத்துச் சென்றனன்-பின்னர் அக்கரு-சிரமிழந்தும் அவ்வாறே வளர்ந்துவர-உமா தேவியாரும்-பத்துத் திங்களு நிரம்பி கைலைக்குச் சென்றனராக-அங்கு-கணேசர்-பஞ்சமுகத்தோடும் சித்தி புத்தி சமேதரா யுமையம்மையார்க்கு தரிசனை கொடுத்து-நாமுமக்குப் புத்திரராயினோமென்றுரைத்தருளி மறைந்தவுடன்-மஹாதேவியார் மயங்க-அங்கே சிரசில்லாத தோர் குழந்தை பிறந்திருக்கக்கண்டு-அம்மை வருந்தி நிற்க-உருத்திரமூர்த்திகளை மற்றைத் தேவர்களும் வந்து கண்டு கவலைமிக்கராகி-அவர்கள் காண வேண்டி ஓராதனத்தின் மீதமர்த்தினவுடன்-அக்குழவி-தமது சிரமிழந்த காரணத்தைக் கூறி-உருத்திரமூர்த்திகளாற் பூசித்திருந்த யானைத் தலையை தாமேவரச் செய்து-தமது திவ்விய வுடலோடு சேர்த்தருளி கஜானனராயெழுந்தருளியிருக்கும் சமயத்தில்-வந்தமர்க்கழைத்த அவ்வசுரனை-விஸ்வரூபங் கொண்டு துதிக்கரத்தாலெடுத்து-சாந்தாகக் குழைத்து தமது மத்தகத்திற் பரிமளிக்கப்பூசி-தேவர்களிடுக் கண் தொலைத்தருளினர்.

***********************************************************************