விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 8 கணபதி எழின்முகுங்கையுய்யானத்தொர்மண்டபத்திறைவியடுமீசனோர்நா ளெய்தியச்சுவரினுறுமேழ்கோடிமனுவுளங்கேற்றமார

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

8. கணபதி

எழின்முகுங்கையுய்யானத்தொர்மண்டபத்திறைவியடுமீசனோர்நா

ளெய்தியச்சுவரினுறுமேழ்கோடிமனுவுளங்கேற்றமார்குடிலைநாப்ப

ணுழுவலாய்ப்பிடியும்பல்பணர்பாவனையையவர்களுய்த்தநோக்காலெழின்மிகு

மொருவேழமுகமுடனுதித்துக்கணங்கட்கெலாந்தலைமையாகியும்பர்

தொழுதேற்றிடற்கருள்சுரந்தவர்களினலறத்தோன்முகாசுரன்மார்பிறத்

துணிநுனிமருப்பேவுபின்னுமாகுருவொடத்துன்னலன்மன்னவூர்ந்து

பழியுற்றமாயவற்கரவுருவகற்றியளிர்பரிசன்யபீடவெள்ளிப்

பருப்பதமுதற்கோபுரத்தருகமர்ந்தகணபதிபிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

ஒரு காலத்தில் - இந்திரனோடு போருக்குச் சென்ற அசுரேந்திரன்-தோற்றோடி வந்து மானம் வருத்த-அதனா லவனை வெல்லும் பொருட்டோர் சூக்ஷியை நினைத்து - விபுதையெனும் அசுரகன்னிகையை-மரகதமுனிவரிடத்திற் சென்று அவரை வலுவினணைந்தோர் பிள்ளையைப் பெற்று வரும்படியனுப்ப-அவளுமவ்வாறே யம்முனிவரிடம் போய்த்-தன்னழகைக் காட்டி-அவரை மயங்கச் செய்வித்து யானையுருக்கொண்டிருவரும் புணர-அப்பொழுது யானை முகத்தோடும் கஜமுகாசுரனென்பவன் பிறந்தான்-அவன்-பரமசிவனை நோக்கி தவஞ் செய்து-இறவாவரம் பெற்று-மூவுலகத்தினும் தன்னாணை செல்லவும்-தேவர்களெல்லாம் தன்னேவல் கேட்கவும் அரசு செலுத்தி வருநாளில்-தேவர்களை-தன்னிடத்திற்கு வருந்தோறும்-முக்காலும் தங்கள் தலைகளை-தன்னிடத்திற்கு வருந்தோறும்-முக்காலும் தங்கள் தலையிற் குட்டிக்கொண்டு-இரண்டு கைகளாலு மிரண்டு செவிகளையுமாறிப் பிடித்து குந்தி யெழுந்திருக்கும் படியாகவும் விதிக்க-அவ்வந்தனத்தையும் நடத்திவரும் தேவர்கள் - ஒருநாள் அத்துன்பத்தை சகிதயாதவர்களாய் கயிலாயத்திற்குச் சென்று சிவபெருமான் சன்னிதானத்தில் முறையிட - அதற்கிரங்கி-அக்கஜமுகனைச் சங்கரிப்பிப்பமென அனுக்கிரகித் தனுப்பிவிட்ட பின்னர்-ஓர் நாள்-அக்கயிலைச் சாரலிலிருக்கும் உய்யானத்திற்கு பார்வதியாருடன் சென்று - அதன் மத்தியிலிருக்கும் ஓர் மண்டபத்தில் - திருவோக்கமா எழுந்தருளியிருக்கும் போது-அவ்டத்திய சுவர்த்தலத்தி லெழுதியிருந்த மந்திர வடிவங்களான சித்திரங்களுள்-பிரணவாகாரமாக விருந்த ஆண்யானை பெண்யானை வடிவத்தோடும் - புணர்ச்சி செய்திருக்கும் பாவனையாக வெழுதியிருப்பதை-உமாதேவியார் பார்க்க-சிவபெருமானும் பார்த்தருள-அதனிடத்தினின்றும் யானை முகத்தோடும் விநாயகமூர்த்தி திருவதாரஞ் செய்து-மாதாபிதாக்களை வந்து வணங்க-அக்குமாரனை எடுத்து மடிமீதிருத்தி-எல்லாக் கணங்களுக்கும் தலைமை பெற்றிருந்து கிருபை வழங்குக-அதனால் யாவரும் கணபதியென்று சொல்லுக-எவ்வகைப்பட்ட கருமங்களினும் யாவரும் உன்னை முன்னதாக வணங்குக-கஜமுகாசுரனை சங்கரித்து தேவர்களைக்காத்தருள்க, என்று திருவாய்

மலர்ந்து அவணீங்கி கயிலாயத்திற்குச் சென்று-முகவாய்தலில் அமர்த்தினது முதலாங்கெழுந்தருளியிருக்குங் காலையில்-தேவர்கள் வந்து வணங்கி-தங்கள் துயரத்தை நீக்கியருள வேண்டுமெனப் பிரார்த்தித்து நிற்கலும்-சிவபெருமான் கட்டளைப்படி-பூதகணங்களுடன் அசலனென்னும் பூதசேனாதிபதி தோளின்மீ தாரோகணித்து-மதங்க நகரஞ்சென்று-அவண்வந்தெதிர்த்த கஜமுகாசுரன் வில்லைக் கதாயுதத்தாற் கண்டித்து சேனைகளையெல்லாம் மழுவாயுதத்தாற் சாம்பராக்கினபின்-அவன்

பெற்றிருக்கும் வரத்தை யோசித்து தமது வலக்கோட்டின் முனையை யடித்தேவலும்-அதனால் அவன் மார்பு பிளக்கப்பட்டு-மேருகிரி யடியோடே பெயர்ந்து

விழுந்தது போல நிலத்தில் வீழந்த பின்னர்-அக் கஜமுகாசுரன் மலைக்கு நிகரானவோர் பெருச்சாளி வடிவங் கொண்டு யுத்தத்திற்கு வர - ஸ்வாமிகளும் ஒடித்த கொம்பினையோ ராயுதமாகத் தமது திருகரத்திலேந்தி-அம்மூடிகத்தை அசைவற்ப் பிடித்து முதுகிலா ரோகிணித்தருளினர். அந்த யுத்தகளத்தில்-கணபதி மூர்த்தியும்-சிவபெருமானது இருபத்தைந்து மூர்த்தங்களுளன்றாகிய சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தனர்-அது தான் கணபதீச்சுரமெனப்படும்-பின் கணேசப்பெருமான் ஆகுவாகனாரூடராய் தேவகணம் பூதகணங்கள சூழ-வடதீவினை நோக்கி எழுந்தருளி வருகையில்-முன்னொரு பகலில் சிவபெருமானும் உமாதேவியாரும் விஷ்ணுவைச் சான்றாக வைத்து கருவிச் சூதாடு கையில்-பெருமான் தோர்க்கவும் பிராட்டி தோற்றதாக விஷ்ணு கூற-அம்மையதற்கு சினந்து சபித்தது முதல்-அங்ஙனம் குருட்டு மலைப்பாம்பாக ஒ ராலமரப்பொந்திலிருந்த விண்டுவானவர்-அவ்வடிவத்தினின்று நீங்கி பழயபடி தெய்வரூபம் பெற்று-கணபதி மூர்த்திக்கெதிர் சென்று நமஸ்கரித்து-பலவாகத் துதி செய்ததற்கு வந்து-கணபதிமூர்த்தி வேண்டின வரங்களை யவர்க்கு வழங்கி-தம்மோடழைத்துக் கொண்டு கயிலாயத்திற்கெழுந்தருள-அவ்விடத்தில்-தேவர்கள் மகிழ்ந்து-கஜமுகாசுரனுக்கு தாங்கள் முன்னடப்பித்து வந்த தோப்புக்கரணம் குட்டிக் கொள்ளுதலெனும் வந்தனங்களைச் செய்ய-அதற்கு ஸ்வாமிகளும் கருணை செய்து வேண்டும் வரங்களை நல்கி-இவ்வாறு யாவர் செய்யினும் அவர்களுக்குத் தமதனுக்கிரகம் பாலிப்பாமெனத்திருவாய் மலர்ந்தருளினர்.

***********************************************************************