ஸ்ரீ சங்கர மடம், வைதீஸ்வரன் கோயில்
பிரபலமான நகரங்களான சீர்காழி மற்றும் மாயவரம் நகரங்களின் இடையே சிதம்பரம்-கும்பகோணம் அரசு நெடுச்சாலையில் அமைந்திருக்கும் நகரம் வைதீஸ்வரன் கோயில். பிரசித்திபெற்ற வைதீஸ்வரன் கோயில் ஸ்தலம் சாதுக்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் மற்றும் காலமேகபுலவர் போன்றோரின் தெய்வீக இன்னிசையால் புனிதமடைந்த "பாடல் பெற்ற ஸ்தலம்". பல பக்தர்களின் தீர்வில்லாத பிணிகள் வியக்கத்தக்க வகையில் குணமாவதே இத்திருகோயிலின் தனிச்சிறப்பாகும். அதனாலேயே திருகோயிலின் மூர்த்தி வைதீஸ்வரன் என்று பொருத்தமான பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறார். கோயிலை சுற்றி சுமார் 20 தீர்தங்கள் உள்ளன. புகழ்பெற்ற இத்திருகோயிலின் அருகிலேயே அமைந்திருகிறது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீ சங்கர மடம். 1976 மற்றும் 1989 இல் சிறிய நிலத்திலே உருவாக்கப்பெற்ற ஸ்ரீமடம் தற்போது ஷேத்த்ரங்களுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு ’யாத்ரி நிவாஸாக’ செயலாற்றி வருகிறது. பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் இங்கு வருகை தரும்போது மடத்தில் தங்கிருந்து பூஜையை நடத்துவார். யாத்ரீகளின் வசதிக்காக ஸ்ரீமடத்து கட்டிடம் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தொடர்ப்பு கொள்ள விவரம்:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம்
அம்மன் சன்னதி தெரு, வைதீஸ்வரன் கோயில்
நாகை மாவட்டம் 609117
தமிழ்நாடு
போன்: 94866 28810.
.
வைதீஸ்வரன் கோயில் மற்றும் அருகிள் உள்ள நகரன்களுக்கு இடையில் உள்ள துரம்
இங்கு இருன்து துரம்
சீர்காழி 6 Kms
மயிலாடுதுரை 10 Kms
சிதம்பரம் 24 Kms
கும்பகோணம் 55 Kms
தஞ்சாவூர் 110 Kms