ஶ்ரீமடத்தில் "மாட்டு பொங்கல்" மிக விசேஷமாக கொண்டாடப்பட்டது
16 ஜனவரி 2012

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கரசார்ய ஸ்வாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிஜியின் பரிபூரன அனுக்ரஹத்துடன் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் மாட்டு பொங்கல் 16 ஜனவரி 2012 அன்று மிக விஷேமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் ஶ்ரீமடத்தின் கோசாலையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட பசுக்களுக்கு பிரத்தியேகமான பூஜைகள் நடத்தப்பட்டது.

நித்ய சந்த்ரமௌலீஸ்வர பூஜையின் ஒரு பகுதியாக கோ பூஜை ஸ்ரீமடத்தில் தினசரி நடைபெறுகிறது. பசுவின் முக்கியதுவத்தை பற்றி பண்டைய வேத நூல்களில் பல குறிப்புகள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் "கோசூக்தம்" அமைந்திருக்கிறது. அனைத்து தேவர்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம். ஶ்ரீ ஆதி சங்கராசார்யாள் அருளிய பிரஷ்னோத்தரா ரத்ன மாலிகாவில் "நம்முடைய தாயானவள் யார்?" என்ற கேள்விக்கு "பசு" என்று பதில் கூருகிறார். நம் சனாதனமான இந்து தர்மத்தில் மட்டும் அல்லாது, பசு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது. ஶ்ரீமடம் பல இடங்களில் கோசாலைகள் அமைத்து அன்பும் அக்கறையும் கொண்டு பசுவை பேணிக்காக்கின்றது. குறிப்பாக பயனில்லாத பசுக்களை காக்கும் முயற்சியாகவும் செயல்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்