விஜயதசமி - ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலுக்கு விஜயம் – 24 அக்டோபர் 2012

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் விஜயதசமி அன்று மாலை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்தார்கள். தங்க த் தேரில் எடுத்து வரப்பட்ட உற்சவ காமாக்ஷி அம்பாளிடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர், தீப ஆராதனை செய்து ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளுக்கு கோவில் பிரசாதம் மற்றும் மரியாதை செய்யப்பட்டது.  வழக்கப் படி நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் மங்க ள வாத்தியம்  முழங்க தேவி காமாக்ஷி குறித்து  கீர்த்தனை வாசித்தார்கள். ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் வித்வான்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். 


மேலும் செய்திகள்