ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்

“மூளைப்பகுதி பலம் பெற”
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

மூளைப் பகுதி பாதிப்படைந்துள்ளதை இது காட்டுகிறது. Cerebellum எனும் மூளைப் பகுதி, உடல் நேராக நிமிர்ந்து உட்காருவதற்கும் நிற்பதற்கும் உதவுகிறது. காய்ச்சலால் ஏற்படூம் மூளை பதிப்பு முதுகுத் தண்டுவடத்தின் உள்ளே அமைந்துள்ள spinal coro பகுதியையும் பாதிக்கிறது. நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்துள்ள இந்தப் பகுதிகளில் ஏற்படும் எந்தப் பாதிப்பும் நரம்புகளின் கட்டுப்பாட்டைச் செயலிழக்கச் செய்கின்றன. அவ்வாறு நிகழும்போது உடல் சோர்ந்து கை கால் பகுதிகளில் தள்ளாட்டத்தை ஏற்படுத்துகின்றன. காய்ச்சல் விட்டுவிடும். ஆனால் அது ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு மிகவும் கடுமையானது.
மனிதருக்கு புத்தி சக்தியானது மிகவும் இளங்குழந்தைப் பருவத்தில்தான் வேகமாய் வளருகின்றது. இந்தத் தத்துவத்தை அறிந்து, இயற்கைக்கு அதிக உதவி செய்ய வேண்டும் என்று குழந்தை பிறந்தது முதலே அறிவாற்றலை வளமாய் வளர்க்கும் பல மருந்துகளை காச்யபர் எனும் முனிவர் உபதேசித்திருக்கிறார். மூளைப் பகுதியை முக்கியமாக பாதித்திருக்கும்  குழந்தைக்கு அம்மருந்துகள் உதவிடக்கூடும்.

  1. சுத்தமான அம்மியில் சொக்கத்தங்கக் கட்டியைச் சிறிது தாய்ப்பால் சேர்த்து அரைத்து, அதில் பசு நெய்யும் தேனும் சில துளிகள் சேர்த்து நன்றாய்க் கலந்து குழந்தைக்குக் கொடுக்கவும். அம்மா கிழக்கு முகமாய் உட்கார்ந்து குழந்தையை வடக்கு பக்கமாய் தலையிருக்கும்படி மடியில் படுக்க வைத்து ஊட்டுவது சம்பிரதாயம். இது குழந்தையின் புத்திக்கும் உடலுக்கும் வலிவூட்டும். நல்ல நிறத்தைத் தரும். மங்களகரமானது.
  2. பிராம்ஹீ, வல்லாரை, திரிபலை (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) சித்திரமூலம், வசம்பு, சதகுப்பை, தண்ணீர்விட்டான் கிழங்கு, தந்தீமூலம், நாகபலா வேர், சிவதை வேர் இவை யாவும் அறிவாற்றலையும், நல்ல நினைவாற்றலையும் வளர்க்கும் மூலிகைகள். இம்மருந்துகளில் பலதும் சேரும் சாரஸ்வத சூர்ணம் ¼ ஸ்பூன் (1.25 கிராம்), பிராம்ஹீகிருதம் (நெய் மருந்து) ½ ஸ்பூன், தேன் ¼ ஸ்பூன் ஆகியவற்றைக் குழைத்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று தடவை நாக்கில் தடவிவிடவும். இது மூளைப் பகுதிக்கு நல்ல பலத்தைத் தரும். இம்மருந்துகள் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை கடைகளில் கிடைக்கும்.
  3. பிராம்ஹீ, வெண்கடுகு, வெண்கோஷ்டம், இந்துப்பு, நன்னாரிவேர்ப்பட்டை, வசம்பு, திப்பிலி இவற்றால் தயாரித்த பசு நெய்க்கு அபயகிருதம் என்று பெயர். மூளையைச் சார்ந்த நரம்புகள் வலுப்பட இது மிகவும் நல்ல மருந்தாகும். இரவில் குழந்தை தூங்குவதற்கு முன்பாக சிறிய அளவில் கொடுக்கலாம்.
மூளைப் பகுதியின் வளர்ச்சியுடன் உடல் பகுதியும் வலுப்பட ‘நவரக்கிழி’ எனும் வைத்திய முறையை குழந்தைக்குச் செய்வது நல்லது. சித்தாமுட்டி எனும் செடியின் வேரை பாலுடன் வேகவைத்து, அந்தப்பாலில் நவரை எனும் அரிசியை வேகவைப்பார்கள். உடலில் லக் ஷாதி குழம்பு எனும் தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவி நீவிவிட்ட பிறகு ‘நவரைத் தேய்ப்பு’ செய்வதன் மூலம் குழந்தையின் உடல் நலம் தேற நல்ல வாய்ப்பிருக்கிறது. ஆயுர்வேத மருந்துவமனைகளில் இந்தச் சிகிச்சை முறை மிகவும் பிரசித்தமானது.

Home Page ஆயுர்வேதம்