தேக்கு

Latin Name        – Tectona grandis
Family                    –  Verbenaceae (निर्गुण्डीकुलम्)
English Name   – Teak
Sanskrit Name – शाकः, भूमिसहः

Basia Latifola

இந்தியா முழுவதும் வளரக்கூடிய ஒரு மரம்தான் தேக்குமரம். சுமார் ஓராயிரம் மீட்டர்வரை உயரத்தில் வளரக்கூடிய மரம். இதனுடைய அனைத்துப் பகுதிகளும் மருத்துவகுணம் வாய்ந்தது. இதனுடைய வேர் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீர் தடை நீங்கும், சிறுநீரை தாராளமாக சுரக்கவைத்து வெளியேற்றும். தேக்குமரப்பட்டை துவர்ப்புச் சுவை மற்றும் இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சியானது. மலச்சிக்கலை உண்டாக்கும். குடலில் உள்ள கிருமிகளை அழித்து வெளியேற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது. மூச்சுக்குழாயில் சளி அடைத்திருக்கும் நிலையில் ஏற்படும் இருமல், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளை குணப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் அதிக பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும். உடல் எரிச்சல், சர்க்கரை வியாதி, தோலில் ஏற்படும் குஷ்டம் போன்றவற்றிற்கு ஒரு நல்ல மருந்தாகப் பயன்படும்.
தேக்குமரத்தினுடைய இலைகள் இடித்துப் பிழிந்தெடுத்த சாறு, ஒன்றிரண்டு டீஸ்பூன் சிறிது தேனுடன் கலந்து சாப்பிட நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவை நிறுத்தக்கூடியது. வாய்ப்புண்ணில் இதனுடைய இலைச்சாற்றை பூசுவோமேயானால் புண்கள் விரைவில் ஆறிவிடும். பித்தத்தினால் ஏற்படும் அனைத்து உபாதைகளிலும் இதன் இலைகள் நல்ல பயனைத் தருகின்றன.
தேக்குமரத்தின் பழங்கள் சிறுநீர்பெருக்கி மற்றும் சிறுநீரகக்கற்களை வெளியேற்றும். தோல் அரிப்பில் நல்ல பயன்தரக்கூடியது. தேக்குமரப்பூக்கள் காரம், கசப்புச் சுவையுடையவை. குளிர்ச்சியானவை. இரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீரை நன்றாக வெளியேற்றும். அழற்சியை எதிர்க்கக் கூடியது. பித்த மற்றும் கப உபாதைகளில் நல்ல மருந்தாகப் பயன்படும். உடலில் ஏற்படும் எரிச்சல், இரத்தக்குழாய்களில் ஏற்படும் முறுக்கல் மற்றும் சர்க்கரை உபாதைகளுக்கு இதனுடைய பூக்கள் பயன்படும்.
தேக்குமரத்தினுடைய விதைகள் துவர்ப்புச் சுவையுடையவை. குடலை மிருதுவாக்கும். சிறுநீர்பெறுக்கி. குடலை வழுவழுப்பாக்கும். விதையைப் பொடித்து தேன் அல்லது வெந்நீருடன் சாப்பிட மூட்டுப் பிடிப்பு, இடுப்பு வலி, குழாய்ச் சுருட்டல், தோல் உபாதைகள், அரிப்பு போன்றவை குணமாகும்.
இதனுடைய வைரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது, குளிர்ச்சியானது. அழற்சி மற்றும் உடல் வலி நீக்க்க்கூடியது. குடல் கிருமிகளை வெளியேற்றும். கண்களுக்கு நல்லது. இருமல் உபாதையை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது. மலத்தை இளக்கக்கூடியது. கருப்பையிலிருந்து ஏற்படும் அதிக இரத்தப்போக்கை நிறுத்தக்கூடியது. இதனை சுமார் 15 கிராம் சிராத்தூள் போல செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி ஒரு நாளில் பல தடவை சிறுகச்சிறுகப் பருகி வர இந்த உபாதைகளை நீக்குவதுடன் பித்தகப உபாதைகள் நரம்பு வலி, மூட்டு வலி, கண்ணில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கம், அஜீரணம், குடலில் ஏற்படும் வயிற்று உப்புசம், இருமல், தோல் உபாதைகள், வெண்குஷ்டம், வயிறு எரிச்சல், பெண்களுக்கு ஏற்படும் அதிக மாதவிடாய் உபாதை, வெள்ளைப்படுதல், கரு நிற்காமல் அடிக்கடி ஏற்படும் கரு நழுவுதல், உடல் எரிச்சல், மூலம் மற்றும் இரத்தபேதி உபாதைகளையும் குணப்படுத்தும்.
தேக்குமரத்தினுடைய விதை, பூக்கள் மற்றும் வைரக்கட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமானது  மற்றும் படை, சொரி, சிரங்கு, தொடை இடுக்குகளில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

शाको भूमिरुहः पृष्ठपत्रोदरसुकर्कशः।
महापत्रो रागगर्भो मञ्जीरकः सुदारुकः॥ (शिवदत्तनिघण्टु)
शाको भूमिसहश्च स्थिरकः खरपत्रको महापत्रः।
वरदारुः शबलसारो हलीषको द्वारदारः स्यात्॥ (अभिधानमञ्जरी)
भूमिसहो द्वारदारुर्नरिदारुः खरच्छदः। (भावप्रकाशिका)
भूमिसहो द्वारदारुर्वरदारुः खरच्छदः।
स्थिरकच्छो महापत्रः शाकः सुरभिसारकः॥ (कैय्यदेवनिघण्टु)
शाकः खरच्छदो भूमिसहो दीर्घच्छदो मतः। (मदनपालनिघण्टु)
गर्भसन्धानकृत् शीतो वातपित्तापहः स्थिरः।
शाको विसर्पकुष्ठघ्नो रक्तपित्तप्रसादनः॥ (मदनादिनिघण्टु)
भूमिसहस्तु शिशिरो रक्तपित्तप्रसादनः। (भावप्रकाशिका)
शाकस्तु सारकः प्रोक्तः पित्तदाहश्रमापहः।
कफघ्नं मधुरं रुच्यं कषायं शाकवल्कलम्॥ (राजनिघण्टु)
शाकः कषायः शिशिरो रक्तपित्तप्रसादनः।
कुष्ठश्ळेष्मानिलहरो गर्भसन्धानस्थैर्यकृत्॥
शाकपुष्पं प्रमेहघ्नं रूक्षं तुवरतिक्तकम्।
कफपित्तहरं वातकोपनं विशदं लघु॥ (कैय्यदेवनिघण्टु)
शाकः श्ळेष्मानिलास्रघ्नो गर्भसन्धानदो हिमः। (मदनपालनिघण्टु)
........... शाकश्च क्षतक्षीणकफे हिताः।
रक्तकोपहरा किञ्चित्पित्तळा वातनाशनः॥ (सोढलनिघण्टु)
शाकवृक्षस्तु तुवरः शीतळो रक्तपित्तहा।
गर्भस्थैर्यकरश्चैव गर्भसन्धानकारकः॥
वातपित्तं तथार्शांसि कुष्ठं चातिसृतिं जयेत्।
अस्य पुष्पं तु तुवरं तिक्तं च विशदं लघु॥
वातप्रकोपनं रूक्षं कफपित्तप्रमेहनुत्।
वल्कलं चास्य मधुरं रूक्षं च मधुरं मतम्॥
कफनाशकरं चैव मुनिभिः परिकीर्त्तितम्। (निघण्टुरत्नाकरः)
शर्कराऽऽजपयः पीता शाकवृक्षस्य मूलिका।
मूत्ररोधं तथा दाहं नाशयत्यतिवेगतः॥ (सोढलः)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்