காஞ்சி சங்கராச்சர்ய சுவாமிகள் பங்கேற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் 1 May 2015
ஸ்ரீ காஞ்சி காமகோட்டி பீடம் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மற்றும் பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீக்ஷிதர்கள் தலைமையில் அளிக்கப்பட்ட பூர்ணகும்ப மரியாதையை ஏற்றனர். தேவ சபைக்கு சென்று ஸ்ரீ நடராஜரை தரிசித்தனர். கோயிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தின் ஒரு பகுதியான வர்னக்ரம பாராயணம் 15 நாட்கள் செய்த சலக்க்ஷன கனபாடிகளுக்கு சிறப்பு சன்மானமும், ஆசியும் ஸ்வாமிகளாள் அனுக்ரஹிக்கப்பட்டது.