நன்னைறி வளர இதைக் கவனத்துக

நன்னைறி வளர

இதைக் கவனத்துக்குக் கொண்டு வரக் காரணம் – பெரிய துரதிருஷ்டமாக, தற்காலக் கல்வி முறையில் தெய்வ நம்பிக்கைக்கும், அதோடேயே கை கோத்துக் கொண்டு வரும் தர்மம், நீதி என்கிற நன்னெறி போதனைக்கும் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பதுதான். படிப்புத் திட்டத்திலேயே இவை இடம் பெற்றிருந்தால் இவற்றுக்காக மாணவர்கள் எக்ஸ்ட்ரா பொழுது செலவிட அவசியம் இராது. இவை இல்லாவிடில் எந்தப் படிப்பும் பிரயோஜனமில்லை என்பதால் இவற்றை இப்போது மாணவர்கள் ‘எக்ஸ்ட்ரா’ பொழுதில்தான் ஸம்பாதித்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது. கலாசாலை விடுமுறையான சனி, ஞாயிறுகளிலும், நவராத்ரி-கிறிஸ்துமஸ்-கோடை விடுமுறைகளிலும் மாணவர்கள் இப்படிப்பட்ட விஷயங்கள் கற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வதாக வைத்துக் கொள்ளவேண்டும்.

அவர்கள் கற்றுக்கொள்வது போலவே முக்யமான விஷயம் இப்போது மத போதனையும், நீதி போதனையும் கற்றுக் கொடுப்பதற்கு ஆங்காங்கே ஸங்கங்கள் அமைக்க வேண்டும். பேட்டைவாஸிகளான பெரியவர்கள் ஒன்று சேர்ந்து இந்த அத்யாவசியமான காரியத்தில் ஈடுபட்டு இப்படிப்பட்ட ஸங்கங்களை அமைத்துத்தரவேண்டும். நம்முடைய இளைஞர்கள் உத்தம புருஷர்களாக உருவாவதற்குச் செய்யவேண்டிய அத்யாவசிய பணி. அதை இளைஞர்களும் முற்றிலும் பயன்செய்து கொள்ளவேண்டும்.