குருவாகத் திருமால்

குருவாகத் திருமால்

'நாராயணம், பத்மபுவம்' என்று ஆரம்பித்தே நாம் (ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள்) ப்ரஹ்ம வித்யா ஸ்ம்ப்ரதாயத்திற்கு குரு பரம்பரை சொல்வதால் இங்கே அந்த முதல் குருவான விஷ்ணுவைக் குறிப்பிட்டுச் சொல்வது ரொம்பவும் பொருத்தமாயிருக்கிறது. ஸஹஸ்ர நாமத்தில் அவருக்கு 'குரு' என்றும் 'குரு - தமன்' என்றும் நாமாக்கள் கொடுத்திருக்கிறது. குரு - தமன் என்றால் ஏனைய குருமார்களை விட ச்ரேஷ்டமான உத்தம குரு என்று அர்த்தம். இங்கே (குரு என்பதற்கு) ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது மஹாவிஷ்ணு ஸர்வ வித்யைகளையும் உபதேசிப்பதால் குருவாகிறார் என்று சொல்லி, அதோடு இன்னொரு அர்த்தமாக ஸர்வ ஜீவர்களையும் பிறப்பிப்பவர் என்பதாலும் அவர் குரு என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து பிறப்பைத் தரும் பிதாவை குரு என்று சொல்வதுண்டு என்று புரிந்து கொள்ளலாம். ஸம்ஸ்க்ருத 'லிட்ரேச'ரில் பரிசயமுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் - அப்பாவுக்கு குருப் பட்டம் உண்டு என்பது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அத்வைதமும் அநுக்ரஹ பாவமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பிதா - குரு
Next