ஆசையைக் கட்டுப்படுத்து
இத்திரியங்களினால் நமக்குச் சில ஆசைகள் உண்டாகின்றன. தானாக ஒரு ருசி ஏற்படுகிறது. அதைக்கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்த வேண்டும். பார்க்கவேண்டும் என்ற ஆசையிருக்கிற பார்க்கிறவைகளில் சிலவற்றை நிருத்திக்கொள்ள வேண்டும். தின்னவேண்டுமென்ற ஆசையிருக்கிற வரையில் தின்பதில் பல பதார்த்தங்களை விலக்கி வைக்க வேண்டும். தொடவேண்டும் என்று ஆசையிருக்கிற வரையில் சிலவற்றை தொடாமல் நிறுத்திக் கொள்ளவேண்டும். எதையும் தீண்டவேண்டும், என்ற ஆசையில்லாத நிலமை வந்த காலத்தில் எல்லோரையும் தொடலாம். அதுவரையில் விலக்கப்பட்ட சாமான் வந்தால் நடுங்க வேண்டும். அவ்வளவு பழக்கம் ஏற்படும்படி விலக்க வேண்டும். நல்ல உணர்ச்சி என்பது அவசியம். எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வ்யவஸ்தை இருக்கவேண்டும். மனம் போனபடி நடக்காமல் ஆசையைப் பல வழிகளில் குறைத்துக்கொள்ளவேண்டும். ஆசையேஇல்லாத நிலமை வருவதற்காக இப்படி இருக்கவேண்டும். அதுவே நமது லக்ஷ்யம்.
எவ்வளவு பெரிய சீர்திருத்தக்காரராக இருந்தாலும் சத்துருக்கள் வந்தால் அவர்களிடம் கோபம் வருகிறது. தங்களை அனுசரிக்கிறவர்களிடம் மட்டும் பிரியம் இருக்கிறது. தங்களைவிட பலசாலிகல் வந்தால் பயப்படுகிறார்கள். ஒரு தேள். பாம்பு முதலியவற்றைக் கண்டால் பயப்படுகிறார்கள். எல்லாம் ஒன்று என்ற நிலை வரழேண்டும். எல்லாம் நாம் ஒன்று தோன்றினால் மற்ற வஸ்துக்களைக் கண்டு பயப்படுதல், கோபித்தல் முதலியன இரா நம்மைக் கண்டு நாமே கோபித்துக்கொள்கிறோமோ பயப்படுகிறோமோ இல்லையல்லவா அந்த நிலை வருவதற்குத்தான் நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.